Published:Updated:

நீங்கள் சந்திக்க நினைக்கும் பிசினஸ் பிரபலம் யார்?

பிசினஸ் பிரபலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் பிரபலங்கள்

சோஷியல் மீடியா

நீங்கள் சந்திக்க நினைக்கும் பிசினஸ் பிரபலம் யார்?

சோஷியல் மீடியா

Published:Updated:
பிசினஸ் பிரபலங்கள்
பிரீமியம் ஸ்டோரி
பிசினஸ் பிரபலங்கள்

''நீங்கள் சந்தித்ததில் முக்கியமான அல்லது சந்திக்க நினைக்கும் பிசினஸ் பிரபலம் யார், அதற்கான காரணம் என்ன?” என நாணயம் விகடன் ஃபேஸ்புக் (https://www.facebook.com/NaanayamVikatan) மற்றும் ட்விட்டர் (https://twitter.com/NaanayamVikatan) பக்கங்களில் கேட்டிருந்தோம். இதற்கு வாசகர்கள் அளித்த கமென்ட்ஸ் இதோ...

“திருவாளர் முகேஷ் அம்பானி. நான் செய்யும் சிறுதொழிலில் வெற்றி பெறுவது எப்படி என்று கேட்கவும், என் சிறு தொழிலை விரிவுபடுத்த மூலதனம் தேவை, அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்க வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார். இதுதான் பாசிட்டிவ் அப்ரோச்...

“திரு.ஶ்ரீதர் வேம்பு (Zoho) பல ஆயிரம் கோடிகளைச் சம்பாதித்தும் எளிய வாழ்க்கை எவ்வாறு சாத்தியம் எனக் கேட்பதற்கு...”னு கமென்ட் பண்ணிருக்காங்க மேரி. வெகு சிறப்பு!

“மற்றவர்களால் நடத்த முடியாத ஸ்டீல் தொழிற்சாலைகளை மட்டுமே வாங்கி வெற்றி கரமாக நடத்திக்காட்டிய, ஒரு காலத்தில் முதல் 10 உலக பணக்காரர் பட்டியலில் இருந்த லட்சுமி மிட்டலைச் சந்திக்க ஆசை...”னு சொல்லிருக்காரு அப்துல் ரஹ்மான். சூப்பர்!

“வி.கே.டி.பாலனை நேரில் சந்திக்க விரும்பு கிறேன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்ற வாக்கியத்தை அவரது வாழ்க்கை வரலாற்றில் கண்டேன். எனது உள்ளம் தொட்ட தொழிலதிபர் இவரே...”னு சொல்லிருக்காரு ஹரி பிரசாத். விரைவில் சந்திக்க வாழ்த்துகள் ஹரி..!

ஆனந்த் மஹிந்த்ரா, முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா
ஆனந்த் மஹிந்த்ரா, முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா

“ஆனந்த் மஹிந்த்ரா அவர்களைச் சந்திக்க விருப்பம். ஜீப் வாகனத்தை மட்டுமே தயாரித்த மஹிந்திரா குழுமம், முன்னணி ஆட்டோ மொபைல் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், ரிசார்ட் என அனைத்துத் துறைகளிலும் கால் பதிக்கக் காரணமானவர்” என கமென்ட் செய்திருக்கிறார் கோபி வெங்கட். அருமை!

“ஆசிரியர் வீரமணி, தோழர் திருமுருகன் காந்தி. இவர்கள்தான் எந்தவித முதலீடும் இல்லாமல் உயர்ந்தவர்கள்...”னு சொல்லிருக் காரு கண்ணன். அப்டியா..?

“விஜய் மல்லையாவச் சந்தித்து இவ்வளவு கடன் வாங்கிட்டு, எப்படி சந்தோஷமா ஊர் சுத்துறதுன்னு கேக்கணும். இவருக்கு லோன் கொடுத்த அந்த மேனேஜரையும் பார்த்து நாலு கேள்வி கேக்கணும்னு” ஆதங்கத்துல கொந்தளிச்சிருக்காரு விஜய்குமார். பொறுமைஜி, பொறுமை!

“நான் சந்திக்க நினைக்கும் பிசினஸ்மேன் என்று சொல்வதைவிட எனக்குப் பிடித்த பிரபலம் இந்த அஸ்வின்குமார் பிரதர். நேர்ல பாக்கணும் பேசணும்னு நான் நாலு வருஷமா நினைச்சிட்டு இருக்கேன். வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா மீட் பண்ணுவேன்”னு சொல்லிருக்காரு மாரிமுத்து. அஸ்வின் குமாரா..!?

“எனக்குள்ளே இருக்கும் தொழில் அதிபரை நான் சந்திக்க விரும்புகிறேன்”னு நச் கமென்ட் பண்ணிருக்காரு நட்ராஜன். அட்ரா சக்கை... அட்ரா சக்கை!

“பிரதமர் நரேந்திர மோடி. காரணம் இந்தியா (INDIA PRIVATE LIMITED)”னு நையாண்டி கமென்ட் பண்ணிருக்காரு நேரு சுப்பிரமணியன். என்ன ஒரு வில்லத்தனம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism