Published:Updated:

நம் நாட்டில் 10% பணக்காரர்களிடம் 55% சொத்துகள் இருப்பது ஏன்?

பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதாரம்

பொருளாதாரம்

நம் நாட்டில் 10% பணக்காரர்களிடம் 55% சொத்துகள் இருப்பது ஏன்?

பொருளாதாரம்

Published:Updated:
பொருளாதாரம்
பிரீமியம் ஸ்டோரி
பொருளாதாரம்

நமது நாட்டில் உள்ள மொத்தக் கடன் மற்றும் முதலீட்டு அளவுகளைத் தொகுத்து ஆய்வு செய்யும் தேசிய மாதிரி சர்வே 2019-ம் ஆண்டு மேற்கொள்ளப் பட்டது. அந்த சர்வேயின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, நமது நாட்டில் உள்ள மொத்த சொத்துகளின் மதிப்பில் 55.7%, பெரும் செல்வந்தர்களாக இருக்கும் 10 சதவிகிதத்தினரிடம் உள்ளது. மொத்த சொத்துகளின் அளவீடாகக் கையிருப்பில் உள்ள பணம், கட்டடங்கள், விவசாய நிலங்கள், பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மறுபக்கமாக வருமான படிநிலைகளில் கீழ் நிலையில் உள்ள 50% இந்தியர்களிடம் 10 சதவிகிதத்துக்கும் குறைவான சொத்துகள் மட்டுமே உள்ளன.

 நம் நாட்டில் 10% பணக்காரர்களிடம் 55% சொத்துகள் இருப்பது ஏன்?

ஏழை, பணக்காரர் இடையே உள்ள இந்த இடைவெளி அதிகரித்த வண்ணம் உள்ளது என்பதை இந்த சர்வே மூலம் நிருபணமாகி இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இந்த இடைவெளி குறைவாக இருக்கும். அதற்கு நேர்மாறாக வளரும் நாடுகளிலும், ஏழை நாடுகளிலும் இந்த இடைவெளி அதிகமாக இருக்கும்.

இந்த இடைவெளி அதிகரிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக எப்போதும் இருக்காது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதன்மூலம் இந்த இடைவெளியைக் குறைக்க உதவும். வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் இந்த இடைவெளியைக் குறைக்கமுடியும்.

சென்ற இரு ஆண்டுகளில் பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றத்தைக் கண்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் அம்பானி ஆசியப் பணக்காரர்கள் வரிசையில் முன்னணியிலும், அதானி குழுமத்தைச் சேர்ந்த கௌதம் அதானி விரைவாக வளரும் பணக்காரர்களில் உலக அளவில் முன்னணியிலும் இருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் அதிவேகத்தில் அடையும் வளர்ச்சியில் ஆயிரத்தில் ஒரு பங்காவது சாதாரண மக்கள் அடைகிறார்களா என்கிற கேள்விதான் இந்த சர்வே மூலம் எல்லோருக்கும் எழுகிறது.