Published:Updated:

விலகும் ராகுல்... பஜாஜ் நிறுவனத்தில் மாறும் தலைமை! அடுத்து என்ன?

ராகுல் பஜாஜ்
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் பஜாஜ்

R A H U L B A J A J

விலகும் ராகுல்... பஜாஜ் நிறுவனத்தில் மாறும் தலைமை! அடுத்து என்ன?

R A H U L B A J A J

Published:Updated:
ராகுல் பஜாஜ்
பிரீமியம் ஸ்டோரி
ராகுல் பஜாஜ்

பஜாஜ் நிறுவனத்தில் கடந்த 50 ஆண்டுகளாகத் தலைமைப் பொறுப்பில் இருந்த ராகுல் பஜாஜ், கடந்த ஏப்ரல் 30-ம் தேதியுடன் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். புதிய தலைவராக நீரஜ் பஜாஜ் நியமிக்கப்பட்டார்.

வயது காரணமாக...

ராகுல் பஜாஜுக்கு அடுத்த மாதத்தில் 83 வயது முடிவடைகிறது. வயதின் காரணமாக விலகுகிறார் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 1970-ம் ஆண்டு இயக்குநர் குழுவில் நியமனம் செய்யப்பட்டார் ராகுல். அடுத்த 50 ஆண்டுகளில் பஜாஜ் ஆட்டோவின் வளர்ச்சிக்கு முக்கியமான பங்கை வகித்தார். ‘ஹமாரா பஜாஜ்’ என்னும் விளம்பரம் மூலம் இந்தியா முழுக்க பஜாஜ் ஆட்டோவைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.

ராகுல் பஜாஜ், டெல்லியில் உள்ள செயின் ஸ்டீபன் கல்லூரியில் படித்தார். ஹார்வேர் கல்லூரியில் நிர்வாகம் படித்த பிறகு, குடும்ப நிறுவனமான பஜாஜ் ஆட்டோவில் இணைந்தார். குடும்ப நிறுவனத்தில் இணைந்த பிறகு, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இதர பிரிவுகளில் களம் இறங்கியது. சிமென்ட், எலெக்ட்ரி கல் அப்ளையன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளை உருவாக்கினார்.

ராகுல் பஜாஜ்
ராகுல் பஜாஜ்

விமர்சனங்களுக்கு அஞ்சாதவர்...

சடக் ஸ்கூட்டர் சந்தையில் இருந்த போது லைசென்ஸ் ராஜ் இருந்தது. அதாவது, எவ்வளவு வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைக் கூட அரசு முடிவு செய்யும். அந்த சமயத்தில். முன்பதிவு செய்துவிட்டு 10 ஆண்டுகள்கூட வாடிக்கை யாளர்கள் காத்திருந்தனர். இந்தச் சூழலை எதிர்த்து அப்போதே குரல் கொடுத்தார் ராகுல் பஜாஜ்.

1991-க்குப் பிறகு ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்தது. அந்த சமயத்தில் ஸ்கூட்டர் சந்தையில் 60% வரை பஜாஜ் இருந்தது. அதைத் தொடர்ந்து மோட்டர் சைக்கிள்கள் வந்தபோது பல்சரை முன்னிறுத்தியது பஜாஜ் நிறுவனம்.

ஆட்சியாளர்களை அஞ்சாமல் விமர்சித்த சில தொழிலதிபர்களில் ராகுல் பஜாஜும் ஒருவர். 2019-ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக அரசை விமர்சித்தார்.

1990-களில் கார் உற்பத்திக்கு அனுமதி தரப்பட்டபின் வெளிநாட்டு நிறுவனங்கள் பல, இந்தியாவில் கார் தயாரிக்கும் ஆலையைத் தொடங்கின. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துக்கும் அந்தத் திட்டம் இருந்தது. ஆனால், அந்தத் திட்டம் வெற்றியடைய வில்லை. ஒருவேளை, அப்போது கார் தயாரிக்கத் தொடங்கியிருந்தால் பஜாஜ் ஆட்டோ இன்னும் பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கும்.

அந்தக் காலத்தில் காருக்கான வாய்ப்பைத் தவறவிட்டிருந்தாலும் தற்போது இ-ஸ்கூட்டர் சந்தையில் களம் இறங்கியிருக்கிறது பஜாஜ் ஆட்டோ. ஒரு காலத்தில் விற்பனை யில் சாதித்த சடக் பிராண்ட் மூலமாகவே இ - ஸ்கூட்டர் சந்தையில் களம் இறங்கியிருக்கிறது.

தலைமையேற்கும் நீரஜ் பஜாஜ்...

ராகுல் பஜாஜின் சகோதரர். 35 ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் குழுமத்தில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்து வந்திருக் கிறார். குழும நிறுவனங்களின் இயக்குநர் பொறுப்புகள், அறக் கட்டளைகளைக் கவனிப்பது என பல முக்கியப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். இவரும் ஹார்வேர்டு பிசினஸ் கல்லூரியில் எம்.பி.ஏ படித்தவர். இந்திய டேபிள் டென்னிஸ் அணிக்காக விளை யாடியவர். தற்போது இயக்குநராக இருக்கும் இவர் இயக்குநர் குழுவின் தலைவராகப் பொறுபேற்றிருக்கிறார்.

ராகுல் பஜாஜின் மகன்களில் ஒருவரான ராஜீவ் பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருகிறார். ராஜீவின் நிர்வாகத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் என எதிர்பார்க்கலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism