Published:Updated:

``முதலாளியாக இருக்க ஆசைப்பட்டேன்..!'' - தஞ்சையில் கரும்பு ஜூஸ் விற்பனையில் கல்லா கட்டும் இன்ஜினியர்

கரும்பு ஜூஸ் கடை நடத்தும் பி.இ பட்டதாரி ( ம.அரவிந்த் )

``ரோட்டோரத்துல நின்னு கரும்பு ஜூஸ் விக்குறா''னு ஏளனமா பேசிய பலர் இன்னைக்கு என்னைப் பாராட்டி பேசுறாங்க.''இவன மாதிரி தன்னம் பிக்கையோட இருக்கணும்''னு என்னை உதாரணம் காட்டி பேசுறாங்க. முயற்சி செஞ்சா எல்லாரும் முதலாளி ஆகலாம்..."

``முதலாளியாக இருக்க ஆசைப்பட்டேன்..!'' - தஞ்சையில் கரும்பு ஜூஸ் விற்பனையில் கல்லா கட்டும் இன்ஜினியர்

``ரோட்டோரத்துல நின்னு கரும்பு ஜூஸ் விக்குறா''னு ஏளனமா பேசிய பலர் இன்னைக்கு என்னைப் பாராட்டி பேசுறாங்க.''இவன மாதிரி தன்னம் பிக்கையோட இருக்கணும்''னு என்னை உதாரணம் காட்டி பேசுறாங்க. முயற்சி செஞ்சா எல்லாரும் முதலாளி ஆகலாம்..."

Published:Updated:
கரும்பு ஜூஸ் கடை நடத்தும் பி.இ பட்டதாரி ( ம.அரவிந்த் )

தஞ்சாவூர் பெரிய கோயில் அருகே உள்ள மேம்பாலம் இறக்கத்தில் சாலையோரத்தில் குருமூர்த்தி என்ற இளைஞர் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். தான் படித்த படிப்பு போதுமான வருமானத்தை தராததால், அப்பா வைத்திருந்த கரும்பு ஜூஸ் கடையைத் தன்னம்பிக்கையுடன் மேம்படுத்தி நடத்திவருவதுடன் கைநிறைய சம்பாதித்து வருகிறார். இதுகுறித்து குருமூர்த்தியிடம் பேசினோம்.

பி.இ. பட்டதாரியான குருமூர்த்தி
பி.இ. பட்டதாரியான குருமூர்த்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பி.இ. மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படிப்ப 2016-ல் முடிச்ச உடனே எனக்கு வேலை கிடைச்சது. சென்னை மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் இரண்டு வருடம் வேலை செஞ்சேன். மாதம் சம்பளம் ரூ15,000 வாங்கினேன். தங்கியிருந்த ரூம் வாடகை,சாப்பாடு மற்றும் ஊருக்கு வந்து போற செலவு போக பெருசா எதுவும் மிச்சப்படாது. என்னோட தேவைக்கே கடன் வாங்க வேண்டிய நிலையில வாழ்க்கை தொடர்ந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கரும்பு ஜூஸ் கடை நடத்திவந்த என் அப்பா சோமுவிற்கு திடீர்னு உடம்பு சரியில்லாமல் போச்சு. அதற்காக ஊருக்கு வந்தேன். கரும்பு ஜூஸ் போடுற கைப்பக்குவத்த அப்பா ஏற்கெனவே கத்துக் கொடுத்திருந்தார். அப்பாவுக்கு உடம்பு சரியாகுற வரைக்கும் நான் கடையை பாத்துக்க ஆரம்பிச்சேன். வியாபாரம் சொல்லிக் கொள்கிற அளவிற்கு நடந்தது.

கரும்பு ஜூஸ் கடையில் குருமூர்த்தி
கரும்பு ஜூஸ் கடையில் குருமூர்த்தி

சில மாதங்கள் அப்படியே ஓடிச்சி. அப்பாக்கிட்ட `நானே கடையை நடத்தவா'னு கேட்டேன். `உன்ன கஷ்டப்பட்டு பி.இ படிக்க வச்சேன். அதுக்கான வேலைய நீ பாத்தா அப்பா மனசு சந்தோஷமா இருக்குமு'னு சொன்னார். ஆனா, அப்பாவால தனியா கடையை நடத்த முடியாது என்பதையும் என்னால உணர முடிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலைக்குப் போனா குறைவான சம்பளமே கிடைக்கும். அதுல வர்ற பணத்தை வச்சி குறுகிய வட்டத்துக்குள்ளதான் வாழ முடியும். சொந்தத் தொழில் செஞ்சா நல்ல நிலைக்கு வரலாம். கரும்பு ஜூஸ் கடையை இன்னும் நல்லா நடத்தலாம்னு அப்பாக்கிட்ட சொல்லி புரிய வச்சேன். அப்பாவும் ஒப்புக்கிட்டார்.

ஆனா, சொந்தகாரங்க, நண்பர்கள் என பலரும், `உனக்கு என்ன பைத்தியமா...? பி.இ படிச்சுட்டு ரோட்டுல நின்னு ஜூஸ் போடப்போறியா?'னு ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா பேச ஆரம்பிச்சுட்டாங்க.

வாடிக்கையாளர்கள்
வாடிக்கையாளர்கள்

எந்தத் தொழில செஞ்சாலும் தப்பு கிடையாது ஆனா, தப்பான வழியில போகாம நேர்மையான முறையில் வேலை செஞ்சு சம்பாதிப்பதுதான் முக்கியம் என களத்துல இறங்கினேன். என் அப்பா ஒரு காலத்துல சொந்தமாக ஐந்து லாரி வச்சிருந்தாரு. டிரான்ஸ்போர்ட் தொழில் கொடிக்கட்டி பறந்தாரு. ஒரு கட்டத்துல பெரும் நஷ்டம் ஏற்பட்டு கடனாகி என்ன செய்யுறது தெரியாம தவிச்சு நின்னார்.

அதன்பிறகு கரும்பு ஜூஸ் கடை வச்சு அதுல வந்த வருமானத்துலதான் கடனை அடைச்சதாக சொல்வார். அதுவும் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. கரும்பை நான்கைந்து முறை பிழிந்து சாறு எடுக்கும் வகையிலான மிஷின்தான் அப்பா வச்சிருந்தார். நான் நடத்த ஆரம்பிச்சதுமே ஒரு முறை மட்டுமே பிழிந்தால் போதுமான பெரிய மிஷினை வாங்கினேன். ஓடாத வாகனங்களில் இருந்த பழைய பொருட்களை வாங்கி நான்கு டயர் உட்பட அனைத்தும் இருக்கும் வகையில் வடிவமைச்சு அதன் மேல் கரும்பு சாறு பிழியும் மிஷினைப் பொறுத்தினேன்.

குருமூர்த்தி
குருமூர்த்தி

திருவையாறு சுற்றியுள்ள கிராமப் பகுதியிலிருந்து நன்கு விளைஞ்ச கரும்புகளை மொத்தமாக வாங்கி வந்து கடை நடத்த தொடங்கினேன். இளம் கரும்பாக இருந்தால் சாறு அதிகமாக கிடைக்கும். ஆனால் சாறின் நிறம் கருப்பாகவும் இனிப்பு கம்மியாக இருக்கும். விளைஞ்ச கரும்பு சாறு கம்மியாக வந்தாலும் இனிப்பு கூடுதலாக சுவையாக இருக்கும். அதனால் விலை கூடுதலாக இருந்தாலும் விளைஞ்ச கரும்புகளை வாங்கி ஜூஸ் போட்டேன்.

ஒரு கஸ்டமர் ஐந்து நிமிடத்துக்கு மேல நிற்க வைக்காமல் அனுப்பி விடுவேன். கிளாஸ் சுத்தமாக இருக்க மூன்று பாத்திரங்களில் தண்னீர் வச்சு அடுத்தடுத்து கழுவிவிடுவேன். கரும்புச் சாறு பிழியும்போதே அசடுகள் இல்லாமல் இருக்க ஆறு வடிகட்டிகளைக் கொண்டு வடிக்கட்டுவேன். பாத்திரத்தில் ஊற்றும்போது ஆறாவதாக மிக துல்லியமாக இருக்கும். கல், மண் நீங்கும் வகையில் வடிக்கட்டுவேன். தேவையான அளவு எலுமிச்சை, இஞ்சி ஆகியவை சேர்ப்பேன்.

சாலையோரத்தில் இருக்கும் கரும்பு ஜூஸ் கடை
சாலையோரத்தில் இருக்கும் கரும்பு ஜூஸ் கடை

எலுமீச்சை, இஞ்சி போன்றவை விலை கூடுதலாக விற்கும் சமயத்திலும் அவற்றைக் குறைத்துவிடாமல் பயன்படுத்துவேன். தரத்திற்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதால், இதனைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பேன். கண்ணாடி கிளாசுல கரும்புச் சாறை ஊற்றி கஸ்டமர்களுக்கு கொடுக்கும்போது கிளாஸின் அடிப்பகுதியில் தண்ணீர் சொட்டாமல் இருக்க ஸ்பாஞ்ச் மேல் வைத்து துடைத்தபிறகே கொடுப்பேன்.

கரும்பு ஜூஸ் கடை என்றாலே ஈக்கள் அதிகமாக மொய்க்கும். ஈக்களைக் கட்டுப்படுத்துகின்ற வகையில அந்த இடத்தையே சுத்தமாக வைய்த்திருப்பேன். சுத்தம், சுவை, தரம் இவற்றை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கடையினை நடத்தியதால் கஸ்டமர்கள் பெருகினர். ஒருமுறை வந்தவர்கள் திரும்பத் திரும்ப வரத் தொடங்கினர். பத்து கிலோ மீட்டர் சுற்றளவுல உள்ளவங்க கரும்பு ஜூஸ் குடிப்பதற்காகவே எங்க கடைக்கு வருவாங்க.

கரும்பு ஜூஸ் கடை
கரும்பு ஜூஸ் கடை

ஆரம்பத்துல தனி ஆளா கடையை கவனிச்சுக்கிட்டேன். கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியதால கரும்புத் தோலை சீவுவது உள்ளிட்ட வேலைகளை செய்வதற்கு மூன்று பேரை மாதம் ரூ35,000 சம்பளம் கொடுத்து வேலைக்கு வச்சிருக்கேன்.

தினமும் காலை 10 மணி தொடங்கி மாலை ஐந்து மணி வரை கடை நடத்துவேன். வேலை ஆட்களுக்கான சம்பளம் உள்ளிட்ட அனைத்து செலவும் போக, மாதம் சராசரியாக ரூ 40,000 வரை லாபம் கிடைக்கிறது. கரும்பு ஜூஸ் வெயிலுக்கான குளிர்பானம் என்பதை மாற்றி அனைத்து கால நிலைக்கும் ஏற்ற ஜூஸ் என்பதை கஸ்டமர்கள் மனசுல பதிய வைத்தேன். அடை மழை பெய்யும் இரண்டு மாதங்களான ஐப்பசி, கார்த்திகை தவிர மற்ற பத்து மாதங்களும் கடை நடத்துவேன்.

கரும்பு ஜூஸ் குடிக்கும் வாடிக்கையாளர்கள்
கரும்பு ஜூஸ் குடிக்கும் வாடிக்கையாளர்கள்

கரும்புச்சாறு குடித்தால் சளியை நீக்கும், மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும், வயிற்று புண்ணை ஆற்றும், அஜீரண கோளாறை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யும் என கரும்பு சாறினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து போர்டு வைத்திருக்கிறேன்.இளைஞர்கள், பெரியவர்கள் எனக் குடும்பம் குடும்பாக கரும்பு ஜூஸ் குடிக்க வாடிக்கையாளர்கள் வருவதை எனது உழைப்பிற்கும், தரத்திற்கும் கிடைத்த பரிசாக கருதுகிறேன்.

கரும்பு பிழியப்பட்பிறகு கிடைக்கும் சக்கையை மாடுகளுக்கு கொடுத்து வருகிறேன். கடை ஆரம்பிக்கும்போதும், மூடும்போது அந்த இடம் சுத்தமாக வைத்திருப்பேன்.

எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் ஆரம்பிச்ச புதுசுல பல இடர்பாடுகளை சந்திக்க நேரும். அது போல அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டது. சரியான முறையில் திட்டமிட்டு செயல்படுத்தினால் உயர்ந்த நிலையை அடைந்து விடும் என்பதற்கு நானே சாட்சி.

குருமூர்த்தி
குருமூர்த்தி

தொழிலாளியா இருக்குறதவிட முதலாளியா இருக்க ஆசைப்பட்டேன். ரோட்டோரத்துல நின்னு கரும்பு ஜூஸ் விக்குறானு ஏளனமா பேசிய பலர் இன்னைக்கு என்னைப் பாராட்டி பேசுறாங்க. இவன மாதிரி தன்னம்பிக்கையோட இருக்கணும் என்று என்னை உதாரணம் காட்டி பேசுறாங்க. முயற்சி செய்தால் எல்லாரும் முதலாளியாகலாம் என உற்சாகம் பொங்க பேசினார் குருமூர்த்தி.

முயற்சியும் உழைப்பும் நிச்சயம் நம்மை ஜெயிக்க வைக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism