அமேசான் நிறுவனத்தின் அதிபர், 130 பில்லியன் டாலர்... அதாவது, சுமார் ரூ.10 லட்சம் கோடிக்குச் சொந்தக்காரர்.

ஃபேஸ்புக் அதிபர் மார்க் ஸக்கர் பெர்க், 88 பில்லியன்... அதாவது, ரூ.6.5 லட்சம் கோடிக்கு உரிமையாளர். இந்தப் பணக்காரர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், நீங்கள் ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள். சேமிப்பு பெரிதாக ஒன்றுமில்லை. மாதச்செலவு எப்போதும் சரியாகவே இருக்கிறது. கிரெடிட் கார்டு கடன்கள் வேறு. ஒரு பெரிய பணக்காரராக வேண்டும் என மனம் சொல்லிக்கொண்டே இருக்கும். அந்தக் கனவுகளுடன் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கலாம்.

பெரிய பணக்காரர்கள், இவ்வளவு பெரிய தொகையை எப்படி அடைந்தார்கள்? நிறைய கோடீஸ்வரர்கள், மிகவும் சின்ன வயதுக் காரர்களாகக்கூட இருக்கிறார்கள். அவர்கள் மட்டும் எப்படி இந்த நிலையை அடைய முடிந்தது? பல நேரங்களில் உங்களுக்கு வெறுப்பும் கோபமும்கூட வந்திருக்கும். ‘அதிர்ஷ்டம் இல்லை’ என்ற உணர்வு வந்து போகும். ஒரு வசதியான வீடு, விருப்பப்பட்ட பெரிய கார், உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பம்... எல்லாமே ஒவ்வோர் ஆண்டும் கனவாகவே கரைந்துகொண்டிருக்கும். ஏறக்குறைய வாழ்க்கையே பெரிய ஏமாற்றத்தை அளித்துவிட்டது போன்ற ஓர் உணர்வுக்கு நீங்கள் வந்திருக்கலாம். ‘இவை எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான்’ என்று சொன்னால், ஒப்புக்கொள்வீர்களா?

மற்றவர்களால் பணம் சேர்த்த மாதிரி, ஏன் நம்மால் சேர்க்க முடியாது... அதற்கு வழிகள் இருக்கின்றன. ஆம், பெரும்பணத்தை அடைவதற்கு ஒரு ரகசிய ஃபார்முலா, அறிவியல்பூர்வமாகவே இருக்கிறது. அது மட்டுமே பெரும்பணத்தை மிக எளிதாக உங்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் எனச் சொன்னால் நம்புவீர்களா... காரணம், நீங்கள் செல்லும் பாதை கடினமாகவும் மேடு பள்ளங்களை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.

எந்த ஒரு பள்ளிக்கூடமும், ஏன் நமது சமூகமும் சொல்லித்தராத ஓர் உண்மை என்னவென்றால், வாழ்க்கை பெரும்பாலும் போராட்டங்களாகவே சென்று முடியும் என்பதே. உங்களுக்கு உணவாக அளிக்கப்பட்ட பொய்கள் பணத்தைப் பற்றிய உங்கள் எண்ணம் என்ன? வேலை செய்வதால் கிடைப்பதா... பரம்பரையாக முன்னோர்கள் சொத்து சேர்த்து வைப்பதன் மூலம் கிடைப்பதா... இல்லாவிடில், மோசடி வழிகளில் மட்டுமே பணத்தைச் சேர்க்க முடியும் என நினைக்கிறீர்களா...

பெரும்பாலானோருக்குப் பணத்துக்காக ஓடுவதிலே வாழ்க்கை முடிவடைகிறது.

பணத்தைச் சேர்ப்பது நமது சூழ்நிலையைப் பொறுத்தே அமைகிறது. அதைத் துரத்துவதினால் கண்டிப்பாக அடைய முடியாது. நாம் படித்த பள்ளியில் இதைப் பற்றி ஏனோ ஒரு நாளும் சொல்லித் தரவில்லை.

தற்போது பணத்தைப் பார்க்கும் விதத்தை முழுவதுமாக மாற்றியமைத்தால், பணம் சேர்வதை யாராலும் தடுக்க முடியாது. அது ஒரு யதேச்சையான செயலாகவே நடக்க ஆரம்பிக்கும்.

சினிமாவில் பெரும்பாலும் பணக்காரர்களை மோசடி மூலம் வளர்ந்தவர்களாகவே பார்த்துப் பழகிவிட்டோம். மனத்தின் ஓரத்தில் எங்கோ ஒரு மூலையில் பணம், அதன் மூலம் சாத்தியமா என்ற உணர்வு இருந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபத்திய ஒரு சர்வே சொல்கிறது. உலகில் உள்ள பெரும் பணக்காரர்களில் 68 சதவிகிதம் பேர் அவர்களின் சொந்த முயற்சியினால் வெற்றியடைந்த முதல் தலைமுறை பணக்காரர்கள் என்று.

வாரன் பஃபெட் (Berkshire Hathaway), ஜெஃப் பெசோஸ் (Amazon), அம்பானி (Reliance Industries), பைஜு ரவிச்சந்திரன் (Byju), ஸ்ரீதர் வேம்பு (Zoho) இவர்களுக்கெல்லாம் தெரிந்த ஒன்று, ஏன் நமக்குத் தெரியவில்லை... நாம் தேர்ந்தெடுத்த ஃபார்முலா தவறானது.

பணம் = வேலையில் இருந்து பெறும் சம்பளம்

நமது கல்வித் திட்டம் அனைத்தும் வேலையைப் பெறுவதற்கான முறையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. மேலே சொன்ன வேலையிலிருந்து பணம் சம்பாதிக்கலாம் என்ற ஃபார்முலா சத்தியமாக உங்களை பெரும் பணக்காரராக ஆக்காது. வேலைக்கான சம்பளம் என்பது நீங்கள் எவ்வளவு நேரம் உழைக்கிறீர்கள் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.25,000 ரூபாய் மாத சம்பளம் பெறும் ஒருவர், ஒரு கோடி ரூபாய் சேர்ப்பதற்கு, 33 வருஷங்கள் உழைக்க வேண்டியிருக்கும்.

25,000 ரூபாய் மாத சம்பளம் பெறும் ஒருவர், ஒரு கோடி ரூபாய் சேர்ப்பதற்கு, 33 வருஷங்கள் உழைக்க வேண்டியிருக்கும்.

நீங்கள் தற்போது வாங்கும் சம்பளத்துடன் உங்களை ஒப்பிட்டுக்கொள்ளலாம். மொத்த சம்பளத்தையும் கணக்கிட்டால், பெரும்பாலானோருக்கு ஒன்றும் தேறுவதில்லை. சிலருக்கு சில ஆயிரம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கு வாழ்நாள் முழுவதும் முயன்றும் அடைய முடிவதில்லை.

காரணம், மாதச் சம்பளம் இவ்வளவுதான் என நிர்ணயிக்கப்பட்டு இருப்பதுதான்.

அவ்வாறு இருக்கும்போது ஒருவர் எவ்வாறு இளம் வயதில் பல கோடிகளுடன் வலம் வருகிறார்...

மற்றவர்களைவிட அவர்களிடம் வேறு ஃபார்முலா உள்ளது என்பதே உண்மை.

பணம் மற்றும் செல்வம் பற்றிய உண்மை!

கவனமாகக் கேளுங்கள், முதலாளி சார்ந்த சமூகத்தில் பணத்தைத் துரத்துவதை விடுங்கள். நுகர்வோரைச் சார்ந்த பொருளாதாரத்தில் சந்தை என்பது நண்பர்கள், குடும்பம், அருகில் இருப்போர், வசிக்கும் ஊர், நாடு எல்லாமே பெரும்பாலோர் விரும்பும் பொருள்களுக்கு அதிக மதிப்பைக் கொடுக்கும்.

நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை. ஒரு துப்புரவுப் பணியாளரைவிட கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் கணக்காளர் அதிகம் சம்பாதிக்கிறார். ஏன்... துப்புரவுப் பணியாளர் கொடுக்கும் வேலையின் மதிப்பு குறைவாக இருப்பதே காரணம். அப்படி என்றால், நாம் கொடுக்கும் வேலையின் திறனை எவ்வாறு அதிக மதிப்புள்ளதாக்குவது?

பெரும்பணம் சம்பாதிப்பதன் முதல்நிலையே, பணம் வேண்டுமென்றால், பிரச்னைக்குத் தீர்வைக் கொடுங்கள். இதை ஏற்றுக்கொள்ள தயக்கமாக இருந்தாலும் உண்மை அதுவே.

எல்லா பணமும் பிரச்னைகளைத் தீர்ப்பவரை நோக்கியே ஓடுகின்றன. நீங்கள் பிரச்னையைத் தீர்ப்பீர்களானால் அதற்கான பணம் உங்களை நோக்கி அதுவே வரும்.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பிரச்னையின் தீர்வுக்கு, ஒரு கோடி பணத்தைப் பெறுவீர்கள். நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பிரச்னையின் தீர்வுக்கு, நூறு கோடி ரூபாய் பணம் தானாகவே வரும்.

இதற்குக் கடின உழைப்பு தேவையில்லை.

உதாரணத்துக்கு, அமேசான் போன்ற ஒரு தளம்... கடைக்குச் செல்லத் தேவையில்லை, பொருள் வீடுதேடி வரும், விலை குறைவு மற்றும் இதைப்போல பல பில்லியன் மதிப்புள்ள பிரச்னைகளை உலகம் முழுவதும் தீர்க்கிறது. இதன் மூலம் ஜெஃப் பெசோஸ் பில்லியன் டாலர் பணத்தைப் பெறுகிறார்.

நீங்கள் பணத்தை நோக்கி ஓடுகிறீர்கள் என்றால், தப்பு செய்கிறீர்கள் என்றே அர்த்தம். அவ்வாறு துரத்துவது பணத்தை ஈர்க்கும் அடிப்படைக்கே மாறாகும். பணம் வேண்டுமென்றால், பிரச்னையும் அதற்கான தீர்வையும் முதலில் காண வேண்டும்.

எப்படி காண்பது..? அடுத்த இதழில் பார்ப்போம்.