Published:Updated:

பொன்விழா கொண்டாடும் சேலம் ஆடிட்டர் சங்கக் கிளை!

சங்கக் கிளை நிர்வாகிகள்
பிரீமியம் ஸ்டோரி
சங்கக் கிளை நிர்வாகிகள்

சாதனை

பொன்விழா கொண்டாடும் சேலம் ஆடிட்டர் சங்கக் கிளை!

சாதனை

Published:Updated:
சங்கக் கிளை நிர்வாகிகள்
பிரீமியம் ஸ்டோரி
சங்கக் கிளை நிர்வாகிகள்

ஆகாஷ்

நம் நாட்டில் ஆடிட்டர்கள் என்றாலே தனிப்பெருமை உண்டு. தமிழகத்தில் ஆடிட்டர் சங்கங்கள் எல்லா நகரங்களிலும் உண்டு என்றாலும், சேலத்தில் இருக்கும் ஆடிட்டர் சங்கக் கிளைக்கு சிறப்பான வரலாறு உண்டு. சேலம் தனிப் பட்டயக் கணக்காளர்கள் சங்கக் கிளையானது (Salem branch of SIRC of ICAI), 1971-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் நாள் தொடங்கப்பட்டது. இந்தக் கிளை தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றிருப்பதால், வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி இதன் பொன் விழா கொண்டாடப் படுகிறது.

இந்தியாவின் தென்மண்டலத் தின்கீழ் செயல்படும் சேலம் கிளை யின் சிறப்புகளைச் சொல்கிறார் சேலம் ஆடிட்டர் கேசவலால்.

பொன்விழா கொண்டாடும் சேலம் ஆடிட்டர் சங்கக் கிளை!

“நாட்டிலேயே முதன்முறை யாக ஒரு சங்கக் கிளையின் நடப்பு நிர்வாகக்குழு (2019 - 2022) உறுப்பினர்கள் அனைவரும் பெண்கள் என்ற தனித்தன்மையைப் பெற்ற ஒரே கிளை சேலம் கிளை. தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், மாணவர் பிரிவுத் தலைவர் என ஐந்து பேருமே பெண்கள். பெண்கள் சுதந்திரம் பெரிதாகப் பேசப்படும் இந்தக் காலத்தில், உயர்பொறுப்பில் அனைவரும் பெண்கள் இருப்பதை இந்தியாவில் வேறெந்த ஆடிட்டர் சங்கக் கிளையிலும் பார்க்க முடியாது. தவிர, கடந்த ஐந்து வருடங்களில் தேசிய அளவில் தேர்ச்சி பெற்ற மாணவர் களில் முதலிடம் பிடித்த இரண்டு மாணவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள்தான். மேலும், 2009 முதல் இன்று வரை தேசிய மற்றும் மண்டல அளவில் சிறந்த கிளை என்ற விருதைத் தொடர்ந்து பெற்றுவரும் ஒரே கிளை சேலம் கிளைதான்’’ என்றார் பெருமை பொங்க.

பொன் விழா கொண்டாடும் இந்தக் கிளையின் செயல்பாடு இன்னும் சிறக்கட்டும்!