Published:Updated:

`வர்த்தக வாரத்தின் முதல்நாள்; பங்குச் சந்தையில் கடும் சரிவு!’ -45 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட வர்த்தகம்

இந்திய பங்குச்சந்தை
இந்திய பங்குச்சந்தை ( vikatan )

கடந்த 13-ம் தேதி பெருத்த சரிவுகண்ட வர்த்தகம், 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டபின் சந்தை மீண்டெழுந்தது. ஆனால், தற்போது பலத்த சரிவில் தொடர்கிறது.

வர்த்தக வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்குமுன்பே சென்செக்ஸ் 2200 புள்ளிகள் இறக்கம் கண்டது. பின்னர், சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் தொடர்ந்து இறக்கத்தில் பயணித்து, காலை 9.55 மணியளவில் 10 சதவிகிதத்துக்கும்மேல், அதாவது 2,991.85 புள்ளிகள் சரிவடைந்து 26,924 புள்ளிகளை எட்டியதுமே, சந்தை விதிமுறைகளின்படி 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது.

`வர்த்தக வாரத்தின் முதல்நாள்; பங்குச் சந்தையில் கடும் சரிவு!’ -45 நிமிடங்கள் நிறுத்தப்பட்ட வர்த்தகம்
vikatan

இதேபோல கடந்த 13-ம் தேதி வெள்ளியன்றும் வர்த்தகம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அன்றைய தினம், மீண்டும் சந்தையில் வர்த்தகம் தொடங்கியதும் பெரிய அளவில் ஏற்றம் ஏற்பட்டது.

ஆனால் இன்றைய தினம், மீண்டும் வர்த்தகம் தொடங்கிய பின்பும் சந்தை மேலும் சரிவடைந்து 11.30 மணி நிலவரப்படி, 3,400 புள்ளிகள்வரை இறக்கத்தில் பயணிக்கிறது. தற்போது நிஃப்டியும் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. பேங்க் நிஃப்டி இண்டெக்ஸ் 14 சதவிகிதத்துக்கு மேல் சரிந்துள்ளது. இதேபோல் தொடர்ந்தால் மீண்டும் சந்தையில் வர்த்தகம் நிறுத்தப்படலாம்.

இந்தியப் பங்குச்சந்தை
இந்தியப் பங்குச்சந்தை
vikatan

கொரோனா வைரஸ், பரவலைத் தடுப்பதற்காக இந்தியாவின் முக்கிய நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்திடமிருந்து தொழில்துறையினருக்கு சாதகமான அறிவிப்புகள் ஏதாவது வருமென்று நேற்றுவரை எதிர்பார்த்து, எவ்வித அறிவிப்பும் வராததால், சந்தை முதலீட்டாளர்களிடையே ஏற்பட்ட ஏமாற்றமும் சந்தை சரிவுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு