கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத் துக்கும் சைரஸ் மிஸ்திரிக்கும் இடையேயான ஐந்து வருட சட்டப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. பல லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள டாடா குழும நிறுவனங்களின் மீதான ஆதிக்கப் போட்டியில், ரத்தன் டாடா தலைமையிலான டாடா சன்ஸ் நிறுவனம் சட்டரீதியாக வெற்றி பெற்றுள்ளது, டாடா குழுமப் பங்குகளில் முதலீடு செய்துள்ள பலரையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது. என்றாலும், இந்தியாவில் உள்ள சிறு முதலீட் டாளர்களின் உரிமையானது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

டாடா சன்ஸ் Vs மிஸ்திரி...

டாடா குழும நிறுவனங்களின் முக்கிய உரிமைதாரரான டாடா சன்ஸ் நிறுவனத்தில், டாடா டிரஸ்ட் அமைப்புகளுக்கு 65.89% பங்குரிமை உள்ளது. சைரஸ் பலோன்ஜி மிஸ்திரியைத் தலைவராகக் கொண்ட ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்துக்கு 18.37% பங்கு உரிமை உள்ளது. ரத்தன் டாடாவுக்குப் பிறகு, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப் பேற்ற, சைரஸ் மிஸ்திரி 24.10.2016 அன்று நடைபெற்ற டாடா சன்ஸ் போர்டு முடிவின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், பொது நிறுவனமாக இருந்த டாடா சன்ஸ் நிறுவனம் தனி நிறுவனமாக மாற்றப்பட்டது.

தனது பதவி பறிக்கப்பட்டதையும் டாடா சன்ஸ் தனி நிறுவனமாக மாற்றப்பட்டதையும் எதிர்த்து மிஸ்திரி தொடர்ந்த வழக்கை தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் (NCLT) தள்ளுபடி செய்தது. ஆனால், மிஸ்திரியின் மேல்முறையீட்டை விசாரித்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (NCLAT), மிஸ்திரிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு வர, இறுதித் தீர்ப்பு யாருக்குச் சாதகமாக வரும் என்கிற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது.

மக்கள் பாதிக்கப்படுவார்கள்...

`டாடா சன்ஸ் நிறுவனம் தனி நபருக்கோ, லாப நோக்கமுடைய மற்றொரு நிறுவனத்துக்கோ சொந்த மானதல்ல’ என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், தேசிய சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் ஆணையை ரத்து செய்து இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ‘டாடா சன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகள் அறக்கட்டளைக்குச் சொந்த மானவை என்பதால், அந்த நிறுவனத்தை ஏதேனும் ஒரு சட்டச் சிக்கலின் அடிப்படையில் முடக்கும்பட்சத்தில், டாடா அறக்கட்டளையின் உதவியை எதிர்நோக்கியிருக்கும் ஏராளமானவர்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்பதை உச்ச நீதிமன்றம் கோடிட்டுக் காட்டியுள்ளது.

முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது ஏன்?

18.12.2012 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் கூட்ட தீர்மானத்தின் அடிப்படையில் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மிஸ்திரியின் பதவிக் காலம் 28.12.2017 மட்டுமே என்பதால், பணி வரையறை நிறைவு பெற்ற பிறகு, அவரைத் திரும்பவும் பதவியில் அமர வைக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், ‘‘ரத்தன் டாடா தனது சிறந்த வழிகாட்டி என 18.12.2012-ல் மிஸ்திரி பாராட்டு தெரிவித்து விட்டு, அடுத்த சில ஆண்டுகளுக்கு உள்ளேயே, ‘பத்து வருடங்களாக டாடா எதேச்சதிகாரமாக நடந்துகொண்டார் என்று குற்றஞ்சாட்டியுள்ளது முன்னுக்குப் பின் முரணாக உள்ளது’’ என்பதை சுட்டிக் காட்டியுள்ளது. மேலும், பல வருடங்கள் டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரராகவும் இயக்குநராகவும் நிறுவனத்தின் பல முக்கிய முடிவுகளில் இணைந்து பங்கேற்று விட்டு, பதவி நீக்கத்துக்குப் பிறகு, நிறுவனத்தைக் குறை சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தலைவர் பதவியை விட்டுக் கொடுத்த டாடா...

நிறுவனத் தலைவர் அல்லது இயக்குநர் பதவிலிருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டது அடக்கு முறையானது என்ற வாதத்தை நிராகரித்துள்ள உச்ச நீதிமன்றம், மிஸ்திரி கூறுவதுபோல ஒருவேளை டாடா சன்ஸ் குடும்ப நிறுவனமாக நடத்தப் பட்டிருந் தால், ரத்தன் டாடா தனது தலைவர் பதவியை சுய விருப்பத்தின் பேரில் விட்டுக் கொடுத்திருக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 1868-ல் ஜாம்செட்ஜி டாடாவால் உருவாக்கப்பட்ட டாடா நிறுவனத்தில் 1965-ல்தான் முதன்முதலாக மிஸ்திரியின் தந்தை பங்குகளை வாங்கியுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், முந்தைய 144 ஆண்டுகளாக டாடா குடும்ப உறுப்பினர்களால் மட்டுமே நிர்வகிக்கப்பட்ட டாடா குழுமத்தில் முதல் வெளிநபராக, ஒரு மைனாரிட்டி பங்குதாரரான மிஸ்திரி தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட நிலையில், டாடா நிறுவனத்தில் கார்ப்பரேட் நெறிமுறைகள் சரிவர பின்பற்றப் படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சிறு பங்குதாரர்களின் நிலை என்ன..?

தனியார் நிறுவனங்களில் இயக்குநர் குழுவில், மைனாரிட்டி முதலீட்டாளர்களுக்குத் தனியே இட ஒதுக்கீடு நடைமுறையை நடைமுறைப்படுத்த, நிறுவனங் களைச் சட்ட ரீதியாகக் கட்டா யப்படுத்த முடியாது என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இது குறித்து அந்தந்த நிறுவனங்களே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்ட நிறுவனங்களில், சிறு முதலீட்டாளர்களை பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் குறைந்த பட்சம் ஒரு இயக்குநரை நியமிக்க வேண்டும் என கம்பெனிச் சட்டம் 2013, 151-ம் பிரிவு அறிவுறுத்தினாலும், சிறு முதலீட் டாளர்களின் விகிதாச்சார அடிப்படையில் இயக்குநர்கள் எண்ணிக்கை அமைய வேண்டும் என்று வலியுறுத்தப்படவில்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.

இந்த வழக்கில் மிஸ்திரி தரப்பு, சிறுபான்மை முதலீட்டாளர்களின் உரிமைகள் என்ற பெயரில் ஏராளமான வாதங்களை முன்வைத்தது. குறிப்பாக, சிறு முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இயக்குநர்கள் குழுவில் இடம் அளிக்க வேண்டும் என்றும், ஒரு பொது நிறுவனத்தைத் தன்னிச்சையாகத் தனி நிறுவனமாக மாற்றக் கூடாது என்றும் வழக்கு தொடர்ந்திருந்தது.

ஒரு நிறுவனம் இயக்குநர் குழுவின் வழிகாட்டுதலின் பேரில் மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், இயக்குநர் குழுவின் முடிவுகளில் முக்கியமான பங்குதாரர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்றும் ஒரு சிறுபான்மை முதலீட்டாளராக, மிஸ்திரி தரப்பு முன்வைத்த வாதங்கள் நிராகரிக்கப் பட்டிருப்பது பல புதிய விவாதங்களை எழுப்பியுள்ளன.

இரண்டு தனிநபர்/தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான உரிமை குறித்த ஒரு வழக்கின் தீர்ப்பு மட்டுமே இது என்றாலும், தீர்ப்பின் சாராம்சம் வருங்காலப் பொதுநல/தனியார் வழக்குகள் மீதும் தாக்கம் செய்யவல்லது என்பதால், அதிக முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, மைனாரிட்டி பங்குதாரர் முதலீடு களைத் தன்னிச்சையாக மாற்றும் அதிகாரம் கொண்ட (டாடா சன்ஸ்) அமைப்பு விதி (Articles of Association) எண் 75-ஐ முடக்கி வைத்து தீர்ப்பு வழங்கிய தேசிய நிறுவன சட்ட மேல் முறையீட்டு ஆணையத்தின் (NCLAT) உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது, சிறு முதலீட்டாளர் களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. ஒரு நிறுவனத்தின் அமைப்பு விதிகளை முழுமையாக ஏற்றுக்கொண்ட பின்னர்தான் பங்கு முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலை, எந்தளவுக்கு சாதாரண முதலீட்டாளர்களுக்குப் பொருந்தும் என்பதும் விவாதத்துக்குரிய விஷயமே!

இந்தியாவைப் பொறுத்தவரை, புரொமோட்டர்கள் என்று அழைக்கப்படும் ‘நிறுவனங்களின் ஆரம்பகட்ட முதலீட்டாளர்’களின் கைதான் எப்போதுமே ஓங்கியுள்ளது. யெஸ் வங்கி, திவான் ஹவுஸிங், சத்யம் போன்ற பல நிறுவனங்களில் புரொமோட்டர்களின் மோசடிகள் எந்தளவுக்கு சிறு முதலீட்டாளர்களை பாதித்தன என்பதை அனைவரும் அறிவர்.

இந்த நிலையில், சிறுபான்மை முதலீட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கமும் செபி போன்ற ஒழுங்குமுறை ஆணை யங்களும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சிறு முதலீட்டாளர்களின் உரிமை குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தவும் புரொமோட்டர்களின் நடவடிக்கை களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் மேலும் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை!

இனி என்ன செய்வார் மிஸ்திரி..?

‘குடும்பச் சொத்தில் தனக்குரிய நியாயமான பங்கை வழங்கவில்லை என்பதற்காக சொந்த வீட்டுக்குத் தீ வைக்கத் துணிந்த ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் எப்படி அமர வைக்க முடியும்?’ என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சுமார் 55 வருடங்களுக்கு முன்பு சில லட்சங்கள் மட்டுமே முதலீடு செய்யப்பட்ட மிஸ்திரி குடும்பத்தினரின் பங்கு மதிப்பு தற்போது பல ஆயிரம் கோடிகளாக உயர்ந்துள்ளது. இதுவரை டிவிடெண்ட்டாகக் கிடைத்துள்ள தொகை மட்டுமே 1,000 கோடி ரூபாய்க்கும் மேல். டாடா சன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், மிஸ்திரிக்கு இத்தனை பெரிய வருமானம் தொடருமா என்பது சந்தேகமே.

இந்தியாவின் மிகப்பெரிய குழுமத்தின் தலைமைப் பொறுப்பு என்ற அரிதான பதவியும் இளம் வயதிலேயே கிடைக்கப் பெற்ற சைரஸ் மிஸ்திரியின் எதிர்காலம் இனி பிரகாசமாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே. டாடா சன்ஸ் சொத்துப் பிரிவினையில் நீதிமன்றம் தலையிடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பும் சைரஸ் மிஸ்திரி தரப்பை வெகுவாக பலவீனப்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மிஸ்திரி, ஒரு மைனாரிட்டி பங்குதாரராக, இந்தத் தீர்ப்பு தமக்கு பெரிதும் ஏமாற்றமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். அதே சமயத்தில், தான் எப்போதுமே நேர்மையாகவே நடந்துகொண்டதாகவும் இனிமேலும் தன்னால் நிம்மதியாகத் தூங்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கட்டுமானப் பணிகளில் பெருமளவுக்கு ஈடுபட்டுள்ள மிஸ்திரியின் ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தை, ரியல் எஸ்டேட் துறையின் சமீபத்திய வீழ்ச்சி பெரிதும் பாதித்துள்ளது. சுமார் 10,000 கோடி ரூபாய்க்கும் மேலான கடன்கள் மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா சன்ஸ் நிறுவனப் பங்குகளை அடமானமாக வைத்து கடன் திரட்டும் முயற்சிக்கும் ஏற்கெனவே முட்டுக்கட்டை போடப்பட்டுவிட்டது. டாடா சன்ஸ் நிறுவன சொத்துப் பிரிவினையில், கிடைக்கவுள்ள தொகையைப் பயன்படுத்தியே மிஸ்திரி குழுமம் தனது கடன் சிக்கலில் இருந்து மீண்டுவர முடியும் என்று கருதப்படுகிறது. எனவே, மிஸ்திரி பழைய உச்ச நிலைமைக்குத் திரும்புவது கடினம் என்றே தோன்றுகிறது.

டாடா குழுமப் பங்குகளின் வருங்காலம் எப்படி இருக்கும்?

பல வருட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த இந்த மிகப்பெரிய வெற்றி டாடா குழும நிறுவனங்களின் வருங்கால செயல்பாடுகளிலும் இனிவரும் நாள்களில் பிரதிபலிக்கும். டாடா குழுமத்தின் உடனடிக் கவனம், சைரஸ் மிஸ்திரியின் பங்கு மதிப்பைக் கணித்து அவரை முழுமையாக வெளியேற்று வதாகத்தான் இருக்கும். சொத்துப் பிரிவினையில் தலையிட முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் உறுதியான முடிவு, மிஸ்திரியுடனான சொத்துப் பிரிவினை குறித்த பேச்சுவார்த்தையில், டாடா குழுமத்தின் கை ஓங்கியிருக்க உதவியாக இருக்கும். மிஸ்திரியின் பங்குத் தொகையை அவருக்கு பணமாக வழங்குவதற்குத் தேவையான நிதியைத் திரட்டுவதும் டாடாவின் மற்றொரு முக்கிய பணியாக இருக்கும்.

சைரஸ் மிஸ்திரியின் முழுமையான வெளியேற்றம் டாடா சன்ஸ் நிர்வாகக் குழப்பங்களுக்கு முடிவு கட்டுவதுடன் நீண்டகால முக்கிய முடிவுகளை ஒரு மனதாக மேற்கொள்ளவும் வழிவகுக்கும். இந்தியாவின் மற்றொரு பெரும் குழுமமான ரிலையன்ஸ் இணைய வணிகம் மற்றும் தொலைதொடர்புத் துறைகளில் பெரும் ஆதிக்கம் செலுத்திவரும் நிலையில், டாடா குழுமமும் தமக்கான புதிய பாதைகளை விரைவில் தேர்ந்தெடுத்து வெற்றிப்பயணம் மேற்கொள்ளும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கலாம்!