Published:Updated:

``நோயல் டாடாவை ஹெச்.வசந்தகுமார் சந்தித்தபோது..." - `சத்யா' எம்.டி நெகிழ்ச்சிப் பகிர்வு

ஹெச்.வசந்தகுமார்
ஹெச்.வசந்தகுமார்

``தனிமனிதன் ஒருவன் நினைத்துவிட்டால், நிச்சயம் ஜெயிக்க முடியும் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படிச் சொன்னது மட்டுமல்ல, அவர் அதைச் செய்தும் காட்டினார்.''

வசந்த அண்ட் கோவின் தலைவர் ஹெச்.வசந்தகுமார் குறித்த இவர்களது நினைவலைகள்...

மக்கள் சேவை முன்னேற்றம் தரும்! - வி.ஜி.சந்தோஷம், தலைவர், வி.ஜி.பி.

``தனது கடுமையான உழைப்பால் மிகப்பெரிய அளவில் உயர்ந்தவர் வசந்த குமார். எவன் ஒருவன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறானோ, அவன் வாழ்க்கையில் மிகச் சிறந்த உயரத்தை அடைவான் என்பதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்தவர் வசந்தகுமார்.''

தனி மனிதன் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்! - ரவி பிரகாஷ், எம்.டி, சாலிடெர் டிவி

``அவர் செய்த சாதனை ஒன்றிரண்டல்ல. சாலிடெர் நிறுவனத்தின் பல விருதுகளை அவர் வாங்கியிருக்கிறார். இன்னும் பல சாதனை செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவையெல்லாம் சாத்தியமா என்று நான் கேட்பேன். தனிமனிதன் ஒருவன் நினைத்துவிட்டால், நிச்சயம் ஜெயிக்க முடியும் என்று திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பார். அப்படிச் சொன்னது மட்டுமல்ல, அவர் அதைச் செய்தும் காட்டினார்.''

ஹெச்.வசந்தகுமார்
ஹெச்.வசந்தகுமார்

எனக்கு இன்ஸ்பிரேஷனே அண்ணாச்சிதான்! - ஜான்சன், எம்.டி, சத்யா

``நான் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்ததற்கான இன்ஸ்பிரேஷனே வசந்த குமார் அண்ணாச்சிதான். அவர் மாதிரி வர வேண்டும் என்று நினைத்துத்தான் இந்தத் தொழிலைத் தொடங்கினேன். என்னை ஒரு போட்டியாளர் என்று நினைக்காமல் அருமையான பிசினஸ் ஐடியாக்களை சொல்வார். கொரோனா காலத்தில் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்காதே. சம்பளம் குறைத்தால் அவர்கள் எப்படி வேலை செய்வார்கள் என்றார்.

கம்ப்யூட்டரை பயன்படுத்தாமல் ஒரு ஏ4 சீட்டில் அத்தனை விஷயங்களையும் அவர் குறித்துத் தருவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். பிசினஸை வளர்க்க ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிக் கவனித்து செய்ய வேண்டும் என்று சொல்வார். வோல்டாஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு நான் அவருடன் சென்றேன். அங்கே தற்செயலாக நோயல் டாடாவை சந்தித்தார். `என் தொகுதி மக்களுக்கு உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்' என்று மனு கொடுத்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டேன்!"

- தன் உற்சாகச் சிரிப்பையே தன் நிறுவனத்தின் பிராண்டாக்கி, பிசினஸில் பெரும் வெற்றி கண்டவர் சில நாள்களுக்கு முன் காலமான ஹெச்.வசந்தகுமார். வசந்த அண்ட் கோவின் தலைவரான அவர் 70 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தவர். தனது கடுமையான உழைப்பு, நேர்மையான அணுகுமுறை, புதுமையான நோக்கிலான மார்க்கெட்டிங் அணுகுமுறையை வைத்து 1,000 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் கொண்டதாக வசந்த் & கோ நிறுவனத்தை வளர்த்தெடுத்தது எப்படி? - நாணயம் விகடன் இதழில் முழுமையான கட்டுரையை வாசிக்க க்ளிக் செய்க - https://bit.ly/3279ukl

உற்சாகச் சிரிப்பு... நேர்மையான உழைப்பு... மார்க்கெட்டிங்கில் புதுமை..! ஜீரோ டு ஹீரோவான வசந்தகுமார்! https://bit.ly/3279ukl

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு