Published:Updated:

முதலீட்டாளரின் முதல் முகவரி... தொழில் துறையில் வேகமாக முன்னேறும் தமிழகம்!

தொழில் துறை
பிரீமியம் ஸ்டோரி
தொழில் துறை

தொழில் துறை

முதலீட்டாளரின் முதல் முகவரி... தொழில் துறையில் வேகமாக முன்னேறும் தமிழகம்!

தொழில் துறை

Published:Updated:
தொழில் துறை
பிரீமியம் ஸ்டோரி
தொழில் துறை

தொழில் துறையில் தமிழகம் வேகமாக முன்னேறி வருகிறது என்பதற்கு சமீபத்தில் சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாடு மிகச் சிறந்த உதாரணம். ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு’ என்கிற தலைப்பில் கடந்த வாரம் சென்னையில் நடந்த முதலீட் டாளர்கள் மாநாட்டில் 60 தொழில் திட்டங் களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது. ரூ.1.25 லட்சம் கோடி முதலீட்டில் உருவாகவிருக்கும் இந்தத் தொழில் திட்டங்களால் 75,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

அடிக்கடி நடக்கும் முதலீட்டாளர் மாநாடு...

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முதலீட்டாளர் மாநாடு என்பது எப்போதோ நடக்கும் ஒரு நிகழ்வாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அது நடந்தால் நடக்கும்; இல்லாவிட்டால் நடக்காது என்கிற நிலையே பெரும்பாலும் இருந்தது. ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டுக் காலத்தில், கோவையில் ஒரு முதலீட்டாளர் மாநாடு பெரிய அளவில் நடத்தப்பட்டது. அதற்கடுத்து, தற்போது சென்னையில் இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது. இப்படி முதலீட்டாளர் மாநாடு அடிக்கடி நடத்தப்படுவது தமிழகத் தொழில் சூழலை உற்சாகப் படுத்தும் அம்சமாகவே இருக்கும்.

முதலீட்டாளரின் முதல் முகவரி...
தொழில் துறையில் வேகமாக முன்னேறும் தமிழகம்!

மூன்றில் ஒரு பகுதி சென்னையைச் சுற்றி...

இந்த மாநாட்டில் மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டிருந்தாலும், இவற்றில் 53 தொழில் ஒப்பந்தங்கள் 58,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிப்பவையாக உள்ளன. இந்த 53 தொழில் ஒப்பந்தங்களில் சென்னையில் ஏழு நிறுவனங்களும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏழு நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களை அமைக்க உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஐந்து நிறுவனங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரு நிறுவனங் களும் தொழில் நிறுவனங்களை அமைக்க உள்ளன.

இந்த 21 திட்டங்களில் சிஃபி டெக்னாலஜீஸ், இகுனிக்ஸ், பாம் டிஜிட்டல் (BAM Digital), லுமினா க்ளவுட் இன்ஃப்ரா நிறுவனங்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தகவல் தரவு மையங்களை (data centres) அமைக்க இருக்கின்றன. செங்கல்பட்டில் மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று மிகப் பெரிய அளவு மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றைத் தொடங்க உள்ளது. அவிங்னா என்னும் தொழில் நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொழில் பூங்கா ஒன்றையும் தகவல் தரவு மையம் ஒன்றையும் அமைக்கப்போகிறது.

டயர்களை உற்பத்தி செய்யத் தேவையான உபகரணங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை எல் அண்ட் டி நிறுவனம் காஞ்சிபுரத்தில் அமைக்க உள்ளது. சி.டி.ஆரெல்எஸ் நிறுவனம் அம்பத்தூரில் தகவல் தரவு மையம் ஒன்றையும், எஸ்.ஆர்.எஃப் நிறுவனம் திருவள்ளூரில் தொழில்நுட்ப ஆடைகள் அமைக்கும் தொழிற்சாலை ஒன்றையும் அமைக்க உள்ளது.

தென் மாவட்டங்களுக்கு 68% முதலீடு...

பொதுவாக, தொழில் முதலீடு வரும்போது சென்னையைச் சுற்றியும், கோவையைச் சுற்றியும்தான் அதிகம் இருக்கும். இந்த இரு நகரங்களைத் தாண்டி தென் தமிழகத்துக்குச் செல்வது குறைவாகவே இருக்கும். ஆனால், அண்மையில் நடந்த இந்த முதலீட்டாளர் மாநாட்டில் வந்த மொத்த தொழில் முதலீடு களில் 68% தென் மாவட்டங்களை நோக்கி வந்திருப்பது ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் தொழில் திட்டங்களுக்கான முதலீடு வந்திருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயமாகும்!

தூத்துக்குடியில் ரூ.52,474 கோடியில் தொழில் திட்டம்...

தூத்துக்குடியில் ரூ.52,474 கோடி முதலீட்டில் ஆக்மே நிறு வனம் பசுமை அமோனியா உற்பத்தி செய்யும் நிறுவனத்தைத் தொடங்கப்போகிறது. குர்கானில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் ஆக்மே நிறுவனம் தூத்துக்குடியில் அமைக்கவிருக்கும் இந்த அமோனியா நிறுவனம், உலக அளவில் மிகப் பெரும் அமோனியா தயாரிக்கும் தொழிற் சாலையாக இருக்கும் என்கிறார்கள். அதே போல, அம்ப்ளஸ் நிறுவனம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் நிறுவனத் தையும் தூத்துக்குடியில் தொடங்குகிறது. தூத்துக்குடியில் துறைமுக வசதி சிறப்பாக இருப்பதே இந்த நிறுவனங்களும் அங்கு தொழிற்சாலை அமைப்பதற்கு மிக முக்கியமான காரணம் என்று சொல்லப்படுகிறது.

மாற்று எரிசக்தி உற்பத்தியில் முதலிடம்...

மாற்று எரிசக்தி உற்பத்தி செய்வதில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இரு தொழில் திட்டங்கள் மூலம் ஏறக்குறைய ரூ.12,000 கோடி அளவுக்கு முதலீடுகள் வந்திருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் ஆகும். அமெரிக்காவைச் சேர்ந்த கியூபிக் பி.வி நிறுவனம் சூரிய ஒளியிலிருந்து 4 கிகாவாட் செல்ஸ் மற்றும் 4 கிகாவாட் மாடியூல்ஸ் மின்சக்தி தயாரிக்கும் திட்டத்தை ரூ.8,832 கோடி முதலீட்டில் தொடங்கவுள்ளது. டாடா பவர் நிறுவனம் கங்கை கொண்டான் சிப்காட்டில் ரூ.3,000 கோடி முதலீட்டில் மின் உற்பத்தி மையம் ஒன்றை அடுத்த மாதம் முதல் தொடங்க உள்ளது. இந்த நிறுவனம் சூரிய ஒளியிலிருந்து மின்சக்தி உற்பத்தி செய்யத் தேவையான செல்களையும், மாடியூல்களை யும் கடந்த 30 ஆண்டுகளாகத் தயார் செய்து வருகிறது.

மாற்று மின் உற்பத்திக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. அதிலும் தமிழகம் அதிக அக்கறை காட்டுவதே இந்த இரு நிறுவனங்களும் தமிழகத்தைத் தேடிவர வைத்திருக்கிறது.

கோவைக்கு வரும் டெக் மஹிந்த்ரா மற்றும் எல் & டி...

இதுநாள் சென்னையில் மட்டுமே இருந்துவந்த டெக் மஹிந்த்ரா நிறுவனம், கோவை யில் தனது நிறுவனத்தைத் தொடங்கி விரிவுபடுத்த இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்து கொண்டுள் ளது. இந்த விரிவாக்கம் மூலம் சுமார் 1,000 பேருக்கு வேலை கிடைக்கும். அதேபோல, எல்&டி நிறுவனம் கோவையில் ரூ.1,500 கோடி முதலீட்டில் ஒரு மையத்தை அமைக்கப் போகிறது.

தொழில்துறையில் தமிழ கத்தை நம்பர் ஒன் மாநிலமாக ஆக்கப் பாடுபடும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!