Published:Updated:

``தமிழகத்தில் வரி ஏய்ப்பு செய்யும் வடமாநிலத்தவர்கள் விரைவில் களையப்படுவார்கள்!" - அமைச்சர் மூர்த்தி

அமைச்சர் மூர்த்தி
News
அமைச்சர் மூர்த்தி

``வரி ஏய்ப்பு செய்வதற்காகவே வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் வந்து தொழில் செய்கிறார்கள். பொருள்களின் விலையைக் குறைத்து விற்பனை செய்து வரி ஏய்ப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழக வியாபாரிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, அவர்கள் எல்லாம் கண்டறிந்து விரைவில் களையப்படுவார்கள்."

தேனி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 7-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழுக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாகத் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் வணிகவரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மூர்த்தி, ``ஜி.எஸ்.டி நலச் சங்கத்தில் அனைத்து வணிகர்களும் உறுப்பினர்களாவதற்கு 500 ரூபாய் கட்டணம் விலக்களிக்கப்பட்டதுடன், கால அவகாசம் நான்கு மாதங்களாக உயர்த்தி முதல்வர் அறிவித்திருக்கிறார். மேலும், வணிகர் நல வாரியம் அமைப்பதற்கான அறிவிப்பும் விரைவில் முதலமைச்சரால் வெளியாக உள்ளது.

ஆண்டு விழா
ஆண்டு விழா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

2011-ம் ஆண்டுக்கு முன் தமிழகத்தில் இருந்த வாட் வரி விதிப்பில் வணிகர்கள் செலுத்த வேண்டிய 29,000 கோடி ரூபாயை சீர்செய்வதற்கு சமாதானத் திட்டம் அமைக்க வேண்டும் என்ற வணிகர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின், சட்டமன்றத்தில நடைபெற்ற மானியக் கோரிக்கையில் சமாதானத் திட்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதுவும் விரைவில் செயல்படுத்தப்படும்.

நியாயமாக, நேர்மையாகத் தொழில் செய்யும் சிறு, குறு என அனைத்துத் தரப்பு வணிகர்களுக்கு தமிழக அரசு எப்போதும் உதவி செய்யும். ஆனால், இன்றைக்கு வரி ஏய்ப்பு செய்வதற்காகவே வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் வந்து தொழில் செய்கிறார்கள். பொருள்களின் விலையைக் குறைத்து விற்பனை செய்து வரி ஏய்ப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். இதனால் தமிழக வியாபாரிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் எல்லாம் கண்டறிந்து விரைவில் களையப்படுவார்கள்.

ஜவுளித்துறை மட்டுமல்ல, பல தொழில்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளது. அதற்கொல்லாம் ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி

தமிழகத்தில் தொழிலை மேம்படுத்தக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுப்போம். அதே நேரத்தில், ஜி.எஸ்.டி வரியை முழுவதுமாக வணிகர்கள் செலுத்தாமல் இருக்கக் கூடாது. 50% ஜி.எஸ்.டி-யையாவது வணிகர்கள் செலுத்த வேண்டும்.

முந்தைய அரசு 6 லட்சம் கோடி ரூபாய் கடனாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். வரி ஏய்ப்பு செய்பவர்கள் அதிகமாக இருப்பதால், சிறு வியாபாரிகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். போலி வியாபாரிகள் பெருகி வருகிறார்கள். வணிகர்களின் கோரிக்கைகளைத் தமிழக முதல்வரிடம் நானும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களும் தெரிவிப்போம்'' என்றார்.