Published:Updated:

ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரானார் ஆகாஷ் அம்பானி!

ஆகாஷ் அம்பானி,  முகேஷ் அம்பானி
பிரீமியம் ஸ்டோரி
ஆகாஷ் அம்பானி, முகேஷ் அம்பானி

புதிய வரவு

ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரானார் ஆகாஷ் அம்பானி!

புதிய வரவு

Published:Updated:
ஆகாஷ் அம்பானி,  முகேஷ் அம்பானி
பிரீமியம் ஸ்டோரி
ஆகாஷ் அம்பானி, முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, கிரிக்கெட், கால்பந்து விளையாட்டின் தீவிரமான ரசிகர்!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து விலகிய முகேஷ் அம்பானி, அந்த நிறுவனத்தின் தலைவராக அவரின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியைக் கொண்டுவந்திருக்கிறார். இத்தனை நாளாக பெரிய அளவில் மீடியா வெளிச்சத்துக்கு வராமல் இருந்த ஆகாஷ் அம்பானி, ஜியோ வுக்குத் தலைவரானபின், அனைவரின் கவனமும் அவர் மீது குவிந்திருக்கிறது.

முகேஷ் அம்பானி - நீட்டா தம்பதிக்கு முதல் பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவர்தான் ஆகாஷ். பிரௌன் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் மேல் படிப்பை முடித்த ஆகாஷ் அம்பானிக்கு கிரிக்கெட் என்றால் உயிர். மும்பை இந்தியன் கிரிக்கெட் அணியின் இணை உரிமையாளரான இவர், 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் சுனில் கவாஸ்கர் பயன்படுத்திய கிரிக்கெட் மட்டையைப் பத்திரமாக பாதுகாத்து வருகிறார். கால்பந்து விளையாட்டின் மீதும் இவருக்குக் கொள்ளை பிரியம். ஆர்சனல் கால்பந்து குழுவின் தீவிர விசிறி இவர்.

2014-ல் ஜியோவின் இயக்குநரான ஆகாஷ், அந்த நிறுவனம் தொடர்பான திட்டங்களைத் தீட்டுவதில் முக்கியமான பங்காற்றி இருக்கிறார். 2019 முதல் ஜியோவில் முழு நேர இயக்குநராகவும் இருக்கிறார்.

ஆகாஷ் அம்பானி,  முகேஷ் அம்பானி
ஆகாஷ் அம்பானி, முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத்தை நடத்துவதில் முகேஷ் அம்பானி காட்டும் அக்கறையும் ஒழுங்கையும் அச்சு பிசகாமல் காட்டக்கூடியவர் ஆகாஷ். எந்தவொரு மீட்டிங் என்றாலும் நிமிஷம் தவற மாட்டார். முகேஷைப் போலவே இவரும் மிகவும் பணிவானவர். குழுப் பணியை நிர்வாகிப்பதில் வல்லமை கொண்டவர்.

ஆகாஷ், வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகள் மற்றும் தன் பள்ளிக் காதலி ஸ்லோகா மேத்தாவை 2018-ம் ஆண்டு கரம்பிடித்தார். ஆகாஷ் அம்பானியின் இரண்டு வயது மகனின் பெயர் ப்ரித்வி.

இப்போதே நம்பர் 1 நிறுவனமாக இருக்கும் ஜியோவை ஆகாஷ் அம்பானி இன்னும் பெரி தாக வளர்த்தெடுப்பார் என்று கணிக்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.