Published:Updated:

ஜி.டி.பி வளர்ச்சி... குறைக்கும் ரேட்டிங் நிறுவனங்கள்..! - கவனத்தில்கொள்ளுமா மத்திய அரசு?

ஜி.டி.பி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜி.டி.பி

ரேட்டிங் நிறுவனங்களின் எச்சரிக்கையை கவனத்தில்கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுப்பதன் மூலம் பொருளாதாரச் சரிவை மத்திய அரசால் நிறுத்த முடியும்!

ம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாகவே மெள்ள மெள்ளக் குறைந்துவந்த நிலையில், இடியாக வந்து விழுந்தது கொரோனாநோய்ப் பரவல்.

இதனால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் இயங்கும் ரேட்டிங் நிறுவனங்கள் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த ரேட்டிங்கைக் குறைக்கத் தொடங்கியிருக்கின்றன.

ஜி.டி.பி
ஜி.டி.பி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதலில் மூடீஸ், அடுத்து எஸ்&பி..!

கடந்த சில நாள்களில் மூன்று ரேட்டிங் நிறுவனங்கள் நமது பொருளாதார வளர்ச்சி குறித்த ரேட்டிங்கைக் குறைத்துள்ளன. முதலில் மூடீஸ் நிறுவனம் நமது பொருளாதார வளர்ச்சியை `BBB2’-விலிருந்து `BBB3’-ஆகக் குறைத்தது. பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருப்பது, நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பதுடன் நிதித்துறையில் ரிஸ்க்குகள் அதிகரிப்பது ஆகிய காரணங்களை வைத்து மூடிஸ் நிறுவனம் நமது பொருளாதார வளர்ச்சி குறித்த ரேட்டிங்கைத் தரமிறக்கம் செய்தது. `இந்தியப் பொருளாதார வளர்ச்சி இனி ‘நெகட்டிவ்’-ஆக இருக்கும்’ என்று சொன்னது மூடீஸ்.

மூடீஸைத் தொடர்ந்து தற்போது எஸ்&பி நிறுவனம், நமது நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு `BBB-’ என்ற ரேட்டிங்கையும், குறுகியகாலப் பொருளாதார வளர்ச்சிக்கு ‘A-3’ என்ற ரேட்டிங்கையும் தந்திருக்கிறது. `சராசரியைவிடக் கொஞ்சம் அதிகமான ஜி.டி.பி., உலக நாடுகளில் நல்ல பெயர், உறுதியான நிதிக்கொள்கைகளை உருவாக்குவதில் காட்டும் ஆர்வம், வலுவான ஜனநாயக அமைப்பு ஆகியவை இந்தியாவில் பயமில்லாமல் முதலீடு செய்வதற்கு முக்கியமான அம்சங்களாக உள்ளன’ என்று சொல்லியிருக்கும் எஸ்&பி நிறுவனம், நமது சில பலவீனங்களையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. தனிநபர் சராசரி வருமானம் மிகவும் குறைவாக இருப்பது, நிதிப் பற்றாக்குறை அதிகரித்துவருவதால் அரசின் கடன் அதிகரிப்பது ஆகிய காரணங்கள் நமது பொருளாதார வளர்ச்சியைக் குறைப்பதாக எஸ்&பி சொல்லியிருக்கிறது. ஆனால், மூடீஸைப்போல இல்லாமல், நமது பொருளாதார வளர்ச்சி இனி ‘ஸ்டேபிள்’-ஆக அதாவது, ‘நிலையாக’ இருக்கும் என்று சொல்லியிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்னொரு முக்கியமான ரேட்டிங் நிறுவனமான ஃபிட்ச் நிறுவனமும் நமது ஜி.டி.பி.க்கு `BBB-’ என்ற ரேட்டிங்கைத் தந்திருந்தாலும், எதிர்காலத்தில் நம் பொருளாதார வளர்ச்சி ‘நிலையாக’வே இருக்கும் என்று சொல்லியிருப்பது ஆறுதலான விஷயம்.

ஜி.டி.பி
ஜி.டி.பி

2022-ல் 9.5% வளர்ச்சி..!

`குறுகியகாலத்தில் நம் பொருளாதார வளர்ச்சி மோசமாக இருந்தாலும், நீண்டகாலத்தில் நல்ல வளர்ச்சியையே காணும்’ என்று சொல்லியிருக்கின்றன ஃபிட்ச் மற்றும் எஸ்&பி ரேட்டிங் நிறுவனங்கள். `கொரோனா பாதிப்பால், 2021-ம் ஆண்டில் நமது ஜி.டி.பி வளர்ச்சி 5 சதவிகிதமாக மட்டுமே இருக்கும்’ என்று ஃபிட்ச் நிறுவனம் சொன்னாலும், `நிதித்துறையின் ஆரோக்கியம் மேலும் மோசமடைவதைத் தடுக்கும்பட்சத்தில், நமது ஜி.டி.பி வளர்ச்சி வரும் 2022-ல் 9.5 சதவிகிதமாக இருக்கும்’ என்று சொல்லியிருக்கிறது. ஃபிட்ச் நிறுவனம் மட்டுமல்ல, எஸ்&பி நிறுவனமும் `2021-22-ல் நமது ஜி.டி.பி வளர்ச்சி 8.5 சதவிகிதமாக இருக்கும்’ என்று கணித்திருக்கிறது.

முதலில் தடுப்பு, அடுத்து வளர்ச்சி...

நமது பொருளாதார வளர்ச்சியில் மூடீஸ் நிறுவனத்தின் கருத்தை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. எஸ்&பி நிறுவனம் இந்தியப் பொருளாதார வளர்ச்சியைப் புரிந்துகொண்டு, எதிர்கால கணிப்பை வெளியிட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது.

பொதுவாக, ரேட்டிங் நிறுவனங்களின் நடவடிக்கைகளை இரண்டுவிதமாகப் பார்க்கலாம். ஒன்று, இந்த நிறுவனங்கள் சொல்வதெல்லாம் அவற்றின் தனிப்பட்ட அனுமானம்தான். அவற்றை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்பது. இரண்டாவது, இந்த அனுமானங்களைக்கூட ஒதுக்கிவைத்துவிடாமல், எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு செயல்படுவது. மத்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இந்த இரண்டு அணுகுமுறைகளில் இரண்டாவது அணுகுமுறையைப் பின்பற்றுவதே புத்திசாலித்தனம். சர்வதேச ரேட்டிங் நிறுவனங்கள் நமது பொருளாதாரம் குறித்து என்னென்ன எச்சரிக்கைகளை விடுக்கின்றன, இந்த எச்சரிக்கைகளுக்கு எப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ரிஸ்க்கைக் குறைக்க முடியும் என்பதை விரிவாக விவாதித்து, அதற்கேற்ப செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போதைய நிலையில், கொரோனாநோய்ப் பரவல் காரணமாக வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியே பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும்போது, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிப்படைந்திருப்பதை மறுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், இந்த ரேட்டிங் நிறுவனங்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கை எடுப்பதன் மூலம் பொருளாதாரச் சரிவை நமது மத்திய அரசால் நிறுத்த முடியும். இந்த முக்கியமான பணி நிறைவேறிய பிறகு பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தொடங்கலாம்.

ஜி.டி.பி
ஜி.டி.பி

கொரோனாநோய்த் தொற்றுக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க உலகமே பாடுபட்டுவருகிறது. அப்படிப்பட்ட மருந்து இன்னும் சில மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்துவிட்டால், இப்போதுள்ள அவநம்பிக்கை அனைத்தும் காணாமலே போய்விடும்.

வளர்ச்சிக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் நம் நாடு முன்னணியில் இருக்கும் நிலையில், மத்திய அரசாங்கம் இன்னும் துடிப்புடன் செயல்பட்டால், பிரகாசமான எதிர்காலத்தை அடைய முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. நாம் மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்போம் என்று நம்பிக்கைகொள்வோம்!