Published:Updated:

“பெண்களுக்கான தோல் பொருள்களே எங்கள் டார்கெட்!” - ஏற்றுமதியில் கலக்கும் சென்னை பிசினஸ்மேன்கள்!

அசோக், ஸ்ரீதரன்
பிரீமியம் ஸ்டோரி
News
அசோக், ஸ்ரீதரன்

உலக அளவில் தோல் பொருள்களைப் பயன்படுத்தும் வகையில் பெண்களின் பங்களிப்புதான் அதிகம்.

ந்தவொரு உற்பத்தி நிறுவனமாக இருந்தாலும் குறிப்பிட்ட ஒரு பொருளைத் தயார் செய்து அதில் பெயர் பெற வேண்டும். அப்போதுதான் பிசினஸில் நிலைத்து நிற்க முடியும் என்பது பிசினஸ் பாலபாடம். அந்த வகையில், பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் மற்றும் வேலட்டுகளை மட்டுமே தயாரித்து, உலகின் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, வெற்றிகரமாகத் தொழில் நடத்தி வருகிறார்கள் சென்னையைச் சேர்ந்த அசோக்கும் ஸ்ரீதரனும். சென்னை பல்லாவரத்தில் ‘பத்மாஷ் லெதர்ஸ் அண்டு எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் உற்பத்திக்கூடத்தில் அவர்களைச் சந்தித்தோம். முதலில் பேச ஆரம்பித்தார் அசோக்.

“நானும் என் மச்சானும் இணைந்து 1991-ல் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். அப்போது 40 நேரடி ஊழியர்களுடன் நடுத்தர அளவில்தான் தொழிலை நடத்தினோம். வெளிநாடுகளில் ஆண்களுக்கான வேலட்டுகளுக்கு அதிக வரவேற்பு உண்டு. சில டிசைன்களில் ஆண்களுக்கான வேலட்டுகளை மட்டும் வருடத்துக்கு சில லட்சம் எண்ணிக்கையில் தயாரித்து ஏற்றுமதி செய்தோம். தொடத்தில் ஏறுமுகத்தில் இருந்தாலும், பிறகு சில காரணங்களால் தொழிலில் சரிவு ஏற்பட்டது.

இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தோம். தோல் பொருள்களைப் பயன்படுத்துவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதைக் கவனித்தோம். பொதுவாக, ஷூ அல்லது பர்ஸ் வாங்க ஆண்டுக்கு ஓரிருமுறைதான் ஆண்கள் விருப்பப்படுவார்கள். ஒரே ஒரு பர்ஸை வாங்கி பல ஆண்டுகளுக்குப் பத்திரமாக வைத்திருந்து பயன்படுத்துவார்கள்.

250 ஊழியர்களுடன், ஆண்டுக்கு 500-க்கும் மேற்பட்ட டிசைன்களில் ஒரு லட்சம் ஹேண்ட்பேக், பர்ஸ்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் டேர்ன்ஓவர் சுமார் ரூ.40 கோடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஆனால், வெளிநாட்டுப் பெண்களில் வேலைக்குச் செல்வோரும் உயர்வர்க்கத்தினரும் அலுவலகம், வெளிநிகழ்ச்சிகளுக்கு எனத் தனித்தனி ஹேண்ட் பேக், பர்ஸ் பயன்படுத்துவார்கள். ஹேண்ட்பேக் முதல் செப்பல் வரை தங்கள் பயன்பாட்டுப் பொருள்கள் பலவும் மேட்சிங்காக இருக்க வேண்டும் என நினைப்பார்கள் அங்குள்ள பெண்கள். சிலர், ஆண்டுக்கு ஒன்றிரண்டுமுறை கூட ஹேண்ட்பேக், பர்ஸ் வாங்குவார்கள். உலக அளவில் தோல் பொருள்களைப் பயன்படுத்துவதிலும் வாங்குவதிலும் பெண்களின் பங்களிப்புதான் அதிகம்.

“பெண்களுக்கான தோல் பொருள்களே எங்கள் டார்கெட்!” - ஏற்றுமதியில் கலக்கும் சென்னை பிசினஸ்மேன்கள்!

இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டபின், 2001-ல் ஆண்களுக்கான பர்ஸ் தயாரிப்பதை நிறுத்திவிட்டு, பெண்களுக்கான பர்ஸ், ஹேண்ட்பேக் மட்டும் தயாரிக்க ஆரம்பித்தோம்.இதற்கிடையே, என் மச்சான் வேறு தொழிலுக்குச் சென்ற நிலையில், அவரின் நண்பர் ஸ்ரீதரன் என் லெதர் பிசினஸில் இயக்குநராக 1997-ல் இணைந்தார். இனி நஷ்டம் ஏற்படாமல் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வதில் நாங்கள் இருவரும் உறுதியுடன் இருந்தோம்.

நான் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை நிறுவனத்தில் வேலை செய்வேன். இவரோ (ஸ்ரீதரன்) அதிகாலை முதல் இரவு வரை வேலை செய்வதுடன், விடுமுறை தினத்திலும் வேலைக்கு வந்துவிடுவார். எந்நேரமும் பிசினஸ் சிந்தனையுடன் வேலை செய்தோம். இத்தாலி, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். நான் மார்க்கெட்டிங் பிரிவையும், ஸ்ரீதரன் உற்பத்திப் பிரிவையும் கவனித்துக்கொண்டோம். அடிக்கடி வெளிநாடு களுக்குச் சென்று புதிய ஆர்டர்களைப் பிடிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். ஊழியர்கள் அனைவரும் ஈடுபாட்டுடன் வேலை செய்கின்றனர். பல்வேறு சவால்களைக் கடந்து இன்று வரை நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம்” என்ற அசோக்கின் முகத்தில் மகிழ்ச்சியும் பெருமிதமும் மின்னியது.

உற்பத்திக்கூடத்தைச் சுற்றிக்காட்டியபடி நம்முடன் பேச ஆரம்பித்தார் ஸ்ரீதரன். “வெளிநாட்டு நிறுவனங்கள் தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டார்கள். லட்சக்கணக்கில் ஹேண்ட்பேக், பர்ஸ் தயாரித்துக் கொடுத்தாலும் அதில் ஒவ்வொரு பொருளையுமே சோதனை செய்வார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் தரத்தில் இல்லையென்றால், அந்தப் பொருளின் விலை குறைவாக இருந்தாலும் வாங்க மாட்டார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்சமயம், இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கு ஏற்றுமதி செய்கிறோம். நாங்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், தமது தேவைக்கேற்ற தரத்தில் தோல்பொருள்களை இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளிலிருந்து வாங்க வலியுறுத்துகிறது. அதன்படியே குறிப்பிட்ட அந்த நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்துதான் தற்போது வரை முக்கியமான மூலப்பொருள்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறோம்.

அசோக், ஸ்ரீதரன்
அசோக், ஸ்ரீதரன்

தையல் இயந்திரங்கள் முதல் எங்கள் நிறுவனத்தில் உள்ள எல்லா இயந்திரங்களின் விலையும் அதிகம்தான். இதன்மூலம் தையல், ஃபினிஷிங் உட்பட எல்லா வேலைகளும் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் செய்ய முடிகிறது.

நாங்கள் எப்போதும் ஒரே டிசைனில் அதிக எண்ணிக்கையில் ஹேண்ட் பேக்குகளைத் தயாரிக்க மாட்டோம். ஒரு டிசைனில்

தலா 1,000 ஹேண்ட்பேக், பர்ஸ் செய்வோம். டிசைன்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்போம். அதற்கேற்ப நூல் முதல் தோல் வகை வரை நிறைய மெனக்கெடுவோம். இப்படித் தயார் செய்யப்படும் தோல்பொருள்களைத்தான் வெளி நாட்டு நிறுவனங்களும் அங்குள்ள மக்களும் விரும்புகின்றனர்.

ஆனால், இதற்கு நேரெதிரான நிலையே நம் நாட்டில் இருக்கிறது. லெதர் ஃபேக்டரியில் வீணாகும் உதிரிகளைச் சேகரித்து (bonded leather) அதில் தயாரிக்கப்படும் தோல் பொருள்களைத்தான் நம்மூர் கடைத் தெருவில் விற்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நம் மக்கள், 100 – 200 ரூபாய் கொடுத்துக் கடைத்தெருவில் ஒரு பர்ஸ் வாங்கினால், ‘எப்படியும் ஓராண்டுக்கு மேல் உழைக்கும். பிறகு, வேறு பர்ஸ் வாங்கிக்கொள்ளலாம்’ என நினைக்கின்றனர். அவர்கள் இடத்திலிருந்துப் பார்த்தால், அது சரியான முடிவுதான். ஆனால், அந்த பர்ஸின் தரம் குறித்து ஒருபோதும் அவர்கள் யோசிப்பதில்லை.

ஆனால், கொஞ்சம் வசதியானவர்கள், உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் தரமான பர்ஸ் வாங்க நினைத்தாலும், அவர்களின் சாய்ஸ் வெளிநாட்டு பிராண்ட் நிறுவனங்கள்தான். இந்தியாவை மையப்படுத்திய தோல் பொருள்கள் உற்பத்தியிலும் விற்பனையிலும் பல்வேறு சவால்கள் இருப்பதால்தான் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே எங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறோம்” என்கிறார் லேசான சிரிப்புடன்.

250 ஊழியர்களுடன், ஆண்டுக்கு 500-க்கும் மேற்பட்ட டிசைன்களில் ஒரு லட்சம் ஹேண்ட்பேக் மற்றும் பர்ஸ்களைத் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் டேர்ன் ஓவர் ரூ.40 கோடி என ஏறமுகத்திலேயே இருக்கிறது.

“பெண்களுக்கான தோல் பொருள்களே எங்கள் டார்கெட்!” - ஏற்றுமதியில் கலக்கும் சென்னை பிசினஸ்மேன்கள்!

“ஆரம்பகாலத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்துக்குப் பிறகு, மிகவும் நிதானமாகவே வளர்ந்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் மூலம் உள்ளூரில் நூற்றுக்கணக்கான மக்கள் பயனடைய வேண்டும். எங்கள் பொருள்களை வெளிநாட்டவர்கள் மகிழ்ச்சியுடன் பயன் படுத்த வேண்டும். இதுதான் எங்கள் நோக்கம். தரத்துக்கு மட்டுமே முன்னுரிமை தருகிறோம். சொந்தக் தொழிலில் வேலை செய்வது போன்ற மனநிலையை ஊழியர்களிடம் ஏற்படுத்தி

யிருக்கிறோம். இதனால், ஒருபோதும் உற்பத்தியில் தொய்வு ஏற்படுவதில்லை” என்று அசோக் இடைவெளிவிட...

“கைவசம் இருக்கும் ஆர்டர்களுக்குத் தொடர்ந்து இடைவிடாமல் உற்பத்தி நடக்கிறது. உலகளவில் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருந்தாலும், இப்போதுவரை எங்களுடைய ஆர்டரில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை. எது நடந்தாலும், எங்கள் தொழில் அனுபவத்தில் எல்லாச் சவால்களையும் கடந்துவருவோம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஸ்ரீதரன்.

தொழிலில் தெளிவும் கடுமையான உழைப்பும் இருந்தால் என்றும் வெற்றிதான்!