Published:Updated:

“பிசினஸில் ரிஸ்க் எடுக்காமல் வெற்றி கிடைக்காது!” - சென்னை இளைஞர் அனுபவம்!

பணியாளர்களுடன் சுகன்
பிரீமியம் ஸ்டோரி
News
பணியாளர்களுடன் சுகன்

பொம்மைகள் மற்றும் சோஃபா தயாரிப்புக்கான பஞ்சு விற்பனையில் ஆண்டுக்கு ரூ.3 கோடி வரை டேர்ன் ஓவர் செய்கிறார் சுகன்!

தொழில் பயணத்தில், ‘ரிஸ்க் எடுக்காமல் இருப்பதுதான் பெரிய ரிஸ்க்’ என்பார்கள். அதற்கு உதாரணமாக இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர் சுகன் ராஜ் புரோகித், தந்தையின் தொழிலில் இருந்து விலகி, துணிச்சலுடன் தனியாகத் தொழில் தொடங்கி ரிஸ்க் எடுத்தவர் சுகன்.

சரியான முறையில் தனது தொழில் பயணத்தைத் திட்டமிட்டு செயல்படுத்தியதன் விளைவு, இன்று பொம்மைகள் மற்றும் சோஃபா தயாரிப்புக்கான பஞ்சு விற்பனையில் ஆண்டுக்கு ரூ.3 கோடி ரூபாய் வரை டர்ன் ஓவர் ஈட்டும் தொழில்முனைவோராக வளர்ச்சி கண்டிருக்கிறார். 25 வயதே ஆகும் இளைஞரான சுகன், இந்தத் தொழிலில் பெரிய இலக்குகளுடன் முன்னேறி வருகிறார். சென்னைக்குப் பக்கத்தில் உள்ள புழலில் உள்ள அவரது நிறுவனத்தில் நாம் சுகனைச் சந்தித்தோம்.

சுகன்
சுகன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பி.காம் முடித்ததும் பிசினஸ்...

“என் பூர்வீகம் ராஜஸ்தான். வளர்ந்ததெல்லாம் சென்னையில். டெக்ஸ்டைல் ஷாப், அடகுக்கடை வியாபாரங் களைத் தொடர்ந்து, சாஃப்ட் டாய்ஸ் விற்பனையிலும் அப்பா ஈடுபட்டார். மூன்று வருடங்களுக்கு முன்பு பி.காம் முடித்ததுமே, அப்பாவின் டாய்ஸ் தொழிலில் இறங்கினேன். பொம்மையின் மேற்புறத்திலுள்ள துணியை டெல்லியிலுள்ள நிறுவனம் ஒன்றிடமிருந்து மொத்தமாக வாங்கி, அதனுள் பஞ்சு நிரப்பி ஹோல்சேல் மற்றும் ரீடெய்ல் விற்பனையில் ஈடுபட்டோம். மூலப்பொருள்கள் வாங்குவது, விற்பனை, தொழில் விரிவாக்கம் எல்லாவற்றையும் அப்பாதான் கவனித்துக் கொண்டார். தொழிலில் எல்லா விஷயங்களையும் நேரடியாகச் செய்து அனுபவங்களையும் நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் ஆசை.

ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை. எனவே, அதிக வரவேற்புள்ள பொம்மைகளுக்கான பஞ்சு விற்பனைத் தொழிலைத் தனியாக மேற்கொள்ள முடிவெடுத்தேன். என் விருப்பத்தை ஏற்றுக் கொண்டு அப்பாவும் ஊக்கம் கொடுத்தார்.

பணியாளர்களுடன் சுகன்
பணியாளர்களுடன் சுகன்

ரிலையன்ஸின் ஏஜென்சி வாங்கினேன்...

ஒருவித பிளாஸ்டிக்கில் இருந்து தயாராகும் ரெக்ரான் ஃபைபர் (recron fiber) வகை பஞ்சுதான் பொம்மைத் தயாரிப்புக்குப் பயன் படுத்தப்படுகிறது. இந்த வகை பஞ்சைத் தயாரித்து, இந்தியா முழுக்க மொத்தமாக விற்பனை செய்வதில் ரிலையன்ஸ் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. அந்த நிறுவனத்தின் சென்னைக்கான ஏஜென்சி முகவராகும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக ‘ஸ்ரீ என்டர்பிரைசஸ்’ என்ற நிறுவனத்தை 2018-ல் தொடங்கினேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

முதலில் பயந்தேன்...

தனியாக பிசினஸ் தொடங்கும்போது பயம் இல்லாமல் இல்லை. ஆனால், எது நடந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கை அதிகம் இருந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது முகவர்களுக்கு டன் கணக்கில்தான் பஞ்சு விற்பனை செய்யும். இதை மொத்தமாக டன் கணக்கில்தான் வாங்க வேண்டும். எனவே, தொழில் தொடங்கியபோது பல லட்சம் ரூபாய் முதலீட்டில் பல டன் பஞ்சு வாங்கினேன். அப்போது எதிர்பாராத வகையில் பஞ்சு விலை கணிசமாகக் குறையவே, சில லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டது. அதை ஒருவழியாபோராடிச் சமாளித்தேன்.

“பிசினஸில் ரிஸ்க் எடுக்காமல் வெற்றி கிடைக்காது!” - சென்னை இளைஞர் அனுபவம்!

ஆனால், எனக்குப் புதிய வாடிக்கையாளர் களைக் கண்டு்பிடிப்பதுதான் பெரும் சவாலாக இருந்தது. இணையதளத்தில் தேடிப் பார்த்து ஃபர்னிச்சர், பெட் தயாரிப்பு, பொம்மை விற்பனை நிறுவனங்களுக்கு அலைபேசியிலும் நேரிலும் புது ஆர்டர்கள் கேட்டேன். இதற்காக காலையில் கிளம்பினால் இரவு வரை அலைவேன். தொடர்ந்து முயற்சியின் செய்ததன் பலனாக எனக்குப் படிப்படியாக ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்தன. இந்தத் துறையில் தொழில் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ளவே ஓராண்டு ஆனது” என்றவர், உற்பத்திக்கூடத்தைச் சுற்றிக் காட்டியபடியே தனது தொழில் வளர்ச்சி குறித்து எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார்.

பண்டலாக விற்பனை செய்கிறேன்...

“ரிலையன்ஸ் நிறுவனத்திடம் வாங்குவதில், ஒரு பண்டலில் 300 கிலோ பஞ்சு இருக்கும். அதை அப்படியே பண்டலாகவே பிறருக்கு விற்பனை செய்கிறேன். தவிர, ரெக்ரான் ஃபைபர் பஞ்சை பிரத்யேகமான எந்திரத்தின் உதவியுடன் மென்மையான பஞ்சாக மாற்றம் செய்வோம். அதைத் தேவைக்கேற்ப கிலோ கணக்கில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்குச் சில்லறை விலையிலும் விற்பனை செய்கிறேன். சோஃபா, மெத்தை, தலையணை தயாரிப்புக்காக ஃபர்னிச்சர் கடைகள், சாஃப்ட் டாய்ஸ் தயாரிப்பு, கார் இருக்கைகளுக்கான பயன்பாட்டுக்கு, குழந்தைகளுக்கான பெட் தயாரிப்பு நிறுவங்களுக்குத்தான் அதிக அளவில் மென்மையான வடிவில் மாற்றப்பட்ட பஞ்சை விற்பனை செய்கிறேன். சென்னை, மற்ற மாவட்டங்கள் தவிர, பெங்களூரிலும் நிறைய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.

https://www.facebook.com/204945246245336/videos/410143200331307

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறைந்த லாபத்தில் விற்கிறேன்...

ஆரம்பத்தில் ஒரே ஓர் ஊழியருடன் தொடங்கிய நிறுவனத்தில் தற்போது ஏழு பேர் இருக்கின்றனர். எந்திரத்தில் மென்மையாக மாற்றப்பட்ட பஞ்சை மாதமொன்றுக்கு 30 டன் அளவில் விற்பனை செய்கிறேன். கடந்த 5 - 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சாஃப்ட் டாய்ஸ் பொம்மைகள், சோஃபா, மெத்தைப் பயன்பாடுகளுக்கான வரவேற்பு அதிகரித்து விட்டது. அதனால் இந்த வகை பஞ்சு உற்பத்தியும் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், இந்தப் பஞ்சுகளை பல மாதங்கள் வரை வைத்திருந்தும் பயன்படுத்தலாம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு கிலோ ரெக்ரான் ஃபைபர் பஞ்சு ரூ.160-க்கு விற்பனை ஆனது. சிறு வியாபாரிகளும் மக்களுக்கும் பயனடையும் வகையில் குறைந்த விலையில், எனக்கான லாபத்தைக் குறைத்து பஞ்சை விற்பனை செய்தேன். அதனால் தற்போது ஒரு கிலோ ரெக்ரான் ஃபைபர் பஞ்சு ரூ.120-க்கு விற்பனையாவதுடன், இதற்கான வரவேற்பும் அதிகரித்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

“பிசினஸில் ரிஸ்க் எடுக்காமல் வெற்றி கிடைக்காது!” - சென்னை இளைஞர் அனுபவம்!

இந்த நிலையில், கோவிட் பிரச்னையிலும் கூட ஆர்டர்கள் அதிகரித்திருப்பதால், உத்வேகத்துடன் உற்பத்தியை மேற்கொள் கிறோம். விரைவில், அண்டை மாநிலங்களிலும் உற்பத்திக்கூடத்தைத் தொடங்க இருக்கிறேன். இந்தத் துறையில் முன்னணி தொழில்முனை வோராகும் முனைப்புடன் உற்சாகமாக உழைக்கிறேன்” என்கிற சுகனின் கண்களில் நம்பிக்கைப் பிரகாசிக்கிறது.