Published:Updated:

‘ஸ்லோ-டவுன்’ ஆகிவரும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள்... என்னதான் காரணம்?

ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

‘ஸ்லோ-டவுன்’ ஆகிவரும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள்... என்னதான் காரணம்?

ஸ்டார்ட்அப்

Published:Updated:
ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

உலக அளவிலான பேரியல் பொருளாதார (Macro economic) நிகழ்வு களாது, பேராசையும் நேரிடரும் (risk) அதிகம் கொண்ட ஸ்டார்ட்அப் துறையைச் சற்றே அச்சுறுத்த ஆரம்பித் திருக்கிறது. நிதித் திரட்டு தலுக்கான சூழலானது ஒரு பரப்பரப்பான ஆண்டுக்குப் பிறகு, எதிர்பாராத சுணக்கத்தை எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

சித்தார்த்தன் சுந்தரம்
சித்தார்த்தன் சுந்தரம்

கடந்த ஆண்டு மட்டும் ஸ்டார்ட்அப்கள் திரட்டிய நிதி சுமார் 42 பில்லியன் டாலர் (1 பில்லியன் டாலர் = சுமார் ரூ.7,800 கோடி). சென்ற ஆண்டு 1 பில்லியன் டாலர் மதிப்பீடு கொண்ட ஸ்டார்அப்களின் எண்ணிக்கை 42.

2022-ம் ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் திரட்டியிருக்கும் நிதி 16 பில்லியன் டாலர் மட்டுமே! இது 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை திரட்டப்பட்ட 20 பில்லியன் டாலரைவிடக் குறைவு.

இது போல, நடப்பாண்டில் மே மாதம் வரை யுனிகார்ன் என்கிற அந்தஸ்த்தை அடைந்த ஸ்டார்ட்அப் களின் எண்ணிக்கை 16 மட்டுமே. ஆனால், அதற்கு முந்தைய ஐந்து மாதங்களில் 26 நிறுவனங்கள் இந்த அந்தஸ்த்தை அடைந்தன.

‘ஸ்லோ-டவுன்’ ஆகிவரும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள்... என்னதான் காரணம்?

ஸ்டார்ட்அப் நிறுவனங் களின் இந்தத் திடீர் ஸ்லோ-டவுனுக்கான காரணங்கள் என்ன?

உலக அளவில் நிலவும் பெரிய நிகழ்வுகள் – உக்ரைன் போர், தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், அதிகரிக் கும் வட்டி விகிதம், பொதுச் சந்தையில் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளின் செயல் பாடு, இதனால் தனியார் சந்தை முதலீட்டில் ஏற்பட் டிருக்கும் சுணக்கம் ஆகிய அனைத்தும் சேர்ந்து `துணிகர முதலீட்டாளர்களை’ (Venturue capitalist) அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

‘வென்ச்சர் கேப்பிடல்’ நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைப் பெற்ற 24 நிறுவனங்கள், பணியாளர் களை வேலையிலிருந்து நீக்கி இருக்கிறது; இந்த வருட ஆரம்பித்திலிருந்து தொழில் நுட்பத்துறை சார்ந்த ஸ்டார்ட் அப்கள் சுமார் 10,000 பேரை வேலையிலிருந்து நீக்கியிருக் கின்றன.

நன்கு நிதித் திரட்டல் செய்த Meesho, Unacademy, Vedantu and Cars24 போன்ற வைகூட இதற்கு விதிவிலக் கல்ல. நிதி நன்றாக இருக்கும் போது சில நிறுவனங்கள் தேவைக்கு அதிகமாக ஆட்களை நியமித்திருந்தன. அவை இப்போது சரிசெய்யப் படுவதாக மனிதவளத் துறையைச் சேர்ந்த ஆலோச கர்களில் சிலர் கூறுகிறார்கள்.

லாபம் என்றால் என்ன வென்றே தெரியாத பெரும்பாலான ஸ்டார்ட்அப்கள் இப்போது அது பற்றி உணர ஆரம்பித்திருப்பதுகூட இந்தப் பணி நீக்கத்துக்கான காரணமாக இருக்கலாம் எனச் சிலர் கருதுகிறார்கள். சுமார் 1,000 பேரை பணியிலிருந்து நீக்கிய பின் ‘அன்அகாடமி’யின் (Unacademy) துணை நிறுவனர் பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் `நாம் வரம்புகளுக்கு உட்பட்டு வேலை செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், எந்த நிலையிலும் லாபம் ஈட்டுவதையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டார்ட்அப்புகளில் வேலை பார்ப்பது என்பது திடீரென்று பணியாளர்களுக்கு `ரிஸ்க்’ ஆகி இருக்கிறது. குறிப்பாக, நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையில் வேலை பார்த்து வருபவர்களுக்கு.

சமீப காலத்தில் அதிகமாக நிதி திரட்டிய நிறுவனங் கள் எல்லாம் அதிகமாக செலவு ஏற்படக்கூடிய கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. இப்போது அந்த நிறுவனங்கள் எல்லாம் வேகமாக வளர்வதில் அக்கறை காட்ட ஆரம்பித்திருக்கின்றன. வளர்ச்சி இல்லையெனில், அடுத்த சுற்று நிதித் திரட்டல் என்பது முன்னிருந்ததுபோல அவ்வளவு எளிதாக இருக்காது.

ஸ்டார்ட்அப்களில் இரண்டு வகைகள் இருக் கின்றன. முதலாவதாக, கண்டிப்பாக வருவாய் ஈட்டக்கூடிய மாடல். இது எப்படியும் லாபம் சம்பாதிக்கும். எனவே, இதற்கான மதிப்பீடு அதிகமாக இருக்கும். இரண்டாவதாக, சில நிறுவனங்கள் `சிறப்பாக கதை சொல்லி’ தேவையான நிதியைப் பெற்றிருக்கும். ஆனால், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அவையெல்லாம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

நிதித் திரட்டுவதில் கடைசிக் கட்டத்தில் இருக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் வரை 59. இது அதற்கு முந்தைய ஐந்து மாதங் களின் எண்ணிக்கையான 36-ஐவிட அதிகம். ஆனால், திரட்டப்படவிருக்கும் நிதி 8 பில்லியன் டாலரிலிருந்து 5 பில்லியன் டாலராகக் குறைந்திருக்கிறது.

கடந்த 18 மாதங்களில் ஸ்டார்ட்அப் துறையில் தொடர்ந்து நிதி மோசடிகளும், கார்ப்பரேட் ஒழுக்கக்கேடுகளும் நடந்து வந்திருக்கின்றன.

படாடோபமான ஸ்டார்ட்அப்களான பாரத்பே, ட்ரெல், ஸிலிங்கோ ஆகியவற்றின் நிறுவனர்கள் மீது நிதிமுறைகேடுகள், ஆளுகை நியமனங்கள் மீறல் (violation of governance norms) போன்ற குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு இருக் கின்றன. இதனால், முதலீட்டாளர்கள் முதலீட்டு வாய்ப்புகளை சீர்தூக்கிப் (Due-diligence) பார்ப்பதற்கு முன்பு எடுத்துக்கொண்ட கால அவகாசத்தைவிட இப்போது அதிகம் எடுத்துக்கொள்கின்றன.

‘ஸ்லோ-டவுன்’ ஆகிவரும் ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள்... என்னதான் காரணம்?

இந்தியப் பங்குகளான ஸொமேட்டோ, பாலிசி பஜார், நைக்கா, பேடிஎம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்த மாதிரியான போக்கால் லிமிடெட் பார்ட்னர்களிடமிருந்து ‘வென்ச்சர் கேப்பிடல்’ நிறுவனங்கள் பணம் திரட்டுவது சிரமமாக இருக்கிறது.

பெயின் நிறுவனத்தின் 2022-ம் ஆண்டுக்கான இண்டியா வென்ச்சர் கேப்பிடல் அறிக்கையின்படி, இந்தியாவைச் சேர்ந்த ‘வென்ச்சர் கேப்பிடல்’ நிறுவனங்களுக்கு 2021-ம் ஆண்டு அபாரமான ஆண்டாகும். 2021-ம் ஆண்டு முதலீட்டாளர் களின் எண்ணிக்கை 665-ஆக இருந்திருக்கிறது. இது அதற்கு முந்தைய ஆண்டு இருந்த 516-ஐ விட அதிகம்.

புவிசார் அரசியல் பிரச்னை, ஒழுங்குமுறை நேரிடர் ஆகியவை சீனாவில் அதிகரித்து வருவதால், அதிக நுகர்வோர்களைக் கொண்ட சந்தையாக உலக முதலீட்டாளர்களுக்கு இந்தியா இருந்து வருகிறது.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, உலக அளவில் மேகம் சூழ்ந்திருந்தாலும் இந்தியாவின் டிஜிட்டல் ஜி.டி.பி குறிப்பிடத்தக்க அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இது பற்றி சமீபத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், `இணையத் தின் ஊடுருவலும் வருமானத்தின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் 2030-ம் ஆண்டில் சுமார் 800 பில்லியன் டாலரைத் தொடும்’ எனக் கூறியிருக்கிறார்.

ஸ்டார்ட்அப் தொழில் துறையை தற்சமயம் மேகம் சூழ்ந் திருந்தாலும் காற்றில் நம்பிக்கை யின் தீப்பொறிகள் இருக்கவே செய்கின்றன. எல்லாத் தொழிலுக்கும் நல்ல, கெட்ட காலங்கள் வந்துபோகத்தான் செய்யும். ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இப்போது ஏற்பட்டுள்ள கஷ்ட காலத்தை எப்படிக் கடந்துவரப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!