Published:Updated:

ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம்... தீபாவளிக்குள் 5ஜி சேவை..!

ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம்

ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம்... தீபாவளிக்குள் 5ஜி சேவை..!

ரிலையன்ஸ்

Published:Updated:
ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம்
பிரீமியம் ஸ்டோரி
ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45-வது வருடாந்தரப் பொதுக்கூட்டம் (AGM) அண்மையில் நடைபெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் அந்த நிறுவனத் தின் வாரிசுகளுக்கு எவ்வாறு பிரித்துத் தரப்போகிறது என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்லப்பட்டது.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

முகேஷ் அம்பானிக்கு தற்போது 65 வயதாகிறது. அவருக்கு ஆகாஷ், ஆனந்த் என்ற இரண்டு மகன்களும் இஷா என்ற மகளும் உள்ளனர்.

பொதுவாக, பெரிய நிறுவனங்களில் சொத்து களைப் பிரிக்கும்போது பிரச்னைகள் ஏற்படுவது வாடிக்கையாகும். ரிலை யன்ஸ் நிறுவனத்திலும் முன்னதாக முகேஷ் மற்றும் அவரின் சகோதரர் அனில் அம்பானி இடையே சொத்து கள் பிரிக்கப்படும்போது சர்ச்சைகள் ஏற்படவே செய்தன. அந்த மாதிரி எந்த சச்சரவும் தற்போது வரக் கூடாது என்பதற்காக முகேஷ் அம்பானி தமது நிறுவனத்தின் சொத்துகளை முறையாகப் பிரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பது வரவேற் கத்தகுந்த விஷயம் எனப் பல வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் மற்றும் மகள் இஷா ஆகியோருக்கு டெலிகாம் மற்றும் ரீடெய்ல் நிறுவனத்தில் உயர் பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டம்... தீபாவளிக்குள் 
5ஜி சேவை..!

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை நிறுவனத்தின் சேர்மனாக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த்துக்கு (Anat) எரிபொருள் மற்றும் எனர்ஜி தொடர்புடைய நிறுவனங்களின் உயர் பொறுப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

ஆண்டு பொதுக்கூட்டத் தில் இஷா அம்பானி கலந்து கொண்டு தொலைத் தொடர்புத்துறை சார்ந்த செயல்பாடுகளை முதலீட் டாளர்களுக்கு விளக்கினார். தொலைத்தொடர்புத் துறையில் வரும் தீபாவளிக்குள் நமது நாட்டில் உள்ள மெட்ரோ நகரங்களான சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை நகரங்களிலும், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அனைத்து நகரங்களிலும் வேகமான 5G சேவைகள் அறிமுகப் படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவைகள் முழுமை யாகக் கிடைக்கும்போது அதிநவீன மற்றும் விரைவான இன்டர்நெட் சேவைகள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். நாடு முழுவதும் சிறப்பான 5G சேவைகள் வழங்க இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடியை ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்யும். மேலும், ஜியோ ஏர்பைபர் ஹாட்ஸ்பாட் அறிமுகப் படுத்தப்பட்டு விரைவான பிராட்பேண்ட் சேவைகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், ரீடெய்ல் துறையில் ரிலையன்ஸ் ஜியோ மார்ட்டில் வாட்ஸ்அப் வசதியுடன் எளிமையான வகையில் ஷாப்பிங் செய்யும் வசதிகள் மேம்படுத்தப் படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் தற்போது வீட்டுக்கே பொருள்களைக் கொண்டுசேர்க்கும் ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு பெருத்த வரவேற்பு உள்ளது. தற்போது ஜியோ மார்ட் இந்தச் சேவைகளை மேலும் நவீனபடுத்துவது இந்தத் துறையில் அதிக வருமானத்தைப் பெற்றுத் தரும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்ற காலாண்டு முடிவுகள் வெளியிட்டபோது அந்த நிறுவனம் தமது முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.8 டிவிடெண்ட் வழங்குவதற்கு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், இப்போது நடந்த பொதுக் கூட்டத்தில் டிவிடெண்ட் தொகையை முதலீட்டாளர் களுக்கு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் காரணமாக ரிலையன்ஸ் பங்கு வைத்திருக்கும் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் ஒரு பங்குக்கு ரூ.8 உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

நமது நாட்டில் முதல் முறையாக ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்ற அன்றே மிக விரைவாக முதலீட் டாளர்களுக்கு டிவிடெண்ட் தொகை அளிக்கப் பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 33 லட்சம் முதலீட்டாளர்கள் வைத்து இருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சிறு முதலீட்டாளர்கள் ஆவார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் இந்தப் பணம் உடனடியாக வழங்கப் பட்டுள்ளது.

இவ்வாறாக பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றதன் காரணமாக அந்த நிறுவனத்தின் பங்குகள் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு 2% விலை ஏற்றம் கண்டது.