Published:Updated:

ஊழியர்களுக்கு அள்ளித் தரும் ஐ.டி நிறுவனங்கள்!

ஐ.டி துறை
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி துறை

ஐ.டி துறை

ஊழியர்களுக்கு அள்ளித் தரும் ஐ.டி நிறுவனங்கள்!

ஐ.டி துறை

Published:Updated:
ஐ.டி துறை
பிரீமியம் ஸ்டோரி
ஐ.டி துறை

சமீப காலங்களில் ஐ.டி துறையில் ஒவ்வொரு நிறுவனமும் திறமையான ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்ள போட்டி போட்டுக்கொண்டு ஊதியத்தை அள்ளி வழங்கி வருகிறது. கொரோனா காலத்தில் ஐ.டி துறையின் தேவை பல மடங்கு அதிகரித்தது. ஐ.டி துறையின் பங்களிப்பு மனித குலத்துக்குத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. அதே சமயம், ஐ.டி நிறுவனங் களுக்குள் போட்டியும் அதிகரித்துள்ளது. புதுப் புது ஐ.டி நிறுவனங்கள் முளைத்துவரும் சூழலில் திறமையான ஊழியர்களை இழப்பது நிறுவனங்களுக்குப் பெரிய இழப்பாகப் பார்க்கப்படுகிறது.

கொரோனாவுக்குப் பிறகு, ஐ.டி ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கலாம் என்ற சூழல் உருவானது. இது பெரும்பான்மை யானவர்களுக்கு வசதியாக மாறியது. கொரோனா ஊரடங்குகள் முடிவுக்கு வந்த பிறகு, பல ஐ.டி ஊழியர்கள் வேலையிலிருந்து வெளியேறுவதும், நிறுவனங்கள் மாறுவதும் அதிகரித்தது. இப்படி ஊழியர்களை இழப்பது நிறுவனத்துக்கும் இழப்பு என்பது ஐ.டி நிறுவனங்கள் போகப்போக உணர்ந்தன. இதை அடுத்து திறமையான ஊழியர்களைத் தக்க வைக்க முன்பு கொடுத்த ஊதிய உயர்வை விட பல மடங்கு அதிகமான ஊதிய உயர்வும், பதவி உயர்வும் தர முன்வந்துள்ளன.

ஊழியர்களுக்கு அள்ளித் தரும் ஐ.டி நிறுவனங்கள்!

ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களுக்குச் செலவிடும் தொகையின் அளவு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உதாரண மாக, இன்ஃபோசிஸ் ஐ.டி துறையில் அதிக அளவில் ஊதிய உயர்வு வழங்கும் நிறுவனமாக உள்ளது. சராசரியாக 12 - 13% ஊதிய உயர்வு தருகிறது. அதிக திறன் வாய்ந்த ஊழியர்களுக்கு 22 - 23% வரை ஊதிய உயர்வு வழங்கியுள்ளது.

ஆக மொத்தத்தில், ஐ.டி துறையில் ஊதிய உயர்வு சராசரியாக 20 சதவிகிதத்துக்கு மேல் இருக்கிறது. வேறு நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்துக்கு வரும்போது திறமையைப் பொறுத்து, 50% - 100% வரை கூடுதலாக ஊதியம் வழங்க நிறுவனங்கள் தயாராக இருக் கின்றன. இதனால் ஐ.டி ஊழியர்கள் மீண்டும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism