``2012 தொடக்கத்துல என்னோட ரைஸ் மில்லுக்குப் பக்கத்துலயே சிறுதானிய ஹோட்டல் ஒண்ணு தொடங்கினேன். நம்மாழ்வார் ஐயாதான் அதைத் திறந்து வச்சார். அங்க வந்து சாப்பிட்டவங்க எல்லாருமே இது நாகர்கோவிலுக்குக் கிடைச்ச வரப்பிரசாதம்னு சொன்னாங்க. அதனால கடைக்கு வரப்பிரசாதம்னு பேர் வச்சேன்.
இயற்கை விவசாயத்தில விளைஞ்ச நெல் மற்றும் தானியங்களைக் கொள்முதல் பண்ணுறதுக்கு நம்மாழ்வார் ஐயா குழுக்கள் மூலமா நெல் வாங்குறோம். மேலும், கிரியேட், குடும்பம் போன்ற என்.ஜி.ஓ-க்கள் மூலமாவும், நெல் ஜெயராமன் அமைப்பு மூலமாகவும் பதிவுபெற்ற இயற்கை விவசாயிகள்கிட்ட இருந்து நெல்லை கொள்முதல் செய்து அரிசி ஆக்கி விற்பனை செய்கிறோம்...

ஆரம்பத்துல என்னைத் தவிர, இரண்டு பேர்தான் இங்க வேலை செய்தாங்க. தினமும் 500 ரூபாய்க்கு பொருள்கள் விற்பனை ஆச்சுது. படிப்படியா விற்பனை ரூ.2,000, ரூ.3,000-னு அதிகரிச்சுது. இப்ப இங்க 8 பேர் வேலை செய்யுறாங்க. தினமும் சராசரியா ரூ.25,000 -லிருந்து ரூ.30,000 வரைக்கும் விற்பனை ஆகுது. மற்ற இயற்கை அங்காடிகள்ல பொருள்கள் விற்பனை மட்டும் செய்வாங்க. நாங்க மக்களின் தேவைக்கு ஏற்ப உணவுப் பொருள்களைத் தயாரிச்சுக் கொடுக்கிறதால ஜெயிக்க முடிஞ்சது..."
நாகர்கோவிலில் செட்டிக்குளத்திலிருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில் சற்று உள்புறமாக அமைந்துள்ளது `வரப்பிரசாதம் இயற்கை அங்காடி.' கைக்குத்தல் அரிசி, சிறுதானியம், பாரம்பர்ய உணவுப் பொருள்களை மதிப்புக்கூட்டி மாதம் ரூ.15 லட்சம் வரை பிசினஸ் செய்கிறார் கௌதமன். அடுத்தகட்டமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கும் கௌதமனை அவரது அங்காடியில் சந்தித்தோம். அவர் கடந்து வந்த பாதையை நாணயம் விகடன் இதழுடன் விரிவாகப் பகிர்ந்திருக்கிறார்.
அசத்தும் மன்னார்குடி இளைஞர்!

இதேபோல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் எம்.பி.ஏ பட்டதாரி அருண் ரவி. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் தொடங்கிய இயற்கை அங்காடியோடு இணைந்த சிற்றுண்டிக் கடை தற்போது மன்னார்குடியில் புகழ்பெற்ற பாரம்பர்ய உணவகமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
மன்னை உழவன் சிறுதானிய உணவகம் & இயற்கை அங்காடியில் காலை தொடங்கி இரவு வரை எல்லா நேரங்களிலும் மக்கள் தேடிவந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறார்கள்.
``கடை தொடங்கி நாலஞ்சு மாசம் லாபமே கிடைக்கலை. அதுக்குப் பிறகு, மக்கள் கூட்டம் படிப்படியா அதிகரிக்க ஆரம்பிச்சது. பாரம்பர்ய உணவுப் பொருள்கள்ல காலை டிபன், இரவு உணவுனு விதவிதமா அதிகப்படுத்தி 40 விதமா உணவுகளைத் தர்றோம். மதியச் சாப்பாடும் உண்டு. குறைஞ்ச முதலீட்டுல தொடங்கின கடை, இன்னைக்கு 10 பேருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய நிறுவனமா வளர்ந்துருக்கு. மாசம் ரூ.70,000-க்கு மேல லாபம் கிடைக்குது" என்கிறார் அருண் ரவி.
கௌதமன், அருண் ரவி ஆகியோர் தாங்கள் கடந்து வந்த பாதையை நாணயம் விகடன் இதழுடன் விரிவாகப் பகிர்ந்துள்ளனர். அதை முழுமையாக வாசிக்க >``இயற்கை அங்காடி... ஆரம்பத்தில் ரூ.500, இன்று ரூ.30,000..!" - நாகர்கோவிலில் சாதித்த கௌதமன்;
"70,000 வருமானம், 10 பேருக்கு வேலை...'' அசத்தும் மன்னார்குடி இளைஞர் https://bit.ly/2HCXijV
சிறப்புச் சலுகைகள்:
> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth
> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV