Election bannerElection banner
Published:Updated:

`எல்லோருக்கும் நன்றி!' - 7 லட்சம் ஊழியர்களுக்கு டாடா சன்ஸ் தலைவர் உருக்கமான கடிதம்

டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்
டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்

2020-ம் ஆண்டு மிகப்பெரிய இழப்புகளைக் கொடுத்தபோதும், மக்கள் பலர் அவரவர் வேலைகளை சரியாகச் செய்ததை நான் கண்கூடாகக் கண்டேன்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தொடர்ந்து பங்களித்த டாடா குழுமத்தின் 7,00,000 ஊழியர்களுக்கும் கடிதத்தின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் டாடா சன்ஸ் தலைவர் நடராஜன் சந்திரசேகரன்.

"வழக்கமாக ஆண்டின் இந்த நேரத்தில் நான் உங்களுக்கு திட்டங்கள் மற்றும் முன்னுரிமைகளைப் பற்றித்தான் விவரிப்பேன். ஆனால் இந்த ஆண்டு நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். கடந்த ஆண்டு நிறுவனத்தின் மூத்த தலைமைக் குழு எதிர்கொண்ட சவால்களை, உங்களில் பலர் எதிர்கொண்ட தனிப்பட்ட சவால்களுடன் ஒப்பிட முடியாது. தொற்றுநோயின் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால், வலி மற்றும் இழப்பின் தனிப்பட்ட கதைகள் பல உள்ளன. நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்
டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்

2020-ம் ஆண்டு மிகப்பெரிய இழப்புகளைக் கொடுத்தபோதும், மக்கள் பலர் அவரவர் வேலைகளை சரியாகச் செய்ததை நான் கண்கூடாகக் கண்டேன். புலம்பெயர்ந்தோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உணவு வழங்குவது முதல், மருத்துவமனைகளை உருவாக்குவது மற்றும் பொது சுகாதாரத் தரவுகளைச் சேகரிப்பது வரை, கோவிட்-19 தொற்றுக்கான சி.ஆர்.எஸ்.பி.ஆர் (CRSPR) பரிசோதனையை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் நமது முயற்சிகள் வரை, ‘ஒன் டாடா’வின் மிகச் சிறந்த செயல்பாட்டைச் செய்திருக்கிறோம். இதற்கான உங்கள் பணி எனக்கு பெருமையளித்ததோடு இந்த குழுவை மேலும் வழிநடத்த என்னைத் தூண்டியது.

Vikatan

தனிப்பட்ட நிறுவனங்களுக்கு அப்பால், குடிமக்களும் அரசாங்கங்களும் ஒன்று சேர்ந்துள்ளன. இன்றைய நிலையில் உலகளாவிய முயற்சி மட்டுமே நம்மை இயல்பு நிலைக்குக் கொண்டு வரமுடியும் என நான் நினைக்கிறேன்.

வெற்றிகரமான கால்பந்து பயிற்சியாளரான 'பால் பியர் பிரையன்ட் ' (Paul ‘Bear’ Bryant) கூறிய மேற்கோள் ஒன்றை நினைவுபடுத்துகிறேன், "வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை மட்டும் போதாது; அது எல்லோர்க்கும் உண்டு. ஆனால் அந்த வெற்றிக்காக நம்மை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்". நெருக்கடியான இந்த நேரத்தில் வெற்றிக்காகப் பாடுபடும் நீங்கள், அதற்காக தகுதிபடுத்திக் கொள்ளுங்கள். இப்போது அதுதான் அவசியம்.

டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்
டாடா சன்ஸ் குழுமத் தலைவர் என்.சந்திரசேகரன்

இந்த ஆண்டு மிகக் கடினமாக இருந்தபோதிலும், புதுப்பிக்கப்பட்ட மனித ஆற்றலுடன் அதை முடிக்கிறோம். டாடா சன்ஸ் ஊழியர்களின் பொறுமை மற்றும் நம்பிக்கையைப் பாராட்டுவதுடன், இந்த சூழல் மருத்துவம், நகர்ப்புற திட்டமிடல், கட்டடக்கலை மற்றும் எண்ணற்ற பிற துறைகளில் முன்னேற்றத்தை ஊக்குவித்துள்ளதையும் நாம் கவனிக்கவேண்டும். ஊழியர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு