Published:Updated:

60 கிளைகள்... வருமானம் ரூ.35 கோடி... சாய் கிங்ஸின் வெற்றி ரகசியம்!

பாலாஜி சடகோபன், ஜகபர் சாதிக்
பிரீமியம் ஸ்டோரி
பாலாஜி சடகோபன், ஜகபர் சாதிக்

பிசினஸ்

60 கிளைகள்... வருமானம் ரூ.35 கோடி... சாய் கிங்ஸின் வெற்றி ரகசியம்!

பிசினஸ்

Published:Updated:
பாலாஜி சடகோபன், ஜகபர் சாதிக்
பிரீமியம் ஸ்டோரி
பாலாஜி சடகோபன், ஜகபர் சாதிக்

வாழ்க்கையில் எப்போதுமே தேடுதல் இருந்துகிட்டே இருக்கணும். ஒரு சின்ன தேடுதல், நம்முடைய வாழ்க்கையை முழுவதுமாக மாற்றும். அப்படியான மேஜிக்தான் எங்களோட வாழ்க்கையில் நடந்துகிட்டு இருக்கு. நாங்க ரெண்டு பேரும் ஐ.டியில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்தாலும், புதுசா, பெருசா ஏதாவது பண்ணணும்னு யோசிச்சோம். அந்த சிந்தனைதான் நண்பர்களாகத் தொடங்கிய எங்களோட பயணத்தை இப்போ பிசினஸ் பார்ட்னராக மாத்தியிருக்கு’’ - புத்துணர்ச்சியுடன் பேசுகிறார் பாலாஜி சடகோபன்.

ஜகபர் சாதிக் மற்றும் பாலாஜி சடகோபன் இருவரும் நண்பர்கள். புதுமையாக சிந்தனைகளைத் தேடி தொடங்கிய இவர்களின் பயணம் சென்னை முழுவதும் 60 கிளைகள் கொண்ட ‘சாய் கிங்ஸ்’ என்ற டீ அவுட்லெட் நிறுவனமாக வளர்ந்துள்ளது. ‘சாய் கிங்ஸ்’ நிறுவனத்தின் வெற்றியை சாதிக்கும் பாலாஜியும் நம்முடன் பகிர்ந்துகொண்டார்கள்.

பாலாஜி சடகோபன், ஜகபர் சாதிக்
பாலாஜி சடகோபன், ஜகபர் சாதிக்

“நானும் பாலாஜியும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றினோம். அப்போதே பிசினஸ் சார்ந்து நிறைய ஐடியாக்களை பேசிக் கொள்வோம். சில வருஷங்களில் எனக்கு வேறு நிறுவனத்தில் வேலை கிடைச்சுருச்சு. அலுவலகம் மாறினாலும் எங்களுடைய நட்பு தொடர்ந்துச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து பிசினஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணிணோம்.

பிசினஸ் சார்ந்து எந்தப் பின்புலமும் எங்களுக்கு கிடையாது என்பதால், ஆரம்பத்தில் வீட்டில் கொஞ்சம் பயந்தாங்க. ஆனா, நாங்க துணிஞ்சு, ஒரு சலூன் நிறுவனத்தின் ஃபிரான்சைஸ் எடுத்தோம். அதில் கிடைச்ச அனுபவத்தை வெச்சு, அடுத்த சில வருஷத்தில் வெவ்வெறு நிறுவனங்களோட ஃபிரான்சைஸ் எடுத்து, பிசினஸ் பண்ணிகிட்டு இருந்தோம். போதுமான அளவு லாபம் இருந்தாலும், புது பிராண்டாக உருவாகணும்னு ஆசைப்பட்டோம். சொந்த பிராண்ட்னு நினைக்கும்போது அழகு நிலையம் தொடங்கி, டீக்கடை வரை நிறைய ஐடியாக்கள் வந்துச்சு. ஆனா, சென்னையில் டீக்கடை நல்லா போகும்னு தோணவே, டீ பிசினஸை செலக்ட் பண்ணிணோம்” என்ற சாதிக் கொஞ்சம் இடைவெளி கொடுக்க, தொடர்ந்தார் பாலாஜி.

“டீக்கடை சார்ந்து நிறைய சர்வே எடுத்தோம். சென்னையில் மட்டும் 20,000 டீக்கடைகள் இருந்துச்சு. எல்லோரையுமே எங்களுக்கான போட்டியாளர்களாகத்தான் பார்த்தோம். டீக்கடை பிசினஸை புதுசா எப்படி மாத்தப்போறோம்னு பார்த்துப் பார்த்து பிராண்டை டிசைன் பண்ணிணோம். நானும் சாதிக்கும் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ டீமின் ரசிகர்கள். அதனால் எங்க பிராண்டுக்கு ‘சாய் கிங்ஸ்’ என பேர் வெச்சோம். லோகோ தொடங்கி, அவுட் லுக் வரை எல்லாமே தனித்துவமா இருக்கணும் என்பதில் உறுதியாக இருந்தோம். வெள்ளை நிற அவுட்லுக், யூனிஃபார்ம் போட்ட ஆட்கள், நோ ஸ்மோக்கிங் பேனர், டீ பாயிலர் இல்லாத தோற்றம், யூஸ் அண்ட் த்ரோ ஃப்ளாஸ்க் என எல்லாமே புது கான்செப்ட்.

மேலும், எங்களோட டீக்கடை யில் ஒரே சுவை, ஒரே தரத்தை கடைப்பிடிக்கணும்னு நினைச் சோம். அதனால் ஒரே மாதிரியான ஃபார்முலாவை ஃபாலோ பண்ணணும்னு முடிவு பண்ணோம். இத்தனை லிட்டர் பாலுக்கு, இத்தனை டீஸ்பூன் டீத்தூள், இத்தனை கப் தண்ணீர் என ஒரு வழிமுறையை உருவாக்கி னோம். அதனால் எங்களுடைய எந்த அவுட்லெட்டில் எப்போ டீ குடிச்சாலும், ஒரே மாதிரியான சுவையை உணர முடியும். அதுவே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிச்சுருக்குனு சொல்லலாம்.

வழக்கமான டீக்கடையில் வடை, பஜ்ஜி, பிஸ்கட்கள் இருக் கும். நாங்க சமோசா, பப்ஸ் என வித்தியாசத்தைக் காட்டினோம். நானும் சாதிக்கும் டீ விரும்பிகள். வித்தியாசமான டீ வகைகளை விரும்புவோம். அதையே எங்க வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கணும்னு நினைச்சுதான் இஞ்சி டீ, செம்பருத்தி டீ, க்ரீன் டீ, ஐஸ் டீ, குங்குமப்பூ டீ என நிறைய டீ வகைகளை அறிமுகப் படுத்த முடிவு பண்ணிணோம். இப்படி தெளிவான திட்டமிடலுக்குப் பின், எங்களுடைய மொத்த சேமிப்புப் பணத்தையும் முதலீடு செஞ்சு ஒரு கோடி ரூபாயில் பிசினஸைத் தொடங்கினோம்.

2016-ல் கீழ்ப்பாக்கத்தில் முதல் கிளையை ஆரம்பிச்சோம். ஆனா, எங்களுடைய அவுட்லெட் டீக்கடைதான்னு மக்களுக்கு பதிய வைக்க கொஞ்சம் நாள்கள் தேவைப்பட்டுச்சு. பொதுவா, டீக்கடை என்றாலே புகைபிடிப்பது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனா, நாங்க அதை முற்றிலுமா தவிர்த்தோம். அதனால பெண்கள் கூட்டமும் அதிகமானது. 2016-ல் பிசினஸ் தொடங்கும்போதே அடுத்த ஐந்து வருஷத்தில் 100 அவுட்லெட் சென்னையில் தொடங்கணும்னு பிளான் பண்ணியிருந்தோம். 2016 - 2018-ல் எங்ககிட்ட இருந்த முதலீட்டு தொகையை வெச்சு, சென்னையில் மட்டும் ஏழு அவுட்லெட் தொடங் கினோம். பிசினஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போக பணம் தேவைப்பட்டுச்சு. நாங்க இதற்கு முன் சில நிறுவனங்களின் ஃபிரான்சைஸ் எடுத்து பிசினஸ் பண்ணதால், அதில் இருக்கும் ப்ளஸ் அண்ட் மைனஸ் எங்களுக்குத் தெரிஞ்சது. அதனால் எங்களோட நிறுவனத்துக்கு ஃபிரான்சைஸ் கான்செப்ட் வேண்டாம்னு முடிவு பண்ணி ணோம்” என பாலாஜி முடிக்க, முதலீட்டுத் தொகையை அதிகரித்த விதம் பற்றி பேச ஆரம்பித்தார் சாதிக்.

“பிசினஸை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப் போக இன்வெஸ்டர் களை பிசினஸுக்குள் கொண்டு வரணும்னு பிளான் பண்ணி ணோம். ஏற்கெனவே ஏழு அவுட்லெட் சக்சஸ் பண்ணியிருந்த தால் இன்வெஸ்டர்களும் தயாராக இருந்தாங்க. சென்னை ஏஞ்சல்ஸ் நிறுவனம் ரூ.2 கோடி எங்க பிசினஸ்ல முதலீடு பண்ணிணாங்க. அந்த முதலீட்டுத் தொகையால ஏழு கிளைகளிலிருந்து 22 கிளை களை எங்கள் நிறுவனம் எட்டுனுச்சு.

அடுத்தபடியாக சென்னை ஏஞ்சல் இன்வெஸ்டர், ஹைதராபாத் ஏஞ்சல் இன்வெஸ்டர், டை சென்னை ஆகிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.7 கோடி இன்வெஸ்ட் பண்ணிணாங்க. அதை வெச்சு இப்போது 60 கிளைகள் வரை வந்துட்டோம். அடுத்தகட்ட நிதி திரட்டுதலில் ஈடுபட இருக்கோம். ஆரம்பத்தில் ரூ.2 கோடி வருவாயிலிருந்து எங்களுடைய நிறுவனத்தின் வருவாய் இப்போ ஆண்டுக்கு 35 கோடியாக மாறியிருக்கு. கொரோனா நேரத்தில் சில சறுக்கல்கள் இருந்துச்சு. ஆனால், பிசினஸில் ஏற்ற இறக்கங்கள் இயல்பானதுனு கடந்துட்டோம். எங்களோட டீ அவுட்லெட்டை மெட்ரோ ரயில் நிலையம், மால், ஐ.டி பார்க், மருத்துவமனைகள், கல்லூரிகள் என எல்லா இடத்துலயும் தொடங்கியதுதான் மக்கள்கிட்ட எங்க பிராண்டை விளம்பரப்படுத்துனுச்சு” என்றார்.

60 கிளைகள்... வருமானம் ரூ.35 கோடி... சாய் கிங்ஸின் வெற்றி ரகசியம்!

“ஆன்லைனிலும் ஆஃப் லைனிலும் சேர்த்து தினமும் 30,000 கப்கள் விற்பனை ஆகுது. மக்களுடன் உணர்ச்சி பூர்வமாகவும் எங்களுடைய பிராண்ட் கனெக்ட் ஆகியிருக்கு. அடுத்தடுத்த வருஷங்களில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பிராண்டாக நிச்சயம் மாறும்” என்கிறார்கள் சாதிக் மற்றும் பாலாஜி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism