Published:Updated:

அடேயேப்பா... ஏழே மாதங்களில் ரூ.95,760 கோடி வங்கி மோசடி!

எஸ்.பி.ஐ வங்கியில் அதிகபட்சமாக 2,939 மோசடிகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 225 மோசடிகளும், பேங்க் ஆஃப் பரோடாவில் 180 மோசடிகளும் நடந்துள்ளன.

வங்கி மோசடி
வங்கி மோசடி ( vikatan )

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான 7 மாதங்களில் மொத்தம் ரூ.95,760 கோடி அளவுக்கு வங்கி மோசடி நடந்துள்ளது. இதில் அதிகபட்சமாக, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மட்டும் ரூ.26,757 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது.

ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கி
vikatan

பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு குறித்து தெரிந்துகொள்வதற்காக, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வங்கிக்கடன் பெற்று வாராக்கடனான வங்கிக்கணக்குகளை ஆய்வு செய்யும்படி ரிசர்வ் வங்கி கூறியது. அதன்மூலம், மோசடியாக வாராக்கடன் வைத்துள்ள நிறுவனங்கள் குறித்து தெரியவந்தது. அதிக அளவு மோசடிக்கு உள்ளான வங்கிகளின் பட்டியலில், எஸ்.பி.ஐ வங்கி ரூ.26,757 கோடியுடன் முதலிடத்திலும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.10,821 கோடி அளவுக்கும், பேங்க் ஆஃப் பரோடா ரூ.8273 கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

ஆடம்பர வாழ்க்கை; விலையுயர்ந்த கார்கள்! - கேரள வங்கிகளில் நூதன மோசடி செய்த தாய் - மகன்

எஸ்.பி.ஐ வங்கியில் அதிகபட்சமாக 2939 மோசடிகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 225 மோசடிகளும், பேங்க் ஆஃப் பரோடாவில் 180 மோசடிகளும் நடந்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில், கடந்த நிதியாண்டில் ரூ.10,725 கோடி அளவுக்கு மோசடி நடந்திருக்கிறது. அதற்கும் முந்தைய 2017-18 நிதியாண்டில் ரூ.146 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது.

எஸ்.பி.ஐ வங்கி
எஸ்.பி.ஐ வங்கி
vikatan

இந்த வங்கி மோசடிகள் அனைத்தும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தவையே. தற்போதுதான் கண்டறியப்பட்டு, மோசடி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது, அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.