Published:Updated:

SBI வாடிக்கையாளர்களே, நகைக்கடன் முதல் கார் கடன் வரை; உங்களுக்கான புதிய சலுகைகள் இதோ!

State Bank of India
State Bank of India ( Vikatan )

`YONO' அப்ளிகேஷன் வழியாக தங்க நகைக்கடனுக்கு விண்ணப்பித்தால் 100% செயல்பாட்டு கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அதே போல...

இது திருவிழாக் காலம் என்பதால், பொதுத்துறை வங்கிகளில் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ, தனது வாடிக்கையளர்களுக்கு பல்வேறு கடன் மற்றும் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ, யூகோ பேங்க், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற வங்கிகளும், தனது வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால கடன் சலுகைகளை வழங்கி வருகின்றன.

தனது வங்கியில் கார் லோன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 100% செயல்பாட்டு கட்டணங்களை ரத்து செய்துள்ளது எஸ்.பி.ஐ. மேலும் கடன் மூலம் கார் வாங்குபவர்களுக்கு, காரின் விலையில் 90% தொகை கடனாக கிடைக்கும் என்றும், வங்கியின் சொந்த அப்ளிகேஷனான `YONO' மூலம் கடனுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு வட்டியில் 0.25% சலுகை அளிப்பதாகவும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.

YONO-SBI
YONO-SBI
yonobusiness.sbi
எஸ்.பி.ஐ அளிக்கும் கொரோனா கால கடன் - விதிமுறைகள் என்ன? #MyVikatan

அதே போல, தங்க நகைக்கடனுக்கான வட்டியில் 0.75% சலுகையை அறிவித்துள்ளது. இதனால் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் 7.5% வட்டியில் தங்க நகைக் கடனை வாங்கிக்கொள்ளலாம். 'YONO' அப்ளிகேஷன் வழியாக தங்க நகைக்கடனுக்கு விண்ணப்பித்தால் 100% செயல்பாட்டு கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அதே போல இந்த அப்ளிகேஷன் வழியாக தனிநபர் கடன் மற்றும் பென்சன் லோன் பெறுபவர்களுக்கும் 100% செயல்பாட்டுக் கட்டணம் கிடையாது.

கடந்த ஜூலை மாதம், வீட்டுக்கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணத்தையும் முழுமையாக எஸ்.பி.ஐ வங்கி ரத்து செய்திருக்கிறது. இதற்கான வட்டி விகிதம் 6.70% எனவும், கடன் விண்ணப்பிப்பதற்காக கடைசி தேதி ஆகஸ்ட் 31,2021 என்றும் எஸ்.பி.ஐ வங்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

State Bank of India
State Bank of India
Photo: Twitter/ @TheOfficialSBI

பிளாட்டினம் டேர்ம் டெபாசிட்!

மேலும், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை மையப்படுத்தி, `பிளாட்டினம் டேர்ம் டெபாசிட்' என்கிற சேமிப்பு திட்டத்தையும் எஸ்.பி.ஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 75 நாட்கள், 75 வாரங்கள், 75 மாதங்கள் என்கிற மூன்று முதிர்வுகால பிக்சட் டெபாசிட் கணக்குகளை வாடிக்கையாளர்கள் துவங்கலாம். இந்த திட்டங்களுக்கு வழக்கமான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை விட 0.15% கூடுதல் வட்டியை எஸ்.பி.ஐ வங்கி வழங்குகிறது. இந்த சேமிப்பு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள், இத்திட்டத்தில் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 14, 2021.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடன் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

* கடன் வாங்குவதற்கான தேவை உள்ளவர்கள் மட்டுமே கடன் வாங்குவதை பரிசீலிக்கவும். வட்டி குறைவு, செயல்பாட்டுக் கட்டணம் இல்லை என்பதற்காக கடன் வாங்குவதை பரிசீலிக்க வேண்டாம்.

* உங்களால் மாதம் எவ்வளவு தொகையை (இ.எம்.ஐ) சிக்கல் இல்லாமல் தொடர்ந்து கட்ட முடியும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப கடன் வாங்கவும். எப்போதும் தகுதிக்கு மீறிய பெரிய தொகையைக் கடனாக வாங்கக் கூடாது.

 கடன்
கடன்
கடன் சுமையை வெகுவாகக் குறைக்கும் ‘லோன் ரீஸ்ட்ரக்சரிங்’... ஏன்... எதற்கு... எப்படி?

* அதிக வருமானத்துக்கு ஆசைப்பட்டு, கையில் பணம் இல்லையெனில், சிலர் கடன் வாங்கியாவது முதலீடு செய்துவிடுகிறார்கள். இது பெரிய தவறு. இப்படிக் கடன் வாங்கி முதலீடு செய்யும்போது, முதலுக்கு மோசம் ஏற்படுவதுடன், தேவையில்லாமல் வட்டியும் கட்ட வேண்டிவரும். எனவே, எப்போதும் கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

* இது கொரோனா காலம். இன்னும் நாம் கொரோனாவிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. கொரோனாவினால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் இரண்டு அலைகளை கடந்துவிட்ட நமக்கு, இன்னும் மூன்றாவது அலை வரலாம் என்று கணிக்கப்படுகிறது. எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற சூழல் நிலவுவதால், கடன் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

தனிநபர் கடன்
தனிநபர் கடன்

* கடன் வாங்குவதற்குக் கடன் வகையைப் பொறுத்து சுமார் 15 முதல் 20 இடங்களில் கையொப்பம் போட வேண்டியிருக்கும். நம்மில் பலர் பெருக்கல் குறி போட்டிருக்கும் இடங்களில் எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பம் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுமையாகப் படியுங்கள்.

ஆக, கிடைக்கிறதே என கடன் வாங்காமல், அவசியம் கருதி கடன் வாங்கும் போது அதன்மூலம் நம்மால் நிச்சயம் பலன் பெற முடியும்!

அடுத்த கட்டுரைக்கு