தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

“மருத்துவமனைகளே எங்கள் இலக்கு...” யூனிஃபார்ம் பிசினஸில் கலக்கும் தம்பதி!

ராஜேஷ், அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜேஷ், அர்ச்சனா

பிசினஸ்

யூனிஃபார்ம்... இந்த வார்த்தையைக் கேட்ட வுடன் நமக்குத் தோன்றுவ தெல்லாம், பள்ளி, கல்லூரி ஞாபகம்தான் வரும். ஆனால், பள்ளி, கல்லூரி மட்டுமல்ல, சில அலுவலகங்கள், தொழிற்சாலை, ஹோட்டல், விற்பனைப் பணியாளர்கள், ராணுவம் எனப் பல தரப் பினருக்கும் யூனிஃபார்ம் தேவை. மருத்துவர்கள், நர்ஸ்கள், லேப் பணியாளர் கள், இதர பணியாளர்கள், நோயாளிகள் என மருத்துவத் துறைக்குள் பெரிய அளவில் வாய்ப்பிருக்கிறது.

இதைச் சரியாகக் கண்ட றிந்து செயல்பட்டு வருகிறது யூனிஃபார்ம் கிராஃப்ட் என்கிற ஸ்டார்ட் அப். கணவன் - மனைவியான ராஜேஷ் மற்றும் அர்ச்சனா ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகின்றன. அவர்களுடன் பேசினோம். முதலில் பேசினார் ராஜேஷ்.

ராஜேஷ், அர்ச்சனா
ராஜேஷ், அர்ச்சனா

‘‘எங்கள் குடும்பம் டெக்ஸ் டைல் குடும்பம் என்பதால், துணி வகைகள் குறித்து எங்களுக்கு நல்ல அனுபவம் இருந்தது. இதை அடிப் படையாக வைத்து முக்கிய மான மருத்துவமனைகளுக்கு பெட்ஷீட் தயாரித்துக் கொடுத்தோம். அப்போது தான் மருத்துவத் துறையில் இருக்கும் முக்கியமான சிக்கல் எங்களுக்குத் தெரியவந்தது.

மருத்துவமனைகளுக்கு யூனிஃபார்ம் தைப்பது சிக்க லான பணி. காரணம், மருத்துவமனைகளில் அனை வரும் பிஸியாகவே இருப் பார்கள். அவர்களுக்கு நோயாளிகளைக் கவனிப்பது தான் முக்கியமான பணி. இந்தச் சூழலில் ஒரு டெய்லர் சென்று அளவெடுப்பது கடினம். அதனால் டெய்லர் களுக்கு மருத்துவமனைகள் பெரிய முக்கியத்துவம் தர மாட்டார்கள். அவர்களுக்கு இருக்கும் வேறு வகைகளில் வருமானம் திரட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்து வார்கள்.

இந்த இடத்தில் எங்களுக்கு வாய்ப்பு தெரிந்தது. அதனால் மருத்துவமனை களுக்கு யூனிஃபார்ம் தைத்துத் தரும் வேலையை செய்ய ஆரம்பித்தோம்.

இங்கு நாங்கள் சில புதுமை களைப் புகுத்தினோம். அளவுகளை எளிமைப்படுத்தினோம். நேரடியாகச் சென்று அளவெடுக்கத் தேவை இல்லாத அளவுக்கு அதை ஒழுங்குபடுத்தினோம். தவிர, பொதுவான அளவுகளில் நாங்கள் உடைகளைத் தயாரித்து வைத்திருப்போம். எனவே, குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான உடைகளை எங்களால் தயார் செய்து தர முடியும்.

ஆரம்பத்தில் நாங்கள் நேரடியாகச் சென்று மருத்துவமனைகளிடம் பேசி ஆர்டர் எடுத்தோம். ஆனால், அடுத்து இ-காமர்ஸ் தளம் மூலமாகவே செயல்படத் தொடங்கினோம்.

“மருத்துவமனைகளே எங்கள் இலக்கு...” யூனிஃபார்ம் பிசினஸில் கலக்கும் தம்பதி!

எங்களிடம் பல வண்ணங்களில், பல தேவைகளுக்கு ஏற்றபடி யூனிஃபார்ம்கள் ரெடியாக இருக்கின்றன. வாடிக்கையாளர்கள் தங்களுடைய பிராண்ட் பெயர் களைச் சொன்னால் அதை மட்டும் தைத்து அனுப்பி விடுவோம். தற்போதைக்கு 70% ஆர்டர்கள் இ-காமர்ஸ் மூலமாகவே வருகின்றன’’ என்றார் ராஜேஷ்.

அடுத்து பேச ஆரம்பித்தார் அர்ச்சனா. ‘‘ஒருவருக்கு ஆண்டுக்கு இரண்டு யூனிஃபார்ம்கள் என்னும் அளவில் வாங்குவார்கள். ஆனால், பணியாளர்கள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். தவிர, மொத்த மாக வாங்க மாட்டார்கள். இதனால் தொடர்ந்து ஆர்டர்கள் வந்துகொண்டே இருக்கும்.

சராசரியாக ஒரு நாளைக்கு 250 ஆர்டர்கள் என்கிற அளவுக்கு ஆர்டர்கள் வருகின்றன. இதில்லாமல் எங்களுடைய மார்க்கெட்டிங் மூலமாக நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று மொத்த ஆர்டர்களையும் எடுத்து வருகிறோம். இப்போதைக்கு சுமார் 2,150 மருத்துவமனைகள் எங்களுடைய வாடிக்கையாளர் களாக உள்ளன. இதில் 60% தமிழ்நாட்டில் உள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பெரும்பாலான மருத்துவ மனைகள் எங்கள் வாடிக்கையாளர்கள்தான். தென் இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும், டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களிலும் உள்ளனர்’’ என்றார் அர்ச்சனா.

‘‘கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகக் கடன் இல்லாத நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறோம். மாதம் ரூ1.5 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடக் கிறது. இதை உயர்த்தும் திட்டத்தில் இருக்கிறோம்’’ என உற்சாகமாகப் பேசி முடித்தனர் இந்த பிசினஸ் தம்பதியர்!