Published:Updated:

சாஃப்ட்வேர் உருவாக்கம்... தமிழில் கற்றுத்தரும் ஸ்டார்ட்அப்..! கலக்கும் சென்னை நண்பர்கள்...

ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

S T A R T U P

சாஃப்ட்வேர் உருவாக்கம்... தமிழில் கற்றுத்தரும் ஸ்டார்ட்அப்..! கலக்கும் சென்னை நண்பர்கள்...

S T A R T U P

Published:Updated:
ஸ்டார்ட்அப்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டார்ட்அப்

கோவிட்டுக்குப் பிறகு இணையவழி கற்றல் என்பது அதிகரித்திருக் கிறது. ஆனால், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான வேலையைத் தொடங்கியிருக்கிறது குவி (Guvi) நிறுவனம். பேபால் நிறுவனத்தில் வேலை பார்த்த நண்பர்களான பாலமுருகன், ஶ்ரீதேவி மற்றும் அருண் பிரகாஷ் ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனம்தான் குவி. (சில மாதங் களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ஶ்ரீதேவி மரணம் அடைந்தது வருத்தத்துக்குரிய நிகழ்வு).

சென்னை ஐ.ஐ.டி ரிசர்ச் பார்க்கில் அமைந்திருக்கும் குவி அலுவலகத்தில் நிறுவனர்கள் இருவரையும் சந்தித்தோம். குவி நிறுவனம் உருவான விதம் மற்றும் நிதி திரட்டல் மற்றும் அடுத்தகட்ட திட்டம் எனப் பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்கள் அவர்கள். முதலில், குவி என்பதற்கு என்ன அர்த்தம் என்று சொன்னார்கள். ‘Grab Your Vernacular Imprint’ என்பதன் சுருக்கமே GUVI. அதாவது, தாய்மொழியில் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்வது.

ஸ்டார்ட்அப் நண்பர்கள்
ஸ்டார்ட்அப் நண்பர்கள்

what தெரிகிறது; why-ம் how-ம் தெரியவில்லை...

‘‘நாங்கள் மூவரும் பேபால் நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தோம். அப்போது கேம்பஸ் தேர்வில் மாணவர்களைத் தேர்வு செய்வதற்காக நாங்கள் பல கல்லூரி களுக்குச் சென்றோம். அப்போது சிறு நகரங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களிடம் உரையாடும்போது அவர்களின் திறன் வேறு மாதிரி இருந்தது. கோடிங் எழுதுவது குறித்து அவர்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அதை எங்கு பயன்படுத்த வேண்டும், எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. What என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் Why, how என்பது அவர் களுக்குத் தெரியவில்லை. இதற்குக் காரணம், அவர்களுக்கு சரியாகச் சொல்லித் தரப்படாததால், அவர்கள் அதைப் புரிந்து படிக்கவில்லை.

நேர்முகத் தேர்வுக்குப் பிறகு மாணவர்களுடன் சகஜமாகப் பேசிய போது, அவர்கள் படிக்கும் முறை புரிந்தது. அதனால் எங்களுடைய போன் நம்பரைக் கொடுத்துவிட்டு வந்தோம். சென்னை வந்த பிறகு, அவர்களுக்கு ஒரு வீடியோ லிங்க் அனுப்பி வைத்தோம். அதைப் பார்த்த பிறகும் அவர்களுக்கு புரியவில்லை என போன் செய்தனர். கொஞ்சம் மெனக்கெட்டு அந்த வீடியோவில் உள்ளதை அவர்களுக்கு புரியும்படி சொல்லிக் கொடுத்த போது, அட, இவ்வளவுதானா என்றார்கள்.

இதுபோல, ஒவ்வொருவருக்கும் நாம் விளக்க முடியாது என்பதால், அதை வீடியோவாக எடுத்து, யூடியூபில் வெளியிட்டோம். தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள் தான் பார்த்திருப்பார்கள் என நினைத்தேன். ஆனால், வெளிநாடு களில் உள்ள பலரும் பார்த்தார்கள் என்று தெரிந்தபோது இன்ப அதிர்ச்சி. ஒரு சில வாரங்களில் மில்லியன் பார்வையாளர்களைத் தொட்டி ருந்தது அந்த வீடியோ.

தமிழில் சொல்லிக் கொடுங்கள்...

ஐ.டி நிறுவனங்களில் பணியாற்று பவர்களிடம் பேசியபோது, ‘எங்களுக்கு கோடிங் தெரியும். இருந்தாலும் தமிழ் மொழியில் இருந்தால், எங்களால் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்’ எனச் சொன்னார்கள். படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பயன் படாமல் வேலையில் இருப்பவர் களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பது புரிந்தது. அதனால் சாப்ஃட்வேர் துறையில் உள்ள முக்கியமான சப்ஜெக்ட்டுகளை வீடியோவாக வெளியிட்டோம். நல்ல வரவேற்பு இருந்தது.

நாங்கள் நிறுவனத்தைத் தொடங்கியது 2015-ம் ஆண்டுதான். ஆனால், 2011-ம் ஆண்டு முதல் பல வீடியோக்களை வெளியிட்டிருக்கிறோம். நிறுவனம் தொடங்குவதற்கு முன்பாகச் சில மாணவர்கள் பணம் கட்டி இதைக் படிக்க முன்வந்தனர். அப்போதுதான் இதை ஒரு தொழிலாக மாற்ற முடியும் என்பது தெரிந்தது.

அப்போது ஐ.ஐ.டி ரிசர்ச் பார்க் குறித்து தெரிந்துகொண்டோம். பேராசிரியர் அசோக் ஜுன்ஜுன் வாலாவை சந்தித்தோம். எங்களுடைய ஐடியா அவருக்குப் பிடித்திருந்ததால், அங்கு இடம் கிடைத்தது. நாங்கள் மூவரும் மொத்தமாக வேலையை விடவில்லை. முதலில் ஶ்ரீதேவி வேலையை விட்டார். அடுத்து ஒவ்வொருவராக வேலையை விட்டு நிறுவனத்தில் இணைந்தோம்.

கல்லூரியை நோக்கி...

இந்தப் பாடத் திட்டத்தைக் கல்லூரி களுக்குக் கொண்டுசெல்ல வேண்டும் எனத் திட்டமிட்டோம். நிறுவனம் தொடங்கும் சமயத்தில் தனித்தனியாக மாணவர்களைச் சென்றடைவதைவிட கல்லூரிகள் மூலம் மாணவர்களைச் சென்றடைவது எளிதான வழி என்பதால், கல்லூரிகள் மூலம் எங்களுடைய புராடக்டுகளை விற்கத் தொடங்கினோம். ஆரம்பத்தில் அது அவ்வளவு எளிதாக இல்லை.

வாங்குபவருக்கும் பயன்படுத்துபவர் களுக்கும் இடையேயான வித்தியாசத்தை இப்போதுதான் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். பயன்படுத்து பவர்கள் மாணவர்களாக இருந்தாலும் கல்லூரிகள்தான் வாங்கும் முடிவை எடுக்கின்றன. கல்லூரிகள் வாங்க வேண்டும் எனில், மாணவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். அப்போது தான் கார்ப்பரேட் நிறுவனங்களையும் இணைத்தோம்.

எங்களது கோர்ஸை யார் படிக்கிறார் கள், அவர்களின் திறனை அளக்க முடியுமா என்பதை ஆராய்ந்து, நிறுவனங் களையும் தகுதி வாய்ந்த மாணவர்களையும் இணைத்தோம். இதனால் கல்லூரிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழகத்தில் உள்ள பல கல்லூரி மாணவர்கள் எங்கள் கோர்ஸை படித்தார்கள். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் சாஃப்ட்வேர் சொல்லிக் கொடுத்தோம்.

சாஃப்ட்வேர் பயிற்சி
சாஃப்ட்வேர் பயிற்சி

கல்லூரி வேண்டாம்...

கடந்த ஆண்டு ஜனவரியில் கல்லூரிப் பிரிவிலிருந்து வெளியேறும் முக்கிய முடிவை எடுத்தோம். கல்லூரிகள் மூலமாக சீரான வருமானம் கிடைக்கிறது என்றாலும், மாணவர்கள் என்ன படிக்க வேண்டும், எப்போது படிக்க வேண்டும் என்பது கல்லூரிகள் மூலமே நடக்கிறது. எங்களிடம் போதுமான கோர்ஸ் கள் உள்ளன. அதனால் நாம் நேரடியாக மாணவர்களிடம் செல்லலாம் என முடிவெடுத்தோம். அதேபோல, இந்த கோர்ஸ்களை படிக்கும் மாணவர்கள் கற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் அதை எப்படி அடுத்த கட்டத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கேற்ப தொழில்நுட்பத்தை வடிவமைத் தோம். உதாரணமாக, வீடியோ கேம் விளையாடும்போது எப்படி அடுத்த லெவலுக்குச் செல்கிறோமோ, அதேபோன்ற படிநிலையைக் கற்றுக்கொள்வதற்கும் நாங்கள் வடி வமைத்தோம்.

கல்லூரிகள் வேண்டாம் என நாங்கள் முடிவெடுத்த சில நாள்களில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. இந்த சமயத்தில் எங்களுடைய அத்தனை கோர்ஸ்களையும் இலவசமாக (2020, ஏப்ரல் 15-ம் தேதி வரை) பயன்படுத்திக்கொள்ள முடியும் அறிவித்தோம். சில லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர்.

இப்போதைக்கு எங்கள் மூலமாக நேரடியாக மாணவர்கள் தேவையான கோர்ஸைக் கற்றுக்கொள்ள முடியும். கற்றுக் கொள்வது மட்டுமல்லாமல், அந்த கோர்ஸில் எவ்வளவு மதிப்பெண் அல்லது எவ்வளவு தூரம் கற்றுக்கொண்டிருக் கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும். கார்ப்பரேட் நிறுவனங் களில் தேவை இருப்பின் இந்த மாணவர்களுக்கு நேரடியாக வேலையும் கிடைக்கும்.

அடுத்ததாக, ஜென்கிளாஸ் என்னும் புதிய புராடக்டை சமீபத்தில் அறிமுகம் செய்தோம். இதர ஆன்லைன் கோர்ஸ்களில் மாணவர்கள் நேரடியாகக் கற்றுக் கொள்ள முடியும். தேர்வுகளின் மூலம் அடுத்தடுத்த நிலையை அடைய முடியும். ஆனால், ஜென்கிளாஸ் என்பது ஒரு மென்ட்டாருடன் நேரடியாக உரையாடுவது. ஐ.டி நிறுவனத்தில் நேரடியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களுடன் நேரடியாக உரையாடி மாணவர் கள் கற்றுக் கொள்வதாகும்.

ரூபாய் 6 கோடிவரை முதலீடு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டினோம். கோவிட் காலத்தில் ஆறு கோடி ரூபாய் நிதி திரட்டினோம். இந்த நிதியை விரிவாக்கப் பணிகள் மற்றும் தொழில்நுட்பத்துக்குச் செலவு செய்ய இருக்கிறோம்.

இதுவரை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமே எங்களுடைய கோர்ஸ்கள் உள்ளன. இனி வெளிநாட்டு மொழிகளில்கூட சாஃப்ட்வேர் உருவாக்கம் பற்றி சொல்லிக் கொடுக்கத் திட்டமிட்டு வருகிறோம். அரபி, கிழக்காசிய மொழிகள் எனச் சில திட்டங்கள் வைத்திருக்கிறோம்.

எங்கள் சேவையை இதர மொழிகளிலும் தர செய்யத் திட்டமிட்டிருந்தாலும், இப்போதைக்கு சாஃப்ட்வேரில் மட்டுமே கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறோம். இதர பாடங்களில் களம் இறங்குவது குறித்த திட்டம் இப்போது இல்லை’’ என்ற பாலமுருகனும் அருண் பிரகாஷும் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லி பேசி முடித்தார்கள்.

‘‘ஒரு காலத்தில் ஆப்டியூட் மற்றும் கம்யூனிகேஷன் ஸ்கில் வேலையில் முக்கியப் பங்கு வகித்தது. ஆனால், இவையெல்லாம் வேலைக்கான முதல் படிதான். அடுத்தடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்றால், கோடிங் எழுதுவதில் பலமாக இருக்க வேண்டும். அந்தப் பலத்தை தாய்மொழியில் கற்றுக் கொள்வதன் மூலம் கிடைக்கும்.

ஒவ்வொருவருடைய தாய்மொழியில் சாப்ஃட்வேர் சொல்லிக் கொடுப்பதில் மகிழ்ச்சி. இது நமது சமூகத்தையும் தொழில்நுட்பத்தையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் என்பதே எங்கள் நம்பிக்கை’’ என்றபடி நமக்கு விடை கொடுத்தார்கள் அவர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism