Published:Updated:

ஆகாசா: ஏர்லைன்ஸ் பிசினஸ் தொடங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா; வானம் வசப்படுமா?

Flight (Representational Image) ( Image by RENE RAUSCHENBERGER from Pixabay )

முதல்முறையாக ஒரு புதிய விமான சேவை வழங்கும் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இதற்கு `ஆகாசா' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.

ஆகாசா: ஏர்லைன்ஸ் பிசினஸ் தொடங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா; வானம் வசப்படுமா?

முதல்முறையாக ஒரு புதிய விமான சேவை வழங்கும் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. இதற்கு `ஆகாசா' எனப் பெயர் சூட்டியிருக்கிறார்.

Published:Updated:
Flight (Representational Image) ( Image by RENE RAUSCHENBERGER from Pixabay )

`இந்தியாவின் வாரன் பஃபெட்' என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் விமான நிறுவனத்தை ஆரம்பிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விமான போக்குவரத்து அபிரிதமான வளர்ச்சியை அடையும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை அவர் கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக முதல்முறையாக ஒரு புதிய விமான சேவை வழங்கும் நிறுவனத்தை அவர் தொடங்கியிருக்கிறார். இந்தப் புதிய விமான சேவைக்கு `ஆகாசா' என்று பெயர் சூட்டியிருக்கிறார்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

இன்னும் நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கும் 70 விமானங்களைத் தனது நிறுவனம் சார்பாக இயக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தில் 30 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட இருக்கிறது (இந்திய மதிப்பில் 250 கோடி.) இந்த நிறுவனத்தில் ராகேஷ் 40 சதவிகித முதலீட்டை மேற்கொள்கிறார். விமான சேவைகள் தொடங்குவதற்கு விமான அமைச்சகத்திடம் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் இதற்கான அனுமதி இன்னும் 15 நாள்களில் கிடைத்துவிடும் என்று ராகேஷ் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வருட காலத்தில் முதல் விமானம் பறக்கத் தொடங்கிவிடுமாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவில் விமான சேவை நடத்துவது என்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கிறது. கடந்த காலங்களில் நமது நாட்டில் பல விமான நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும் மிகப்பெரிய நஷ்டம் காரணமாகப் பல நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன. மதுபான உற்பத்தியில் ஜாம்பவானான விஜய் மல்லையா கிங்பிஷர் விமான சேவை நிறுவனத்தை ஆரம்பித்த பிறகுதான் மிகப் பெரிய கடன் நெருக்கடியில் சிக்கி இந்தியாவை விட்டு பறந்துவிட்டார். அந்நிறுவனமும் மூடப்பட்டது.

மேலும் நமது நாட்டின் முன்னணி தனியார் விமான நிறுவனமாக இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டம் காரணமாக 2019 -ம் ஆண்டு தமது சேவையை நிறுத்தியது. தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளிநாட்டு மூலதனம் மூலமாக மீண்டும் செயல்பட இருக்கிறது. அரசுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனமும் கடுமையான நஷ்டத்தில் உள்ளது.

Travel - Representational Image
Travel - Representational Image
Image by Rudy and Peter Skitterians from Pixabay

அதனால் ராகேஷின் இந்த முடிவு துணிச்சலான முடிவாக பார்க்கப்படுகிறது. ஆகாசா முதற்கட்டமாக மிகக்குறைந்த கட்டணத்தில் விமான சேவைகளை வழங்க இருக்கிறது. மிகக்குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தது டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆகும்.

இதுபோன்ற குறைந்த கட்டண சேவை வழங்கும் விமானங்கள் குறைந்த அளவு எண்ணிக்கையிலான பயணியர் இருக்கைகளை கொண்டிருக்கும். ஒரு விமானத்தில் சுமார் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், பெரிய விமான நிலையங்களுக்கு சேவைகள் அளிக்கும்போது அதிக வரியை விமான நிலையங்களுக்கு வழங்க வேண்டியது இருக்கும்.

அதனால் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் டயர் 2 சிட்டி என்று அழைக்கப்படும் நகரங்களுக்கு இடையே இயக்கப்படும். இதன் காரணமாக வரி சேமிக்கப்பட்டு குறைந்த விலையில் விமான சேவைகள் வழங்க முடியும். மேலும், விமானத்தில் பலவித விளம்பரங்கள் வைக்கப்பட்டு அதிலிருந்து வருமானம் பார்க்கப்படும். விமானத்தில் எள் முனை அளவு கூட வீணடிக்காமல் அதிக இருக்கைகள் போடப்பட்டு இயக்கப்படும். இதுபோன்ற காரணங்களால் இந்த வகை விமானங்களில் பயணக் கட்டணம் மிகக் குறைவாக இருக்கும்.

Air lines (Representational Image)
Air lines (Representational Image)
Image by Dominic Wunderlich from Pixabay

இந்த வகை விமானங்களில் முன்னோடியான டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தை அதன் நிறுவனர் கேப்டன் கோபிநாத் எப்படி இயக்கினார் என்பதை நடிகர் சூர்யா நடித்த `சூரரைப் போற்று' மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும்.

தற்போது இந்திய விமான சேவைகளைப் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களே வழங்கி வருகின்றன. இதற்கு மாற்றாக ராகேஷ் ஆரம்பிக்கும் இந்தப் புதிய விமான சேவை வெற்றி பெற்றால் பல இந்தியர்களுக்கு விமான சேவையை நடத்துவதற்கு உந்து சக்தியைக் கொடுக்கும். ராகேஷ் தமது நீண்ட முதலீட்டு வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, நிச்சயம் இந்த நிறுவனத்தை சிறப்பாகக் கையாள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.