Published:Updated:

மத்திய அரசின் அறிவிப்பு... வணிகர்களுக்கான வரப்பிரசாதம்! என்ன நன்மை கிடைக்கும்..?

சில்லறை வணிகம்
பிரீமியம் ஸ்டோரி
சில்லறை வணிகம்

S M E B U S I N E S S

மத்திய அரசின் அறிவிப்பு... வணிகர்களுக்கான வரப்பிரசாதம்! என்ன நன்மை கிடைக்கும்..?

S M E B U S I N E S S

Published:Updated:
சில்லறை வணிகம்
பிரீமியம் ஸ்டோரி
சில்லறை வணிகம்

மளிகைக் கடை சில்லறை மற்றும் மொத்த வியாபாரி கள் அனைவரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் (Micro, Small and Medium Enterprises) வரம்புக்குள் கொண்டு வரப்படுவார் கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் சுமார் 2.5 கோடி வர்த்தகர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் இந்த அறிவிப்பு குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசினோம்.

ஏ.எம்.விக்கிரமராஜா
ஏ.எம்.விக்கிரமராஜா

``கொரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தக் கடுமையான சூழ்நிலையிலிருந்து எங்களை மீட்டெடுக்க மத்திய அரசு செய்த பேருதவியாகவே நாங்கள் இதைக் கருதுகிறோம்.

இந்த அறிவிப்பால் எங்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும்.உதாரணத்துக்கு, எளிதில் கெட்டுப் போகக்கூடிய விவசாய விளை பொருள்களைச் சேமித்து வைக்கும் `குளிர்பதனக் கிடங்குகள்’ பெரும்பாலும் தனியார் வசம் இருக்கின்றன. அதற்கான வாடகைகள் சிறு வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் இல்லை.

தற்போது, எம்.எஸ்.எம்.இ பிரிவுக்குள் சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளைச் சேர்த்திருப்பதால், அரசு தரப்பில் குளிர்சாதன கிடங்குகளை அமைக்கும் வசதிகளை சலுகை அடிப்படையில் எங்களால் கேட்டுப் பெற முடியும். அதேபோல, மின்சாரம், காஸ் சிலிண்டர், குடிநீர் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் கட்டுமானம் உள்ளிட்ட பல விஷயங் களில் இரண்டு மடங்கு தொகையைச் செலவு செய்து வருகிறோம்.

மத்திய அரசின் அறிவிப்பு...
வணிகர்களுக்கான வரப்பிரசாதம்! என்ன நன்மை கிடைக்கும்..?

இந்தச் செலவுகளை நாங்கள் விற்கக்கூடிய பொருள்களின் விலையில்தான் வைத்து விற்கிறோம். ஆனால், இனிவரும் காலங்களில், சலுகைகளை அரசிடமிருந்து பெற முடியும் என்கிறபோது, பொருள்களின் விலையை எங்களால் நிச்சயமாகக் குறைக்க முடியும். நுகர்வோர்களும் இதனால் அதிகம் பலனடைவார்கள்.

தற்போதைய நிலையில், ஒரு மளிகைக் கடையை ஆரம்பிக்க வேண்டுமானால்கூட, கார்ப்பரேஷன், ஜி.எஸ்.டி, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக 13 வகையான லைசென்ஸ்களை அந்தக் கடையின் உரிமையாளர் எடுக்க வேண்டும். இது மிகவும் சிரமமான விஷயம்.

ஒரு கடைக்கு பல லைசென்ஸ் நடைமுறையை மாற்றி, ஒரே ரேஷன் கார்டு திட்டம் போல, ஒரே லைசன்ஸ் என்கிற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் தொழில் தொடங்குவது மிகவும் எளிதாக இருக்கும். மளிகைக் கடை ஆரம்பிக்க நினைப்பவர்கள் எளிதில் தொழில் தொடங்குவார்கள். அதிக தொழில் முனைவோர்கள் உருவாவதால், வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். குறிப்பாக லஞ்சம், ஊழல் குறையும்” என்றார் தெளிவாக.

இந்த அறிவிப்பால் சில்லறை மற்றும் மொத்தத் தொழில் நிறுவனங்களுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism