Published:Updated:

`நம்பர் 1 மாநிலம்' இலக்கு, தொழிலதிபர்களின் புலம்பல்; கோவை முதலீட்டாளர்கள் மாநாடு ஹைலைட்ஸ்!

``முதலமைச்சர்களில் முதலிடத்தை தான் பிடித்திருப்பதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. அதில் அதிகாரிகள், அமைச்சர்களுக்கும் பங்குண்டு. நம்பர் 1 முதலமைச்சர் என்பதை விட, நாட்டிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் என்று சொல்ல வைப்பதே எங்கள் நோக்கம்." - தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக கோவை வந்திருந்தார். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் உள்நாடு மற்றும் வெளிநாடு தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 35,820 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

கோவை முதலீட்டாளர்கள் மாநாடு
கோவை முதலீட்டாளர்கள் மாநாடு
தமிழகத்தின் ட்ரில்லியன் டாலர் கனவு; `ஐடியா பட்டறை'யில் தயாரான 250 தொழில்முனைவோர்கள்!

இதன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 59 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, அதன் மூலம் 76,795 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, மென்பொருள் நிறுவனமான `டசோ சிஸ்டம்ஸ்' சார்பில் வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கான உற்பத்தியை மேம்படுத்தும் திறன்மிகு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

நிகழ்ச்சியில் பேசிய மு.க. ஸ்டாலின், ``மக்கள் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் மூன்றாவது முறையாக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. சோதனையான காலத்தில்கூட ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளோம். இதே வேகத்தில் சென்றால், விரைவில் தமிழ்நாடு முதலிடத்தை பிடிக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதலமைச்சர்களில் முதலிடத்தை தான் பிடித்திருப்பதாக கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. அதில் அதிகாரிகள், அமைச்சர்களுக்கும் பங்குண்டு. நம்பர் 1 முதலமைச்சர் என்பதை விட, நாட்டிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலம் என்று சொல்ல வைப்பதே எங்கள் நோக்கம். ஒரு ட்ரில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கையை இந்த மாநாடு ஏற்படுத்தியுள்ளது.

கோவை முதலீட்டாளர்கள் மாநாடு
கோவை முதலீட்டாளர்கள் மாநாடு

கோவையில் தொட்டுத் துலங்காத தொழில்கள் இல்லை. வான்வெளி, பாதுகாப்பு துறை சார்ந்த உற்பத்தி பொருள்களைத் தயாரிக்கும் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாட்டின் மொத்த பங்களிப்பில் 25% தமிழகத்திலிருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. தொழில் துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதும், முதலீட்டாளர்கள் மேடையில் ஏறி ஒப்பந்த நகலை வாங்கிக் கொண்டனர்.

வரிசையில் நின்ற முதலீட்டாளர்கள்
வரிசையில் நின்ற முதலீட்டாளர்கள்
சினேகாவுக்கு நடந்தது உங்களுக்கும் நடக்காமல் இருக்க..? முதலீட்டில் இந்த 5 விஷயங்களைக் கவனியுங்க!

ஆனால், இந்த விஷயத்துக்கு போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததால், முதலீட்டாளர்கள் மேடைக்கு செல்ல நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதாகிவிட்டது. ``பல்லாயிரம் கோடி முதலீடு பண்றவங்களை இப்படியா நிக்க வைப்பீங்க...'' என்று தொழிலதிபர்கள் சிலர் குமுறியபடி சென்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு