Published:Updated:

பத்திரப்பதிவுக்கு புதிய நெறிமுறை: உங்கள் மொபைல் எண்ணை கட்டாயம் சரிபார்த்து விடுங்கள்!

பட்டா மாறுதம் பத்திரம்
பட்டா மாறுதம் பத்திரம் ( விகடன் )

பட்டா மாறுதலுக்கு சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் எண்களை உள்ளீடு செய்யாமல் ஆவண எழுத்தர்கள், தங்களின் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து...

முன்பெல்லாம் ஒரு நிலத்தை வாங்கும் போது பத்திரப் பதிவு தனியாகவும், பட்டா மாறுதல் தனியாகவும் செய்ய வேண்டி இருந்தது.

ஆனால் தற்போது பத்திரப்பதிவின்போது தானாக பட்டா மாறுதல் ஏற்படுவதற்கான வழிமுறையை அரசு செய்துள்ளது. இந்த நடைமுறை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, பத்திரப்பதிவின்போது, சொத்து உரிமையாளரின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண் ஆகியவற்றை பதிவு செய்வது கட்டாயம் என பதிவுத்துறை ஐ.ஜி சிவன் அருள் அனைத்து சார்பதிவாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

சிவன் அருள்
சிவன் அருள்

இதுகுறித்து அவர், ``ஒரு சொத்தின் ஆவணப்பதிவின்போது ஆவணதாரர்களின் செல்போன் எண்ணை அளிக்காமல் வேறு நபர்களின் செல்போன் எண்ணை அளித்திருப்பதும், ஒரே மொபைல் எண் பல்வேறு ஆவணங்களுக்கு உள்ளீடு செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி இந்நிலை தொடராமல் இருப்பதற்காக, ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணையும், பட்டா மாறுதலுக்கான ஆவண விவரங்களை ஆன்லைனில் உள்ளீடு செய்யும்போது தங்களின் சரியான செல்போன் எண்ணை பொதுமக்கள் அளிக்க சார்பதிவாளர்கள் அறிவுறுத்த வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் எண்களை உள்ளீடு செய்யாமல் ஆவண எழுத்தர்கள், தங்களின் செல்போன் எண்ணை உள்ளீடு செய்து ஆவணப்பதிவிற்கு வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆவண எழுத்தர் விபரத்தை மாவட்டப் பதிவாளர் மற்றும் துணைப்பதிவுத்துறைக்கு சார்பதிவாளர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும், அதிகமாக பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் ஆவண எழுத்தர் அல்லது அவரின் அலுவலகத்தில் வேலை செய்யும் நபருடையதாக இருப்பின் ஆவண எழுத்தர் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மனை
மனை
vikatan
பத்திரப்பதிவு... சந்தேகங்களும் தீர்வுகளும்! - விரிவான விளக்கம்

இந்த உத்தரவின் காரணமாக, பட்டா மாறுதல் விவகாரங்களில் நடந்து வரும் லஞ்ச லாவண்யங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு