Published:Updated:

`அடுத்த 5 ஆண்டுகளில் UPI பரிவர்த்தனை ₹16,900 கோடியாக உயரும்!' - PwC India அறிக்கை சொல்வது என்ன?

மக்கள் தங்கள் வசதிக்கேற்ப பை நவ் பே லேட்டர் (BNPL), சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (சிபிடிசி) மற்றும் ஆஃப்லைன் பேமெண்ட்கள் போன்றவற்றில் பணபரிமாற்றத்தை செய்து வருகின்றனர்.

`அடுத்த 5 ஆண்டுகளில் UPI பரிவர்த்தனை ₹16,900 கோடியாக உயரும்!' - PwC India அறிக்கை சொல்வது என்ன?

மக்கள் தங்கள் வசதிக்கேற்ப பை நவ் பே லேட்டர் (BNPL), சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (சிபிடிசி) மற்றும் ஆஃப்லைன் பேமெண்ட்கள் போன்றவற்றில் பணபரிமாற்றத்தை செய்து வருகின்றனர்.

Published:Updated:

இந்தியாவில் பணப்பரிமாற்றத்திற்காக வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களுள் ஒன்று UPI (Unified Payment Interface). இந்தியாவில் ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் UPI மூலம் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இந்நிலையில், மக்கள் தங்கள் வசதிக்கேற்ப பை நவ் பே லேட்டர் (BPNL), சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி (சிபிடிசி) மற்றும் ஆஃப்லைன் பேமெண்ட்கள் போன்றவற்றில் பணபரிமாற்றத்தை செய்து வருகின்றனர். இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த பணப்பரிமாற்றத் தளங்கள் அனைத்தும் டிஜிட்டல் பேமென்ட்டுகளின் வளர்ச்சியை அதிகரிக்கும். 

UPI
UPI

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிஎன்பிஎல் மற்றும் டிஜிட்டல் கரன்சி போன்ற புதிய பணம் செலுத்தும் முறைகள் எதிர்காலத்தை வரையறுக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், சில்லறை ஆன்லைன் பரிவர்த்தனை தளமான யுபிஐ,  நாட்டின் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் இடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் என்று PwC India ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

UPI பரிவர்த்தனைகள் 2020-21-ம் ஆண்டில் 22 பில்லியனை (ரூ.2,200 கோடி) எட்டியது; இது 2025-26-ம் ஆண்டில் 169 பில்லியனாக (ரூ.16,900 கோடி) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த ஆண்டு வளர்ச்சி விகிதம் 122 சதவிகிதம் வரை இருக்கும். தற்போது 363 பில்லியனாக (ரூ.36,300 கோடி) மதிப்பிடப்பட்டுள்ள பை நவ் பே லேட்டர், 2025-26-ம் ஆண்டின் இறுதியில் 3,191 பில்லியனை (ரூ.3,19,100 கோடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism