Published:Updated:

இந்த ஆண்டிலாவது வெளியாகுமா டாடாவின் சூப்பர் ஆப்..? நிறுவனங்களை ஒன்றிணைக்குமா?

டாடாவின் சூப்பர் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
டாடாவின் சூப்பர் ஆப்

B U S I N E S S

இந்த ஆண்டிலாவது வெளியாகுமா டாடாவின் சூப்பர் ஆப்..? நிறுவனங்களை ஒன்றிணைக்குமா?

B U S I N E S S

Published:Updated:
டாடாவின் சூப்பர் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
டாடாவின் சூப்பர் ஆப்

டாடா குழுமம் 150 ஆண்டு களுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு முக்கியமான பிரிவிலும் டாடா இருக்கிறது. டாடாவை பி2பி நிறுவனம் என்று சொல்லிவிட முடியாது. ரீடெய்ல், ஏசி, உப்பு, மியூச்சுவல் பண்ட், கார், ரியல் எஸ்டேட், நிதி நிறுவனம், விமான டிக்கெட், ஹோட்டல்கள் என வாடிக்கையாளர்கள் நேரடியாக பயன்படுத்தும் பல துறைகளில் டாடா இருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் டெக்னாலஜி மூலம் நிறுவனங்கள் ஒருங்கிணைக்கப் பட்டு வருகின்றன. ஆனால், டாடா இந்த விஷயத்தில் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் செய்யவில்லை. இந்த நிலையில், தங்களது சொந்த பிராண்டுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் டாடா இறங்கியுள்ளது.

இன்னும் வெளிவராத சூப்பர் ஆப்...

ரத்தன் டாடா தனிப்பட்ட முறை யில் சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்தாலும், ஒரு குழுமமாக ஆப்களில் கவனம் செலுத்தத் தவறியது. இதை மிகக் காலதாமதமாக உணர்ந்த டாடா, வாடிக்கை யாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு ள்ள அனைத்து பிராண்ட்டு களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது. இதற்காக டாடா டிஜிட்டல் என்னும் நிறுவனம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது சூப்பர் ஆப் என்னும் செயலியைக் கொண்டுவர திட்ட மிடப்பட்டது. ஆனால், இன்னும் இந்தச் செயலி வெளியாகவில்லை.

இந்த ஆண்டிலாவது வெளியாகுமா 
டாடாவின் சூப்பர் ஆப்..?  நிறுவனங்களை ஒன்றிணைக்குமா?

செளரப் அகர்வால் வருகைக்குப்பின்...

டாடா சன்ஸ் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் என்.சந்திர சேகரன் பல முக்கியமான மாற்றங் களைச் செய்தார். அதில் ஒன்றுதான், குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியாக செளரப் அகர்வால் நியமனம் செய்யப்பட்டது. இவர் நிறுவனங்களை இணைப்பதில் வல்லவர். டாடா சன்ஸில் இணை வதற்கு முன்பு ஆதித்ய பிர்லா குழுமத்தில் இருந்தவர். வோடஃபோன் ஐடியா இணைப்பு மற்றும் ஜே.பி சிமென்ட் நிறுவனத்தை இணைத்தது உள்ளிட்டவற்றை நடத்திக் காட்டி யவர். டி.சி.எஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ-வைக் கையாண்ட நிறுவனங்களில் டி.எஸ்.பி-யும் ஒன்று. அப்போது முதல் சந்திரசேகரனும் செளரப் அகர்வாலும் நண்பர்கள். அதனால் டாடா டிஜிட்டலுக்குத் தேவையான நிறுவனங்களை வாங்கும் பொறுப்பு அகர்வால் வசம் ஒப்படைக்கப்பட்டது.

மிஸ்ஸான ஜஸ்ட் டயல்...

டாடா குழுமத்தில் வாடிக்கை யாளர்களுக்குத் தேவையான பிராண்ட்டுகள் இருந்தாலும் மேலும் சில ஸ்டார்ட்அப்களை வாங்க திட்டமிட்டது டாடா டிஜிட்டல். டாடா குழுமம் மட்டுமல்லாமல் ரிலையன்ஸ் குழுமமும் டெக்னாலஜி யில் கவனம் செலுத்தாததால், பல டெக்னாலஜி நிறுவனங்களை வாங்கி வருகிறது. உதாரணமாக, ஜஸ்ட் டயலை ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் வாங்கியது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு வரை டாடா குழுமம் இந்த நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்திவந்தது.

டாடா நிறுவனம் இதுவரை மூன்று முக்கியமான நிறுவனங்களை டாடா வாங்கியிருக்கிறது. மேலும், சில நிறுவனங்களைக் கையகப் படுத்தவும் டாடா டிஜிட்டல் திட்ட மிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்தே கனவுத் திட்டமான சூப்பர் ஆப் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வாங்கிய மூன்று நிறுவனங்கள்...

டாடா நிறுவனம் மூன்று முக்கியமான நிறுவனங்கள் கடந்த ஓராண்டு காலத்தில் வாங்கியிருக்கிறது. இ-குரோசரி சந்தையில் பெரும் பான்மையான சந்தையை வைத்திருக்கும் நிறுவனம் பிக் பாஸ்கட். இந்த நிறுவனத்தில் 64% சந்தையை டாடா குழுமம் வாங்கி யிருக்கிறது. அதே போல, இ-பார்மஸி துறையில் உள்ள முக்கிய நிறுவனமான 1எம்.ஜி நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை டாடா குழுமம் வாங்கியிருக்கிறது. மேலும். கியூர் ஃபிட் என்னும் நிறுவனத்தில் 7.5 கோடி டாலர் அளவுக்கு முதலீடு செய்திருக் கிறது. தவிர, இந்த நிறுவனத்தின் நிறுவனர் முகேஷ் பன்சால் (இவர் ஏற்கெனவே மிந்த்ரா நிறுவனத்தைத் தொடங்கி அதை ஃபிளிப் கார்டுடன் இணைத்தார்), டாடா டிஜிட்டல் நிறுவனத்தின் தலைவராகவும் 1எம்.ஜி நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், 1எம்.ஜி நிறுவனத்தில் இயக்குநர் குழுவில் பிக் பாஸ்கட் தலைமைச் செயல் அதிகாரி ஹரிமேனனும் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதனிடையே, டன்ஸோ நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா டிஜிட்டல் திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால், டன்ஸோ நிறுவனம் இதை மறுத்திருக்கிறது.

நிதிச் சேவைகள்...

சர்வதேச அளவில் நியோ பேங்கிங் என்பது பிரபலமான கான்செப்ட். அதாவது, வங்கி அல்லது நிதி நிறுவனக் கிளைகள் ஏதும் இல்லாமல் நிதிச் சேவைகளை வழங்குவது நியோ பேங்க் என அழைக்கப்படும். டாடா குழுமத்திடம் வங்கி தவிர, மற்ற அனைத்துச் சேவைகளும் உள்ளன. காப்பீடு, நிதி நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட அனைத்தும் உள்ளன. அதனால் இந்த சூப்பர் ஆப்பில் அனைத்துவிதமான நிதிச் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்யவும் டாடா டிஜிட்டல் திட்டமிட்டிருக்கிறது. இந்த நிலையில், சூப்பர் ஆப் செயலியைக் கொண்டுவருவது எப்படி எனத் திட்டமிடுவதற்காக டாடா குழுமத்தின் 20 முக்கிய உயரதிரிகாரிகள் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். டாடா சன்ஸ் தலைவர், டாடா டிஜிட்டல் சி.இ.ஓ பிரதிக் பால், புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட 20 நபர்கள் டாடா டிஜிட்டலின் திட்டம் குறித்து விவாதித்தி ருப்பதாகத் தெரிகிறது.

2020-ம் ஆண்டே இந்தச் செயலியை அறிமுகம் செய்ய டாடா திட்டமிட்டிருந்தது. வரும் செப்டம்பரில் சூப்பர் ஆஃப் அறிமுகம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. டாடாவிடம் இருந்து பல அறிவிப்புகள் வரும் மாதங்களில் நமக்குக் காத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism