உலக நாடுகளில் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பெட்ரோல், டீசலுக்கு அடுத்தபடியாக மிக அதிகமாகப் பயன்படுத்தும் எரிபொருள்களில் நிலக்கரி மிக முக்கியமானது.

நம் நாட்டில் இதன் உற்பத்தி குறைவு என்பதால் பெரும்பாலும் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது நிலக்கரி.

இந்த நிலையில் வீணாக வெட்டி வீசப்படும் முட்செடிகளையும், டிம்பர் வேஸ்ட்டுகளையும் பயன்படுத்தி, நிலக்கரிக்கு மாற்றாக ஓர் எரிபொருளை டன் கணக்கில் தயார் செய்து, பல்வேறு தொழிற்சாலைகளுக்கு எரிபொருள் பயன்பாட்டுக்கு அனுப்பி வைக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த ராகேஷ். பி.இ., எம்.பி.ஏ முடித்துவிட்டு, தனியார் நிறுவனங்களில் வேலை தேடாமல் சொந்தமாகத் தொழில் செய்து முன்னேறிவருகிறார். சிவகங்கை மாவட்டத்தில் ஒரு தொழில்முனைவோராக இருக்கும் ராகேஷை அவருடைய நிறுவனத்தில் சந்தித்துப் பேசினோம்.

‘‘நிலக்கரிக்கு நிகராக எரியும் திறன்கொண்ட எரிபொருளை, தரமான முறையில் உள்நாட்டில் உற்பத்தி செய்துவருகிறோம். இதன் பெயர் `பயோமாஸ் பிரிக்கட்’ (Biomass Briquette) அல்லது `வொயிட் கோல்’ (White Coal). அதிகரிக்கும் விலைவாசி, சுற்றுச்சூழல் மாசு, உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பிரிக்கட் தயாரிக்கப்படுகிறது. 2016-ம் ஆண்டு சிவகங்கை மாவட்டத் தொழில் மைய வழிகாட்டுதலின்படி, அரசின் மானியத் தொகை உதவியோடு இந்தத் தொழிலைத் தொடங்கினேன்.

சீமைக் கருவேல மரங்கள், பல்வேறு மரங்களின் கழிவுகள், மரத்தூள் ஆகியவற்றின் கலவைதான் இந்த மர எரிபொருள் கட்டி. இதை ஒரு சிறிய உருளை வடிவில் தயார் செய்கிறோம். எனவே, இந்த எரிபொருளை எளிமையாகப் பயன்படுத்த முடியும்; நீண்ட நாள்களுக்குக் கெட்டுப் போகாமல் பாதுகாக்க முடியும் என்பது இதன் மிகப்பெரிய சிறப்பு.

மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு பிரிக்கெட்ஸை அனுப்பிவைக்கிறேன். ஆரம்பத்தில் 100 டன் எரிபொருள் விற்பனை செய்தேன். தற்போது அது 300 டன்னாக அதிகரித்திருக்கிறது. என்னுடைய டர்ன் ஓவர் ஆரம்பத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருந்தது. இப்போது ஆண்டுக்கு ரூ.1 கோடியாக உயர்ந்திருக்கிறது. இரும்பு உருக்கு ஆலை, பின்னல் ஆடைகள் ஆலை, டையிங், கெமிக்கல்ஸ், உணவு பதப்படுத்துதல், தோல் தொழிற்சாலைகள், டயர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகியவை பரவலாக இந்த எரிபொருளைப் பயன்படுத்துகின்றன.

விவசாயக் கழிவுகளான குச்சிகள், சக்கைகள், தானியங்களின் ஓடுகள், தோல்கள், சிறிய விறகுகள் முதலான பொருள்களை அரைத்து, பொடியாக மாற்றி, பிறகு உலரவைக்கப்பட்ட மரத்தூள் கலவையுடன் சேர்த்து ஹைட்ராலிக் பிரஷர் மூலம் பிரிக்கட்ஸைத் தயாரிக்கிறோம். எனவே, பருத்திச் செடி, மிளகாய்ச் செடி போன்றவற்றையும் அறுவடைக்குப் பிறகு தீயிட்டுக் கொளுத்திவிடாமல் எங்களுக்கு வழங்கலாம். இயந்திரங்களின் உதவியோடு பிரிக்கட்ஸ் தயார் செய்து, அவற்றின் வெப்பநிலை குறைந்தவுடன் கோணிகளில் அடைத்து பேக்கிங் செய்துவிடுவோம். ஹோட்டல், பேக்கரிகள் ஆகியவற்றிலும் இவற்றைப் பயன்படுத்தலாம்.

சாதாரண விறகுகளை நேரடியாகப் பயன்படுத்தும்போது, ஈரப்பதம் காரணமாக எரியும்போது புகை வெளிவரும். அவற்றிலுள்ள கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகியவை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும். அதிக நாள்கள் சேமித்துவைத்துப் பயன்படுத்தினால், அவற்றின் எடை குறைந்து மேலும் சில மாதங்களில் விறகு கடினத்தன்மையை இழந்து கெட்டுவிடும். இது பயன்படுத்துபவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

ஆனால், பிரிக்கட்ஸ் அப்படி இல்லை. விறகைவிட பிரிக்கட்ஸ் குறைவான அளவே தேவைப்படும். ஐந்து முதல் ஏழு சதவிகிதம் வரை சாம்பலும், 4,500 GCV என்ற அளவுக்கு எரிதிறனும் ஒரு பிரிக்கட்டில் இருக்கும். இது, நீண்ட நேரம் நின்று எரியும் தன்மைகொண்டது. எளிதில் உருமாற்றம் அடையாது.

தமிழ்நாட்டில் 1990-களின் தொடக்கத்திலேயே பிரிக்கட்ஸ் வர ஆரம்பித்துவிட்டன. ஆனால், தற்போது வரை அதிகம் பிரபலமடையாமல் இருக்கின்றன. சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் கருவேல மரங்கள் கிடைப்பதால், தொழில் வளர்ச்சி இல்லாத இந்த இடங்களில் பிரிக்கட் உற்பத்தி செய்வது இந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்கு உதவும்.

எங்களுடைய பிரிக்கட்ஸை கிலோ ஆறு ரூபாய் என்ற விலைக்குக் கொடுக்கிறேன். ஆனால், எல்லோருக்கும் ஒரே விலை என்று சொல்ல முடியாது. தூரம் மற்றும் கொள்முதல் செய்யும் அளவுகளைப் பொறுத்து விலையைக் கொஞ்சம் கூட்டியோ, குறைத்தோ தருகிறோம்.

நாங்கள் பிரிக்கட்ஸ் தயாரிக்க மரங்களை வெட்டுவதில்லை. மரக்கழிவுகள், தீ வைத்து எரிக்கப்படும் முட்புதர்களின் வேர்களை வைத்து பிரிக் கேக் செய்துவிடுகிறோம். பொதுவாக, எரிபொருளுக்குத் தேவை எப்போதும் இருக்கும். அதனால் கண்டிப்பாக பிரிக்கட் தொழிலை தொழில் மையங்களின் உதவியோடு செய்யலாம்.

வருடத்துக்கு 5,000 மெட்ரிக் டன் அளவுக்கு எரிபொருளை உற்பத்தி செய்வதுதான் என்னுடைய தற்போதைய இலக்கு. வெளிநாடுகளுக்கு பிரிக்கட் ஏற்றுமதி செய்ய அனுமதி இல்லை. என்றாலும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உள்நாட்டு உற்பத்தி பெருகி, நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவது குறைய வேண்டும். நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகமாக இது உதவும்; ஒரு மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

மேலும், தொழிற்பேட்டைகள், சிட்கோ, சிப்காட் முதலான இடங்களில் செயல்படும் நிறுவனங்கள் எரிபொருளின் தேவைக்கு நேரடியாக மரங்களை வெட்டி விறகுகளைப் பயன்படுத்த அரசு தடை விதிக்க வேண்டும். அப்படிச் செய்தால், பொது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு பிரிக்கட் தொழிலும் வளர்ச்சியடையும்’’ என்றார்.

இவர் ஓர் இளம் தொழில்முனைவோராக இருப்பதால், இவருடைய பிசினஸ் வெற்றியை எடுத்துச் சொல்லி, இளைஞர்களுக்கு உற்சாகமூட்ட பல இடங்களில் இவரை அழைத்துப் பேசவைக்கிறார்கள். இந்தத் தொழிலில் தான் கற்றுக்கொண்ட அனுபவங்களையும் பாடங்களையும் எளிய மொழியில் எல்லோருக்கும் சொல்லித் தருகிறார். இவர் தன் தொழிலை சிறப்பாகச் செய்துவருவதைப் பாராட்டி, சிவகங்கை மாவட்டத்தின் சிறுதொழில் சங்கத்தின் சார்பாக ‘பெஸ்ட் இண்டஸ்ட்ரி 2018’-க்கான விருது இவருக்கு அளிக்கப்பட்டது. தமிழக அளவிலும் தொடர்ந்து பல விருதுகளுக்கு இவருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் காணாத மாவட்டங்கள் தென் தமிழகத்தில் அதிகம். அப்படிப்பட்ட மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை.

இந்தப் பகுதியில் கிடைக்கும் கழிவுகளைக்கொண்டு, புதுமையாக யோசித்துத் தொழில் செய்து, பலருக்கும் முன்னுதாரணமாக விளங்கும் ராகேஷை சிவகங்கை மாவட்டமே பெருமையோடு பாராட்டிவருகிறது. நாமும் அவரைப் பாராட்டுவோம்!