கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீடு செய்துள்ள கடன் பத்திரங்களில் முதிர்வுக்குப் பிறகு பணம் வரவில்லை என்பதால், பல ஃபண்ட் திட்டங்கள் இப்போது சிக்கலில் இருக்கின்றன.
பிரிக்கப்பட்ட திட்டங்கள் என்றால்..!
முதிர்வுக்குப் பிறகு பணம் திரும்ப வராத அந்தக் கடன் பத்திரங்களைக்கொண்ட முதலீட்டுக் கலவையை (போர்ட்ஃபோலியோ) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தனியாகப் பிரித்துப் பராமரிக்கின்றன. இப்படிப்பட்ட ஃபண்ட் திட்டங்களை, `பிரிக்கப்பட்ட ஃபண்ட் திட்டங்கள்’ என்கிறார்கள்.

ஃபண்ட் பிரிக்கப்பட்ட பின் மீதம் நடைமுறையிலுள்ள ஃபண்டை, `தற்போதைய ஃபண்ட்’ (Current Fund) என்கிறார்கள். பிரிப்பதற்கு முந்தைய ஃபண்ட், `அசல் ஃபண்ட்’ (Original Fund).
கடன் பத்திரங்களுக்குரிய பணம் திரும்பப் பெறப்படும்போது, எந்த அளவுக்குப் பணம் திரும்ப வந்ததோ, அதற்கேற்ப யார் முதலில் முதலீடு செய்திருக்கிறார்களோ அவர்களுக்குத் திருப்பி தரப்படுகிறது.
சில சிக்கலுக்குரிய கடன் ஃபண்டுகளில் மேற்கூறிய நடைமுறை பின்பற்றப்பட்டுவருகிறது. வோடஃபோன் ஐடியா, ஜீ எஜுகேஷன் போன்ற நிறுவனங்களிலிருந்து ஃப்ராங்க்ளின், ஆதித்ய பிர்லா, யூ.டிஐ போன்ற மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு முதிர்வுக்குப் பிறகும் கடன் பத்திரங்கள் மூலமான பணம் குறிப்பிட்ட காலத்தில் திரும்ப வரவில்லை. இவை பிரிக்கப்பட்ட ஃபண்டுகளாகப் பராமரிக்கப்பட்டுவருகின்றன. சிக்கலுக்குரிய கடன் பத்திரங்களிலிருந்து பணம் வந்ததும், முதலீட்டாளர்களுக்குப் பணம் திருப்பித் தரப்பட்டுவருகிறது. இப்படிக் கிடைக்கும் பணத்துக்கு வரியை எப்படிக் கணக்கிட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSமூலதன ஆதாய வரிக் கணக்கு!
மூலதன ஆதாய வரி கணக்கிட, முதலீட்டை வைத்திருந்த காலம், யூனிட்டுகளை வாங்கிய விலை மற்றும் விற்ற விலை தெரிய வேண்டும்.இந்தப் பிரிக்கப்பட்ட ஃபண்டுகளில் வைத்திருந்த காலத்தைக் கணக்கிட, நாம் ஃபண்ட் வாங்கிய தேதியிலிருந்து பணம் திரும்பிவந்த காலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக, ஃபண்ட் பிரிக்கப்பட்ட தேதி தேவையில்லை.

ஃபண்ட் பிரிக்கப்பட்டபோது பிரிக்கப்பட்ட தேதியில், பிரிக்கப்பட்ட தொகைக்கும் தற்போதைய ஃபண்ட் தொகைக்குமுள்ள விகிதாசாரத்தில் நாம் ஃபண்ட் வாங்கிய விலையை மாற்ற வேண்டும்.
உதாரணமாக, ஃபண்ட் பிரிக்கப்பட்டபோது, பிரிக்கும் முன் என்.ஏ.வி ரூ.20, பிரிக்கப்பட்ட பிறகு ஃபண்ட் என்.ஏ.வி ரூ.4, தற்போதய ஃபண்ட் என்.ஏ.வி ரூ.16 என வைத்துக்கொள்வோம்.
இன்னொருவிதமாக பிரிக்கப்பட்ட ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் தொகை ரூ.400 கோடி (தற்போதைய ஃபண்ட் மூலம் நிர்வகிக்கப்படும் ரூ.1,600 கோடி. ஃபண்ட் வாங்கிய விலை ரூ.10) என்றால், பிரிக்கபட்ட ஃபண்ட் வாங்கிய விலை ரூ.2. தற்போதைய ஃபண்ட் வாங்கிய விலை ரூ.8 எனலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வரிக் கணக்கீடு!
இந்த அடிப்படை அம்சங்களைப் புரிந்துகொண்டு, அட்டவணையை கவனித்து நோக்கினால் பிரிக்கப்பட்ட ஃபண்டிலிருந்து வரும் தொகைக்கு மூலதன ஆதாய வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது விளங்கும்.
முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு மேலிருந்தால், மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வரி செலுத்த வேண்டும். இதுவே, மூன்று ஆண்டுகளுக்குள் இருந்தால், முதலீட்டாளரின் அடிப்படை வருமான வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டி வரும்.

பிரிக்கப்பட்ட ஃபண்டில் வரி கணக்கிடுவதைப் புரிந்துகொள்வது சற்றுக் கடினமான செயலாகவே இருக்கக்கூடும். கவலை வேண்டாம், இணையதளங்களில் கிடைக்கும் ஆதாய வரிக் கணக்கீடு முறைகள் உங்களுக்கு உதவும்.
மேலும், உங்களின் நிதி ஆலோசகர், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், ஆடிட்டர் போன்றோர் உங்களுக்கு உதவி புரிவார்கள்.
அட்டவணைக் குறிப்பு: * முதலீட்டுக் காலம், மூன்று ஆண்டுகளுக்குள் இருந்தால், முதலீட்டாளரின் அடிப்படை வரி வரம்புக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.