பிரீமியம் ஸ்டோரி

ஒரு நிமிஷம் நன்கு யோசித்துப் பாருங்கள். நீங்கள் நாள்தோறும் உங்களுடைய 80% நேரத்தை யாருடன் செலவழிக்கிறீர்கள்? குடும்ப உறுப்பினர்கள் தவிர, ஐந்து அல்லது ஆறு பேருடன்தான் உங்கள் பெரும்பகுதி நேரம் செலவிடுவீர்கள். அவர்கள் உங்களைவிட வசதி வாய்ப்பு மிக்கவர்களா அல்லது குறைந்தவர்களா என்று பாருங்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அது போன்றுதான் உங்கள் எதிர்கால வாழ்க்கையும் அமைகிறது.

இராம்குமார் சிங்காரம்
இராம்குமார் சிங்காரம்

இந்த உண்மையை நீங்கள் தெரிந்துகொண்டால், நீங்கள் எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ, அதற்கேற்ப உங்கள் நண்பர்களை மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் பணக்காரராகவும், தொழிலதிபராகவும் ஆக விரும்பினால், பணக்காரர்களுடனும், பெரிய தொழிலதிபர் களுடனும் நீங்கள் எப்போதும் இருக்க முயற்சி செய்யலாம்.

உங்கள் நட்பு இனி யாருடன்?

காரணம், பணக்காரர்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கொண்டே இருக்கும். அவர்கள் தங்களால் பயன்படுத்திக் கொள்ள இயலாத வாய்ப்புகளை தம்மைச் சுற்றி இருப் போருக்கு வழங்குவார்கள். சிறிய, சிறிய வாய்ப்புகளைப் பெறுகிறவர்கள் அந்த வாய்ப்புகளைத் தாமே பயன்படுத்திக் கொள்வார்கள். நீங்கள் மிகப் பெரிய செல்வந்தர்களுடனும், தொழிலதிபர்களுடனும் இருக்க விரும்புகிறீர்களா அல்லது சிறிய வாய்ப்புகளுக்காக ஓடும் மனிதர்களுடன் இருக்க விரும்புகிறீர்களா என்பதை முடிவெடுங்கள்.

வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், பெரிய பிசினஸ்மேன் ஆகாத காலத்திலேயே மும்பை யில் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு அடிக்கடி செல்வாராம். அவர் செய்தது அநாவசியச் செலவு அல்ல; பெரிய இடத்து மனிதர்களின் நட்பைப் பிடிக்கிற அவசியச் செலவு.

‘முதல்வனாய் இரு அல்லது முதல்வனோடு இரு’ என பள்ளியில் படித்திருப்போம். நன்கு படிக்கும் மாணவர் களுடன் சேருபவர்கள், நன்கு படிக்க வேண்டும் என்கிற தூண்டுதலைப் பெறுகிறார்கள். அதுபோலத்தான், பணம் படைத்தவர்களின் நட்பும். இனி நாம் அள்ளுபவர்களுடன் இருப்போம்; சிந்துபவர்களைத் தள்ளிவைப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு