பிரீமியம் ஸ்டோரி

ஓர் இளைஞன், மருத்துவரிடம் வந்தான். “எனக்கு எப்போதும் தலையை வலிக்கிறது’’ என்றான்.

“உங்களுக்கு பிரச்னைகள் அதிகமா?” என்று கேட்டார் மருத்துவர். “ஆமாம், தொழிலில் எண்ணற்ற பிரச்னைகள் உள்ளன டாக்டர்” என்றார் இளைஞன்.

இராம்குமார் சிங்காரம்
இராம்குமார் சிங்காரம்

மருத்துவருக்குப் புரிந்தது, இது உடல்நோய் அல்ல, மனநோய் என்று. அதை வந்தவருக்குப் புரிய வைக்க வேண்டுமே... எனவே, தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு டம்ளரைத் தந்து, அதைக் கையில் பிடித்திருக்கச் சொன்னார்.

ஒரு நிமிடம் ஆனது. இரண்டு நிமிடங்கள் முடிந்தன. இளைஞனுக்கு லேசாக கை வலிக்கத் தொடங்கியது.

“டாக்டர், கை வலிக்கிறது...” என்றான் இளைஞன். “பரவாயில்லை, இன்னும் கொஞ்சம் நேரம் பிடித்திருங்கள்...” என்றார் டாக்டர். மூன்று... நான்கு... ஐந்து நிமிடம் முடிந்தது. இளைஞன் வெறுத்துப்போய், “டாக்டர், கை அதிகம் வலிக்கிறது...” என இளைஞன் அலற ஆரம்பித்தான்.

டாக்டர் டம்ளரைக் கீழே வைக்கச் சொல்லிவிட்டு, சொன்னார். “உங்கள் நோய்க்கான காரணமும் இதுதான். நீங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணாமல் சுமந்துகொண்டே இருப்பதால், அவை உடம்பில் வலியை உண்டாக்கிவிட்டன. அவற்றை ஆராய்ந்து உடனடியாகத் தீர்வு கண்டிருந்தால், வலித் தொல்லையால் நீங்கள் அவதிப்பட்டிருக்க மாட்டீர்கள்’’ என்றார்.

பிரச்னைகளைச் சுமக்காதீர்கள்!

நம் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டபின், வளர்ச்சிக்கான யோசனைகளைச் சிறப்பாகச் செய்யலாம். மற்றவர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டால், நமக்கு புதிய பிசினஸ் வாய்ப்புகள் உருவாகலாம். பேருந்து தாமதமாக வருகிறது என்ற பிரச்னைதான், ராபிடோ பைக் சவாரி நிறுவனம் உருவாகக் காரணம். ஊபர், ஓலா ஸ்விக்கி, ஸொமேட்டோ என எல்லா நிறுவனங்களும் உருவாகி ஜெயிக்கக் காரணம், மற்றவர்களின் பிரச்னைகளைத் தீர்த்ததால்தான். பிரச்னைகளை சுமக்காமல், தீர்வு காண முயன்றால், மிகப் பெரிய பிசினஸ் ஐடியா உங்களுக்குக் கிடைக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு