Published:Updated:

கொரோனா காலத்திலும் அதிக லாபம் ஈட்டி முதலிடத்தில் TCS; காலாண்டு முடிவுவில் Wipro, Infosys நிலை என்ன?

IT Companies (Representational Image)
News
IT Companies (Representational Image)

டாடா குழுமத்தில் அதிகம் லாபம் தரும் நிறுவனமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி சேவை நிறுவனமாகவும் விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனத்தைவிடவும் அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. மற்ற துறை சார்ந்த நிறுவனங்களை விட, ஒவ்வொரு காலாண்டிலும் ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்களே காலாண்டு முடிவுகளை முதலில் வெளியிடும். அந்த வகையில் இந்த முறையயும் பல முன்னணி ஐ.டி நிறுவனங்கள் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.

கடந்த 12.01.2022-ம் தேதி, ஐ.டி துறையின் ஜாம்பவான்களாகக் கருதப்படும் விப்ரோ, டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகளை ஒருசேர வெளியிட்டு முதலீட்டாளர்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கின்றன.

இந்த மூன்று நிறுவனங்களின் டிசம்பர் காலாண்டு முடிவுகளில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

காலாண்டு முடிவுகள் (Representational Image)
காலாண்டு முடிவுகள் (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா என்னும் கொடிய நோய் தொற்று உலகத்தை தாக்கியபோது மக்கள் மட்டுமல்ல அனைத்து துறை சார்ந்த நடவடிக்கைகளும் முடங்கித்தான் போயின. ஆனால், ஐ.டி துறை மற்றும் அத்துறை சார்ந்த நிறுவனங்கள் மட்டும் எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் இயங்கிக் கொண்டிருந்தன. ஏனெனில், தொழில்நுட்ப தேவைகள் கொரோனா காலங்களில்தான் மிக அதிகமாக இருந்தன. கொரோனா தொற்று மெள்ள மெள்ள குறைய, அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு 2020-ம் ஆண்டின் அரையிறுதிக்கு மேலாகப் பெரும்பாலான துறை சார்ந்த நடவடிக்கைகள் மீட்சியைச் சந்தித்தன. வீழ்ச்சியில் இருந்த இந்தியப் பொருளாதாரமும் எழ ஆரம்பித்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதன் பிறகு, 2021-ம் ஆண்டில் அனைத்துத் துறை நிறுவனங்களும் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று அதிக அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் நாட்டின் முன்னணி ஐ.டி சேவை நிறுவனமான டி.சி.எஸ் இந்த வருடம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. டாடா குழுமத்தில் அதிகம் லாபம் தரும் நிறுவனமாகவும், இந்தியாவின் மிகப்பெரிய ஐ.டி சேவை நிறுவனமாகவும் விளங்கும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனத்தை விடவும் அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

டி.சி.எஸ்
டி.சி.எஸ்

இந்நிறுவனம் கடந்த ஆண்டி டிசம்பர் காலாண்டைவிடவும் 12.30% அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு ரூ. 8,701 கோடி லாபத்தைப் பெற்ற டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இந்த ஆண்டு ரூ. 9,769 கோடி அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் காலாண்டில் இது ரூ.9,624 கோடியாக இருந்தது. அதே போல, இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டில் 42,015 கோடி ரூபாயாக இருந்தது. இது தற்போது ரூ.48,885 கோடியாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் ரூ.46,867 கோடியாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரூ.18,000 கோடி டி.சி.எஸ் பங்குகள் பைபேக்!

டிசம்பர் காலாண்டு முடிவு அறிவிப்புகளுடனேயே டி.சி.எஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. ஒன்று பங்குகளை திரும்பப் பெறும் திட்டம், மற்றொன்று டிவிடெண்ட். ஆம், டி.சி.எஸ் நிறுவனம் சுமார் ரூ.18,000 கோடி மதிப்புள்ள பங்குகளை முதலீட்டாளர்களிடமிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)

17% ப்ரீமியம் விலையில் ஒரு பங்கை ரூ.4,500-க்கு வாங்க முடிவு செய்துள்ளது டி.சி.எஸ். இன்று (13.01.2022) காலை வர்த்தகத்தில் டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை ரூ.3,867-க்கு வர்த்தகமானது. மேலும் இந்நிறுவனம் தனது பங்கு முதலீட்டாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.7 டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. பிப்ரவரி 7-ம் தேதிக்குள் இந்த டிவிடெண்ட் தொகையை டி.சி.எஸ் நிறுவனம் வழங்கும் எனத் தெரிகிறது.

விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் முடிவுகள்!

அதே போல, விப்ரோ நிறுவனத்தின் வருமானம் டிசம்பர் காலாண்டில் 2,639.7 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டில் 2,580 மில்லியன் டாலராக இருந்தது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபமானது, டிசம்பர் கலாண்டின் முடிவில் ரூ.5,809 கோடியாக அதிகரித்துள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டில் ரூ.5,421 கோடியாக இருந்தது. இந்நிறுவனத்தின் வருமானமும் ரூ.31,867 கோடியாக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் ரூ.29,602 கோடியாக இருந்தது.