Published:Updated:

`சிறு சேமிப்புக்கான வட்டியில் மாற்றமில்லை' - மத்திய அரசின் முடிவால் மிடில் கிளாஸ் மக்கள் நிம்மதி!

Savings
Savings ( Photo by Micheile Henderson on Unsplash )

கடந்த ஐந்து காலாண்டுகளாக சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றங்களையும் செய்யாமல், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதத்தின்படியே வட்டியை வழங்கி வருகிறது மத்திய அரசாங்கம்.

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு அளிக்கப்பட்டுவரும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த காலாண்டில் அளிக்கப்பட்ட வட்டி விகிதமே இந்தக் காலாண்டிலும் (ஜூலை - செப்டம்பர்) தரப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் காலாண்டுக்கு ஒருமுறை மாற்றம் செய்துவரும் நடைமுறையைக் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசாங்கம் பின்பற்றி வருகிறது. ஆனால், கொரோனா உட்பட பல்வேறு காரணங்களால் சிறு சேமிப்புத் திட்டங்கள் மூலம் மக்களுக்கு ஏற்கெனவே கிடைத்துவரும் வட்டி விகிதமே தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறது மத்திய அரசாங்கம். இதனால், கடந்த ஐந்து காலாண்டுகளாக சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றங்களையும் செய்யாமல், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதத்தின்படியே வட்டியை வழங்கி வருகிறது.

 interest
interest
கொரோனாவால் வெகுவாகக் குறைந்த குடும்ப நிதி சேமிப்பு; பொருளாதாரம் இன்னும் ஆட்டம் காணுமா?

சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி எவ்வளவு என்று பார்ப்போம்.
- 1 - 3 ஆண்டுக் கால டைம் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதம் - 5.5%
- 5 ஆண்டுகளுக்கான டைம் டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதம் - 6.7%
- 5 ஆண்டு சீனியர் சிட்டிசன் சேவிங் ஸ்கீம் திட்டத்துக்கான வட்டி விகிதம் - 7.4%
- 5 ஆண்டு மாதந்தர வருமானம் கணக்கு திட்டத்துக்கான வட்டி விகிதம் - 6.6%

- 5 ஆண்டு நேஷனல் சேவிங் சர்ட்டிபிகேட் திட்டத்துக்கான வட்டி விகிதம் - 6.8%
- பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்துக்கான வட்டி விகிதம் - 7.1%
- கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்துக்கான வட்டி விகிதம் - 6.9% (124 மாதங்களில் முதிர்ச்சி அடையக் கூடியது.)
- சுகன்யா சம்ருதி யோஜனா திட்டத்துக்கான வட்டி விகிதம் - 7.6%

Savings
Savings
சேமிப்பு மட்டும் போதுமா... 
பணத்தைப் பெருக்க என்ன வழி? - 
நிதி ஆலோசகரின் வழிகாட்டல்!

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கும் அறிவிப்பைக் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அன்று வெளியிட்டது மத்திய அரசாங்கம். ஆனால், கடந்த ஏப்ரலில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வட்டியைக் குறைத்தால், மக்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்று நினைத்த மத்திய அரசாங்கம் வட்டி விகிதத்தைக் குறைக்கும் அறிவிப்பை உடனே வாபஸ் வாங்கியது.

இந்நிலையில், இந்த காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு காரணமாக மக்களின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளதால், சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டியை இப்போது குறைப்பது சரியாக இருக்காது என்பதால், ஏற்கெனவே அளிக்கப்பட்டு வந்த வட்டி விகிதமே தொடர்ந்து அளிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்திருப்பதைக் கண்டு நடுத்தர வர்க்கத்து மக்கள் நிம்மதி அடையலாம்.
ஆனால், மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் - டிசம்பர்) சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு