Published:Updated:

பிக்பாஸ்கெட்டில் முதலீடு செய்யும் டாடா குழுமம்... ரிலையன்ஸோடு மோதி ஜெயிக்குமா?

அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் பிரிவில் செயல்பட்டு வந்தாலும் இந்தப் பிரிவில் பெரிய நிறுவனமாக பிக்பாஸ்கெட் திகழ்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த அக்டோபர் மாதம் முதல் நடந்த பேச்சுவார்த்தைகள் ஒருவழியாக முடிந்திருக்கின்றன. பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் 68% பங்குகளை டாடா குழுமம் வாங்க இருக்கிறது. தற்போதுகூட இதற்கான முறையான மற்றும் முழுமையான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்
டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்

டாடாவின் சூப்பர் ஆப் திட்டம்

பிக்பாஸ்கெட் நிறுவனத்தை வாங்கியபின் டாடா குழுமம் `சூப்பர் ஆப்’ ஒன்றைத் தொடங்கும் முயற்சியில் இருப்பதை அந்த குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார். இந்த ஆப் மூலம் ஃபிளிப்கார்ட், ரிலையன்ஸ் மற்றும் அமேசான் ஆகிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியும்.

2011-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ்கெட் தற்போது 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. அமேசான், பிளிப்கார்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருள்கள் பிரிவில் செயல்பட்டு வந்தாலும் இந்தப் பிரிவில் பெரிய நிறுவனமாக பிக்பாஸ்கெட் திகழ்கிறது. ஒரு நாளைக்கு மூன்று லட்சம் டெலிவரியை இந்த நிறுவனம் செய்கிறது.

2020-ம் ஆண்டு முடிவில் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யப்படும் மளிகைப் பொருள்கள் சந்தையின் விற்பனை 1.9 பில்லியன் டாலர் ஆகும். இது வருகிற 2024-ம் ஆண்டில் 18 பில்லியன் டாலராக மாறும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதனால் இந்தச் சந்தையில் கடும்போட்டி நிலவுகிறது.

Amazon
Amazon
ஃபியூச்சர் குழும பிரச்னை... அமேசான் - ரிலையன்ஸ் ஈகோ யுத்தம்..! எப்போது முடிவுக்கு வரும்?

வெளியேறும் முதலீட்டாளர்கள்

இந்த நிறுவனத்தில் பல நிறுவன முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். அலிபாபா, அப்ராஜ் குழுமம், ஐ.எஃப்.சி உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் பங்கினை வைத்திருக்கின்றன. இந்தக் குழுமங்கள் டாடாவிடம் பங்குகளை விற்று வெளியேறத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இது குறித்த தகவல்கள் அடுத்த சில வாரங்களில் தெளிவாகத் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போதைய தலைமைச் செயல் அதிகாரி ஹரி மேனன், ஒரு உறுப்பினராக இருந்து இந்த நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவார் என்றும் தெரிகிறது.

டாடா குழுமத்துக்கு எந்த அளவுக்கு பிக்பாஸ்கெட் பலன் சேர்க்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு