Published:Updated:

80 விமானிகளுக்கு 3 மாதங்கள் சம்பளமின்றி விடுப்பு; `ஷாக்’ கொடுத்த ஸ்பைஸ்ஜெட் - என்ன காரணம்?

ஸ்பைஸ்ஜெட்

``செலவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக 80 விமானிகளுக்கு 3 மாதங்கள் ஊதியமில்லாத கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.''

80 விமானிகளுக்கு 3 மாதங்கள் சம்பளமின்றி விடுப்பு; `ஷாக்’ கொடுத்த ஸ்பைஸ்ஜெட் - என்ன காரணம்?

``செலவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக 80 விமானிகளுக்கு 3 மாதங்கள் ஊதியமில்லாத கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.''

Published:Updated:
ஸ்பைஸ்ஜெட்

ஹரியானாவை தலைமையிடமாகக் கொண்ட ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம், செலவைக் குறைக்கும் நோக்கத்தில், 80 விமானிகளுக்கு 3 மாதகாலம் சம்பளம் இல்லாத விடுப்பு அளித்துள்ளது. தங்களின் இந்த நடவடிக்கை, தற்காலிகமானது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

யாரையும் வேலையைவிட்டு அனுப்பவில்லை என்று அந்நிறுவனம் விளக்கம் அளித்திருந்தபோதிலும், மீண்டும் அவர்கள் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவது குறித்து மிக உறுதியான எந்த அறிவிப்பும் இல்லை என்ற சர்ச்சையும் சுழல்கிறது. கடந்த ஜூன் வரையான காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு 784 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை அடுத்து அந்நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

80 விமானிகளுக்கு 3 மாதங்கள் சம்பளமின்றி விடுப்பு; `ஷாக்’ கொடுத்த ஸ்பைஸ்ஜெட் - என்ன காரணம்?

இது தொடர்பாக அந்நிறுவனம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ``கோவிட் தொற்றுநோயின் உச்சக் கட்டத்தின்போதுகூட எந்தவோர் ஊழியரையும் பணிநீக்கம் செய்யக் கூடாது என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கொள்கை கொண்டிருந்தது. அதே கொள்கையில் இப்போதும் உறுதியோடு உள்ளோம். நிறுவனத்தின் செலவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக 80 விமானிகளுக்கு 3 மாதங்கள் ஊதியமில்லாத கட்டாய விடுப்பு அளிக்கப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட விமானிகள், போயிங் மற்றும் பாம்பார்டியர் கடற்படையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய விமானியொருவர், ``நிறுவனத்தின் நிதி நெருக்கடி எங்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் இந்த திடீர் முடிவு எங்களில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இப்போது மூன்று மாதங்களுக்கு தற்காலிக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பிறகும்கூட நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கும். விடுப்பில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்பதில் எந்த உறுதியும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், ``விரைவில் MAX விமானச் சேவையை தொடங்க உள்ளதால், இப்போது அனுப்பப்படும் விமானிகள், அதற்குப் பணி செய்ய விரைவில் சேர்த்துக்கொள்ளப்படுவர்" என்று கூறியுள்ளது.

Spice Jet
Spice Jet

இந்த சம்பளமில்லா விடுமுறை காலத்தின் போதும்கூட, அந்த விமானிகளுக்கு மற்ற பணியாளர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் கிடைக்குமென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து காப்பீட்டுப் பலன்கள் மற்றும் பணியாளர் விடுப்புப் பயணத்திற்கும் தகுதியுடையவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்று ஸ்பைஸ்ஜெட் உறுதியளித்துள்ளது. குறிப்பிட்ட சில விமானிகளை சம்பளமில்லா விடுப்பில் அனுப்பிய பிறகும்கூட, டிஜிசிஏ-வின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்றபடி ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தங்களுக்குத் தேவையான அளவில் விமானிகளைக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

- இன்பென்ட் ஷீலா