Election bannerElection banner
Published:Updated:

`வேற லெவல் பேட்டரி, 2024 டார்கெட்!' - விரைவில் எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் ஆப்பிள்

மின்சார கார்/ Representational Image
மின்சார கார்/ Representational Image

ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிடும், ஸ்மார்ட்போன்களின் விலை அதிகளவில் இருக்கும்போது, மின்சார காரின் விலையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத்தான் இருக்கும் என யோசிக்கத் தோன்றுகிறது!

கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில், லேப்டாப், ஸ்மார்ட் போன் போன்ற தொழில்நுட்பங்களில் முன்னணியில் உள்ள ஆப்பிள் நிறுவனம், வரும் 2024-ம் ஆண்டில் அதிநவீன பேட்டரி தொழில்நுட்பத்துடன் கூடிய முதல் மின்சார காரை அறிமுகப்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிம் குக்
டிம் குக்
Stephen Lam

'புராஜெக்ட் டைட்டன்' என்பது 2014-ம் ஆண்டில் ஆப்பிள் தொடங்கிய மின்சார கார் தயாரிப்பு திட்டமாகும். இந்த மின்சார கார் தயாரிக்கும் திட்டமானது, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருப்பதாகத் தற்போது ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாய்ஸ் கம்யூனிகேஷன் வழியாக காரை ஸ்டார்ட் செய்ய சொன்னதும், ஸ்டார்ட் ஆகக்கூடிய வகையில் ஆப்பிள் மின்சார கார் 'செல்ஃப் டிரைவிங்' ஆப்ஷனை கொண்டிருக்கும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஓ, டிம் குக், "இந்த கார் திட்டத்தைச் செயற்கை நுண்ணறிவின் தாய் திட்டம் என்றும், ஆப்பிளின் கார் வெளிவரும்போது அது முதன்முதலில் ஆப்பிள் போனைப் பார்த்தது போன்ற அனுபவத்தைத் தரும்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் இந்த சவால்களை சமாளிக்குமா டெஸ்லா... எலான் மஸ்க் டவீட்டும், சில சிக்கல்களும்!

ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிடும், ஸ்மார்ட் போன்களின் விலை அதிகளவில் இருக்கும்போது, மின்சார காரின் விலையும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குத்தான் இருக்கும் என யோசிக்கத் தோன்றுகிறது.

பொதுவாக, மின்சார வாகனங்களைப் பொறுத்தவரை பேட்டரிகள்தான் அதிகம் செலவு வைக்கும். ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் மோனோ செல் தொழில்நுட்பம் அதைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம் தயாரிப்புச் செலவு குறையும். தயாரிப்புச் செலவுகள் குறையும் போது, அதன் வெளிப்பாடு மின்சார காரின் சந்தை விலையிலும் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோனோ செல் பேட்டரிகள் நீண்ட தூரம் வரை பயணிக்க உதவி செய்யும் என நிறுவனத்தின் தரப்பில் சொல்லப்படுகிறது.

Tim Cook
Tim Cook

2018-ல் விற்பனைக்கு வந்த அமெரிக்காவின் டெஸ்லா மற்றும் கியா போன்ற கார்களில் ஏற்கெனவே 'செல்ஃப் டிரைவிங்' ஆப்ஷன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிளின் மின்சார கார்கள் விற்பனைக்கு வரும்போது, டெஸ்லா மற்றும் கியா மின்சார கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த அறிவிப்புக்குப் பிறகு, டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை 6.5% வரை குறைந்து வர்த்தகமானது. ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 1.24% வரை அதிகரித்து வர்த்தகமானது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு