Published:Updated:

இந்தியா சிமென்ட்டை தமானி வாங்குகிறாரா? - பின்னணி ரகசியம் என்ன?

என்.சீனிவாசன், ராதாகிஷன் தமானி
பிரீமியம் ஸ்டோரி
என்.சீனிவாசன், ராதாகிஷன் தமானி

இந்த நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநராக இருக்கும் என்.சீனிவாசனிடம் 29% பங்குகள் உள்ளன.

இந்தியா சிமென்ட்டை தமானி வாங்குகிறாரா? - பின்னணி ரகசியம் என்ன?

இந்த நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநராக இருக்கும் என்.சீனிவாசனிடம் 29% பங்குகள் உள்ளன.

Published:Updated:
என்.சீனிவாசன், ராதாகிஷன் தமானி
பிரீமியம் ஸ்டோரி
என்.சீனிவாசன், ராதாகிஷன் தமானி
ந்திய-சீன எல்லையில் போர்ப் பதற்றம் நிலவிவரும் நிலையில், பங்குச் சந்தை முதலீட்டாளர்களைப் பரபரப்பாக்கிய செய்தியென்றால், `தமிழகத்தின் முக்கியமான சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்றான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை டிமார்ட் நிறுவனம் வாங்கப்போகிறது’ என்ற செய்திதான். இந்தச் செய்தியை இரு நிறுவனங்களுமே மறுத்தாலும், இப்படியொரு செய்தி உலா வருவதற்கான காரணம் என்ன?

சீனிவாசனும் தமானியும்..!

தமிழகத்தில் சிமென்ட் தயாரிக்கும் நிறுவனங்களில் முக்கியமானது இந்தியா சிமென்ட்ஸ். எஸ்.என்.என்.சங்கரலிங்கம் ஐயரும், டி.எஸ்.நாராயணசுவாமி ஐயரும் சேர்ந்து 1946-ம் ஆண்டு உருவாக்கிய இந்த நிறுவனத்தை மிகப்பெரிய அளவில் உயர்த்திய பெருமை டி.எஸ்.நாராயணசுவாமியின் மகனான என்.சீனிவாசனுக்கு உண்டு. வெறும் சிமென்ட் உற்பத்தி என்பதுடன் நின்றுவிடாமல், கிரிக்கெட் விளையாட்டின் முக்கியமான அமைப்புகளில் தலைமைப் பொறுப்பை ஏற்று நடத்தியவர். தமிழ்நாடு கிரிக்கெட் போர்டு, இந்திய கிரிக்கெட் போர்டு, உலக கிரிக்கெட் போர்டு எனப் பல அமைப்புகளின் தலைவராகவும் இருந்தவர் என்.சீனிவாசன்.

cement
cement

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மும்பையில் சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டில் வளர்ந்தவர் ராதாகிஷன் தமானி. தன்னுடைய கடும் உழைப்பாலும், புத்திசாலித்தனமான முதலீட்டு உத்திகளாலும் மும்பை பங்குச் சந்தை உலகில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் `டிமார்ட்’ என்ற பெயரில் மெகா சூப்பர் மார்ட்டை ஆரம்பிக்க, அது பெரிய வெற்றி கண்டதன் விளைவாக, இந்தியா முழுக்க திறக்கப்பட்டது. ஐ.டி.சி உட்பட பல எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களின் பங்குகளை நீண்டகாலமாக வைத்திருக்கும் தமானி, தனது டிமார்ட் நிறுவனத்தின் பங்கையும் பங்குச் சந்தையில் வெளியிட்டார். இதற்குப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன், அந்தப் பங்கு குறுகியகாலத்தில் 100 சதவிகிதத்துக்குமேல் லாபம் தந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

50 ஆண்டு உழைப்பு!

இந்த ஆண்டு ஜனவரியில் 75 வயதை எட்டிய என்.சீனிவாசன், கல்லூரிப் படிப்பைப் படித்து முடிந்தவுடன், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை நடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கடந்த 50 ஆண்டுக்காலம் அவர் கஷ்டப்பட்டு உழைத்ததன் காரணமாக இந்தியா முழுக்க நிறுவனத்தைக் கொண்டு சென்றார். இத்தனை நாளும் தன்னந்தனியாக நிறுவனத்தை நடத்திவந்த சீனிவாசன், நிறுவனத்தை அடுத்த தலைமுறையிடம் கொடுக்க நினைத்தார்.

என்.சீனிவாசன்
என்.சீனிவாசன்

என்.சீனிவாசனின் மகன் அஷ்வின், மகள் ரூபா. கடந்த பல ஆண்டுகளாக சீனிவாசனுடன் இருந்து தொழில் பயிற்சி பெற்று, தற்போது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார் சீனிவாசனின் மகளான ரூபா.

குறைந்தது பங்கு விலை..!

கடந்த பத்து ஆண்டுகள் என்.சீனிவாசனுக்கு சோதனைக் காலம்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் டீமை வெற்றிகரமாக நடத்திவந்த அவருடைய மாப்பிள்ளையான குருநாத், மேட்ச் ஃபிக்ஸிங் சர்ச்சையில் சிக்கினார். இதைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸால் ஐ.பி.எல் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை. இந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்றையும் சமாளிக்கப் படாதபாடுபட்டார் என்.சீனிவாசன்.

மேலும், கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகவே ரியல் எஸ்டேட் நாடு முழுக்க மோசமாக இருக்கிறது. ஏற்கெனவே கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளே லட்சக்கணக்கில் விற்காமல் கிடக்க, புதிய திட்டங்களுக்கு வழியில்லாமல் இருந்தது. இதனால் சிமென்ட்டுக் கான தேவை குறைந்தது. சிமென்ட் உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை குறைந்து, லாபமும் கணிசமாகக் குறையத் தொடங்கியது. இதனால் இந்த நிறுவனப் பங்கின் விலையும் குறைந்து கொண்டே வந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 2017-ம் ஆண்டு, மே மாதம் நடுவில் ரூ.226 வரை விலை உயர்ந்த இந்த நிறுவனப் பங்கின் விலை, பிற்பாடு மெள்ள மெள்ளக் குறைய ஆரம்பித்தது. இந்த நிறுவனப் பங்கின் விலை தொடர்ந்து குறைந்து வந்ததன் விளைவாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.67 என்ற அளவுக்கு இறங்கியது.

பங்குகளை வாங்க ஆரம்பித்த தமானி..!

இந்த நிலையில்தான் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தமானி வாங்கத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கிச் சேர்க்க ஆரம்பித்த தமானியிடம் கடந்த மார்ச் கடைசியில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 20% பங்குகள் இருந்தன. `இந்த நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதத்துக்குள் இந்தப் பங்கு ரூ.100-க்குள் இருந்தபோது, இன்னும் அதிகமான அளவில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனப் பங்குகளை தமானி வாங்கிச் சேர்த்திருக்கலாம்’ என்கிறார்கள்.கணிசமான அளவில் பங்குகளைச் சேர்த்த பிறகுதான், இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக மாற இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை தமானி அணுகியதாகச் சொல்லப்படுகிறது.

ராதாகிஷன் தமானி
ராதாகிஷன் தமானி

இந்த நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநராக இருக்கும் என்.சீனிவாசனிடம் 29% பங்குகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் வேறு சிலரிடமிருந்தும் பங்குகளை வாங்கி, இந்த நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குதாரராக மாற தமானி விரும்புவதாகச் சொல்லப்படுகிறது. இப்படிச் செய்யும்போது, மற்றவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பங்குகளை வாங்காமல், நட்புரீதியில் பேசி வாங்க வேண்டும் என்ற அணுகுமுறையை தமானி கடைப்பிடிக்கிறாராம்.

சிமென்ட்
சிமென்ட்

இரு நிறுவனங்களும் மறுப்பு..!

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை டிமார்ட் நிறுவனம் வாங்கப் போகிற செய்தியை இரு நிறுவனங்களுமே மறுத்துள்ளன. `இந்தச் செய்தி சரியானதல்ல’ என்று சொல்லியிருக்கிறது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம். கடந்த ஓராண்டுக்காலத்தில் இந்தப் பங்கின் விலை 90% வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிமை வர்த்தகம் முடியும்போது ரூ.131.65 என்ற விலைக்குப் பரிவர்த்தனையானது.

இந்தச் செய்தி உண்மையா, இல்லையா என்பதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும்!