Published:Updated:

நிச்சயமற்ற யுகத்தில் வெற்றி பெறுவதற்கான 7 விதிமுறைகள்..! - உங்களிடம் இவை இருக்கிறதா?

7 விதிமுறைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
7 விதிமுறைகள்

எந்த வியாபாரத்தை எந்தச் சூழலில் செய்தாலும், சில அடிப்படைகளைப் பின்பற்றினால் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளலாம்!

லக ஒழுங்கு மாறிக்கொண்டே இருக்கிறது; முன்பைவிடவும் நிச்சயமில்லாத சூழலில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கடும் மழை, கடும் வறட்சி, வெடிகுண்டு, யுத்தம், இப்போது கொடிய வியாதி என்று அடிக்கடி நிச்சயமில்லாத தன்மை என்ற இருண்ட மேகங்கள் சூழ்ந்து கொள்கின்றன. கடந்த ஆண்டு லாபகரமாகச் செயல்பட்ட சுற்றுலா மற்றும் தங்கும் விடுதிகள் இன்று ஆள்களைத் தேடி ஓடும் நிலை; அடுத்த ஆண்டு எப்படி இருக்கும் என்று எதையும் நிச்சயமாகக் கூறமுடியாத நிலையில் இருக்கின்றன.
நிச்சயமற்ற யுகத்தில் வெற்றி பெறுவதற்கான 7 விதிமுறைகள்..! - உங்களிடம் இவை இருக்கிறதா?

எந்த வியாபாரம், எப்படியான சூழ்நிலையில் செய்தாலும், சில அடிப்படைகளைப் பின்பற்றினால் வெற்றியைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள் ஆண்டாண்டு காலமாக பிசினஸில் வெற்றி பெற்றவர்கள். மற்றவர்களிலிருந்து மாறுபட்டு இவர்கள் பின்பற்றும் சில ஒழுங்குகள் கஷ்டமான சூழ்நிலையிலும்கூட அவர்களை வெற்றியாளராக மாற்றியிருக்கிறது.

பிசினஸில் வெற்றி பெற தனிமனிதர்களிடம் இருக்க வேண்டிய குணாம்சங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இலங்கையில் வெற்றிகரமாகச் செயல்படும் முப்பதுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்களைச் சந்தித்துப் பேசினோம். உலகம் முழுக்க உள்ள வெற்றியாளர்களின் குணநலன்களையும் ஆராய்ந்து பார்த்தோம். அதிலிருந்து ஏழு முக்கியமான குணநலன்களை வெற்றிக்கான விதிமுறைகளாக நம்மால் இனம்காண முடிந்தது. அந்த ஏழு விதிமுறைகள் இனி...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

விதிமுறை #1: வெற்றியாளர்கள் நெகிழ்வுத்தன்மையுடன் (Flexible) தொடர்ந்து புதிதாகச் சிந்திப்பார்கள்!

வேகமாக மாறிவரும் உலகில், மாற்றத்தை விரைவாக ஏற்றுக்கொள்வதும் தடைகளை வாய்ப்புகளாக மாற்றுவதும் மிகப்பெரிய தகுதியாக மாறி வருகிறது. மாற்றங்களை இலகுவாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் (Adapt) செய்யும் வியாபாரங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. நம்மைச் சுற்றி ஏற்படும் மாற்றங்களைக் கணித்து அதற்குத் தகுந்த வகையில் புதிதாகச் சிந்திந்து புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் வியாபாரங்களும் தொழில்களும் நீடித்து நிற்கின்றன. வெற்றிகரமான தொழில் முனைவோர் கையில் உள்ள சிக்கல்களை வேறு ஒரு பார்வையில் புதிதாகச் சிந்தித்து அணுகுவார்கள். அது புதிய சூழல்களில் வியாபாரம் செழித்து வளர அவர்களுக்கு உதவுகிறது. ‘Agile’ என்று சொல்லப்படும் சடுதியில் மாற்றம் கொள்ளும் நெகிழ்வுத்தன்மை இந்தக் காலத்தில் வெற்றியடைய மிகவும் தேவை என்று கூறுகிறார்கள்.

நிச்சயமற்ற யுகத்தில் வெற்றி பெறுவதற்கான 7 விதிமுறைகள்..! - உங்களிடம் இவை இருக்கிறதா?

விதிமுறை #2: வெற்றியாளர்கள் எதையும் வித்தியாசமாகச் செய்து, தனித்துத் தெரிவார்கள்.

உலக ஒழுங்கில் எல்லோரும் செய்வதையே செய்வதும், சுற்றி இருப்பவரிடம் நல்ல பெயர் எடுப்பதற்காகப் பொதுவில் கூட்டத்துக்கு ஏற்றது போல இயங்குவதும், தனக்கு வசதியான வட்டத்துக்குள் திறமையைக் காட்டுவதும் நமது வெற்றியைத் தாமதமாக்கிவிடும் என்று கூறுகிறார்கள். வெற்றியாளர்கள் ஒரே மாதிரியான (stereotype) உலக வழக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்தி, வித்தியாசமான எதையும் செய்து தனித்துத் தெரிபவராக இருப்பார். வெற்றியாளர்கள் தாங்கள் செய்யும் ஒரு காரியத்தால் வரும் தவறுகளை எதிர் கொள்ளத் தயங்குவதில்லை, தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவது பிழை இல்லை என அவர்கள் நம்புகிறார்கள். எனவே, எதையும் வித்தியாசமாக அணுகுகிறார்கள்.

விதிமுறை #3: இலக்கும் அதை அடைய விடாமுயற்சியும் எப்போதும் இருக்கும்.

வெற்றி பெற்றவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் விஷயத்தை அதிக ஆர்வத்துடனும் ஆழமாகவும் செய்வார்கள். அவர்களுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எந்தவொரு வேலையையும் விரும்பிச் செய்வதால், குறிக்கோளை அடைய பொறுப்புக்களைக் கவனமாகக் கையாள்வதுடன், கூடுதல் பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளத் தயங்க மாட்டார்கள். ஒருவர் ஒரு விஷயத்தில் ஆர்வமாக இருக்கும்போது, ​​அவர்கள் மேலும் கற்றுக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். அவர்கள் முன்னேறும்போது, அவர்களால் மேலும் மேலும் அந்த விஷயத்தில் கவனம் செலுத்த முடிவதுடன், அதன் காரணமாகவே வெற்றியையும் இலகுவாக அடைகிறார்கள். விடாமுயற்சியும், விட்டுக் கொடுக்காத தன்மையும் மற்றவர்களிலிருந்து வித்தியாசமான உலகத்தை உண்டாக்குகிறது. இயலாது என்று தோன்றியதை ஒருவர் அடையும்போது, ​​அவர்கள் தங்களை அதிகமாக நம்பத் தொடங்குகிறார். மேலும், சவால்களை எதிர்கொள்ளும் நேர்மறையான மனநிலை வலுவாக அவர்களிடமிருந்து வெளிப்படுகிறது.

வெற்றி பெற்ற மனிதர்கள் பொறுப்புகளை ஏற்கத் தயங்க மாட்டார்கள். எடுத்த ஒவ்வொரு வேலையையும் எதிர்பார்த்ததைவிடவும் மேலதிகமாக செய்து முடிக்க முயல்வார்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விதிமுறை #4: வெற்றியாளர்கள் அதிக பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்காமல் ஏற்றுக்கொள்வார்கள்.

பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டு அதைச் சரியாகக் கையாளும்போது வெற்றிக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது. ஒருவர் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கும்போது பொறுப்புகள் குறைவாகவும் இருக்கும். பின்னர் பெரிய குழுக்களை, நிறுவனங்களை நிர்வகிக்கும் அளவுக்கு வரும்போது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு, அதைச் செய்து முடிக்கும்போது வெற்றிக்கு அருகில் வர முடிகிறது. வெற்றி பெற்ற மனிதர்கள் பொறுப்புகளை எடுக்கத் தயங்க மாட்டார்கள். எடுத்த ஒவ்வொரு வேலையையும் (சிறிதோ, பெரிதோ) எதிர்பார்த்ததைவிடவும் மேலதிக மாகச் செய்து முடிக்க முயல்வார்கள்.

நிச்சயமற்ற யுகத்தில் வெற்றி பெறுவதற்கான 7 விதிமுறைகள்..! - உங்களிடம் இவை இருக்கிறதா?

விதிமுறை #5: வெற்றியாளர்களின் ஒவ்வொரு செயலும் பெரிய குறிக்கோள் நோக்கியதாக இருக்கும்.

பிசினஸில் ஒவ்வொருவரும் பெற்ற வெற்றிகள் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் ஒரு தெளிவான ‘குறிக்கோளைக் கொண்டிருக் கிறார்கள். அவர்கள் செய்யும் எந்தச் செயலும் அவர்களின் நீண்டகால லட்சியங்களை நோக்கிய பயணமாகவே இருக்கும். அவர்களின் இலக்குகள் தெளிவாகவும் மிகவும் குறிப்பாகவும் (specific) இருக்கும். தங்களின் குறிக்கோள்களை அடைய சரியான கருவிகளையும் (tools) திட்டங்களையும் தயாராகவே வைத்திருப்பார்கள்.

விதிமுறை #6: மற்றவர்களோடு ஒத்துழைத்து சேர்ந்து இயங்கும் மைண்ட் செட் இருக்கும்!

பிசினஸ் நெட்வொர்க்குகளை, நண்பர்களை உருவாக்குவதில் வெற்றியாளர்கள் தீவிரமாகச் செயல்படுவார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் நன்கு கேட்பவராகவும் தொடர்புகொள்வதில் மிகச் சிறந்த திறமை கொண்டவராகவும் இருப்பதுடன், பிசினஸ் சார்ந்த நெட்வொர்க்குகளை உருவாக்கவும் சுற்றியுள்ளவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் அவர்களோடு சேர்ந்து இயங்கி தங்களின் குறிக்கோள்களை அடைந்துகொள் வதையும் முக்கியப் பண்புகளாக வைத்திருக் கிறார்கள்.

நிச்சயமற்ற யுகத்தில் வெற்றி பெறுவதற்கான 7 விதிமுறைகள்..! - உங்களிடம் இவை இருக்கிறதா?

விதிமுறை #7: சுய மதிப்பீடு செய்து தங்கள் பலங்கள், பலவீனங்களைப் புரிந்து வைத்திருப்பார்கள்!

ஒருவர் தனது பலம், பலவீனங்களைக் கண்டறிந்து தங்களைத் திறம்பட வழிநடத்த முடிந்தால், அவர்கள் மற்றவர்களையும் புரிந்துகொண்டு திறம்பட வழிநடத்த முடியும். வெற்றி பெற்றவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சுயமதிப்பீட்டுக்காக நிறைய நேரத்தைச் செலவு செய்கிறார்கள். அதற்கான வாசிப்புக்கள், பயிற்சிகள் போன்ற தேடல்களின் மூலம் புதிய தகுதிகளைத் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்தப் பண்பு வேறு ஒருவர் மூலம் அவர்கள் வழிநடத்தப்படுவதைத் தடுத்து, அவர்களின் குறிக்கோள்களை சுயமதிப்பீட்டுடன் அடைய முயல்வார்கள்.

முன்னணித் தொழில்முனைவோரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்த 7 பண்புகளையும் வளர்த்துக்கொண்டால், நாமும் அவர்களைப் போல வெற்றி அடையலாம்!