திருச்சி மாநகரில் உயர்தர செட்டிநாடு உணவகம் நடத்தும் என் நண்பர் சில மாதங்களுக்கு முன் அழைத்திருந்தார். உணவகத் தொழிலில் மிகவும் கெட்டிக்காரர் அவர். தூய்மைக்கும் சுவைக்கும் மிகவும் மெனக்கெடுவார். 24 மணி நேரமும் உணவகத்தைத் தவிர வேறு சிந்தனையே செய்யாதவர். பல நேரங்களில் சமையல் மாஸ்டராக அவரையே சமையற்கூடத்தில் பார்க்கலாம்.

உள்ளூர் வாடிக்கையாளர்களிடம் மட்டுமல்ல... இலங்கை மற்றும் மலேசியாவில் உள்ளவர்களிடமும் நன்கு தொடர்பில் இருப்பவர். அதன் மூலம் உணவகத்தை லாபகரமாகவே நடத்திக்கொண்டிருந்தார். இருந் தாலும் கடின உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க வில்லை என்கிற குறை மட்டும் அவரிடம் இருந்தது.

அவருடைய அனுபவத்தின் காரணமாகவும், தொழிலின் மீதுள்ள நம்பிக்கையாலும் புதிய யுக்திகளை (Strategy) நம்ப மாட்டார். அவையெல்லாம் வீண் செலவு என்கிற பொதுவான எண்ணம் அவருக்குண்டு.

இப்போது அவருடைய அழைப்பைக் கண்டவுடன் எனக்குத்தான் ஆச்சர்யம். `இந்த மனுஷன் காலத்துக்கேற்ப மாறாதவர் ஆயிற்றே... ஏன் வரச் சொல்லியிருக்கார்?' என்கிற யோசனையுடன் திருச்சியை அடைந்தேன்.

`உடனடியாக ஒரு யுக்தி (Strategy) வேண்டும்' என்றும், `அதே நேரத்தில் தான் அதிகம் செலவழிக்க விரும்பவில்லை' என்றும் விஷயத்தை வெளிப்படையாகக் கூறினார் அவர்.

நான் சென்ற நேரத்தில், சராசரியாக தினசரி நாற்பதாயிரம் - ஐம்பதாயிரம் ரூபாய் என்கிற அளவில் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

திருச்சியிலே இரண்டு நாள்கள் தங்கியிருந்து உணவகத்தின் விற்பனை முறைகளை (Sales Methods) ஆய்வு செய்தேன். அதே நேரத்தில் அருகில் உள்ள போட்டியாளர் உணவகத்தையும் ஆய்வுக்கு (Competitor Analysis) உட்படுத்தினேன்.

நண்பர் உணவகத்தின் தரம், சுவை, அளவு என அனைத்தும் நன்றாகவே இருந்தது. உணவுகளின் விலையையும் உள் அலங்காரத்துக்கு ஏற்றாற்போல நியாயமாகவே நிர்ணயம் செய்திருந்தார்.

சரி... சிறிய செலவில் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம் என்று முடிவுசெய்து எனது வேலையை ஆரம்பித்தேன்.

உணவுகளைச் சிறப்பாக போட்டோ எடுக்கும் நபரை (Professional Food Photographer) சென்னையிலிருந்து வரவழைத்து, உணவகத்தில் பரிமாறும் அனைத்து உணவுகளையும் அலங்கரித்து போட்டோ எடுக்க ஏற்பாடு செய்தேன். எந்த ஓர் உணவும் வெறும் பெயராக மட்டுமே இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்தேன்.

உணவுப் புகைப்படக் கலைஞர்கள் அந்த உணவு அப்படியே நேரில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுப்பதில் வல்லவர்கள். அப்படிப்பட்ட புகைப்படங்கள் எடுக்கப்பட்டவுடன் புதிய மெனு கார்டை ஒரு புத்தகமாகவே உருவாக்கிக் கொடுக்கும்படி டிசைனரிடம் பணியைக் கொடுத்துவிட்டு சென்னைக்குத் திரும்பினேன்.

புதிய மெனுகார்டு டெலிவரி செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு உணவக நண்பரிடம் இருந்து அழைப்பு வந்தது. அவரது குரலில் மகிழ்ச்சியை உணர முடிந்தது.

ஆம்... `ஒவ்வொரு நாளும் விற்பனையில் பதினைந்தாயிரம் ரூபாய் வரை அதிகமாகியிருக்கிறது' என்றார் அவர். மேலும், `வாடிக்கையாளர்கள் உணவின் படத்தைப் பார்த்து ஈர்க்கப்படுவதால் ஆர்டர் பெறுவது எளிதாக இருக்கிறது. படங்களைப் பார்க்கும்போதே அவர்களின் நாவில் நீர் ஊறுகிறது' என்று குதூகலத்துடன் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு குடும்பமும் இரண்டு அல்லது மூன்று அயிட்டங்களுக்கு அதிகமாகவே ஆர்டர் செய்வதாகக் கூறினார். புதிய விஷயங்களுக்காகச் செலவு செய்த பணத்தை 10 நாளில் திரும்ப எடுத்துவிட்டதாகவும் கூறி சந்தோஷப்பட்டார்.

தனது தொழில்மீது அளப்பரிய சந்தோஷம் பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்ததாகவும், அடுத்து ஒரு கிளையைத் தொடங்குவது பற்றிச் சிந்திப்பதாகவும் கூறி போனை வைத்தார்.

காட்சிப்படுத்த (Visualzation) முடியாத எந்த ஒரு பொருளையும் மூளைக்குக் கொண்டு செல்வது மிக சிரமமான காரியமாகும். ஒரு பொருளை வெறும் வார்த்தைகளால் வாடிக்கையாளர் உணர்வதற்கும், அதையே உருவமாகப் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதனால்தான் சினிமா என்பது காட்சிப்படுத்தலின் மூலம் நம்மைக் கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் பல வருடமானாலும் நம்மால் பல திரைப்படக் காட்சிகளை நினைவில்வைத்துக்கொள்ள முடிகிறது.

நண்பரின் பழைய உணவக மெனு அட்டை வெறும் வரிகளாக உணவின் பெயரையும், சில இடங்களில் அதன் விளக்கத்தையும் கொண்டிருந்தது.

நிறைய உணவகத் தொழில்முனைவோரின் கவலை `என்னிடம் நிறைய அயிட்டங்கள் உள்ளன. இவை அனைத்தையும் காட்சிப்படுத்தினால் மிகப்பெரிய புத்தகமாக மாறிவிடும்' என்பதே. அதனால் என்ன? இருந்துவிட்டு போகட்டுமே!

10 அல்லது 20 பிரதிகள் மட்டுமே தயாரிக்கப் போகிறீர்கள். செலவும் அதிகம் ஆகாது. உருவகப் படுத்தலின் சூட்சமத்தை உணர்ந்தால் விற்பனையை எளிதாக உயர்த்தலாம்.

ஒரு புதிய யுக்தியின் மூலம் இன்சூரன்ஸ் விற்பனையில் கலக்கும் பெண்மணியைப் பற்றி வரும் இதழில் காணலாம்!