Published:Updated:

“மாற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது..!” - சவால்களை முறியடிப்பாரா உதய் கோட்டக்?

மாற்றி யோசிக்க வேண்டிய
நேரம் இது
பிரீமியம் ஸ்டோரி
News
மாற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது

நம் நாட்டில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உள்கட்டமைப்பு நன்றாக இருக்கிறது!

லகப் பொருளாதாரத்துக்கே இது சவால் நிறைந்த நேரம் என்கிறபோது, இந்தியப் பொருளாதாரத்துக்கான சவால் பல மடங்கு அதிகமாகவே இருக்கிறது. கொரோனா பாதிப்பால் இந்தியத் தொழில்துறை மிகப்பெரிய அளவில் பாதிப்பைக் கண்டிருக்கும் இந்த நேரத்தில், இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ-யின் இந்த ஆண்டுக்கான புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார் கோட்டக் மஹிந்திரா பேங்க்கின் நிர்வாக இயக்குநரும், முதன்மைச் செயல் அதிகாரியுமான உதய் கோட்டக்.
உதய் கோட்டக்.
உதய் கோட்டக்.

அப்பர் மிடில் கிளாஸ் டு பேங்க் சி.இ.ஓ..!

குஜராத்திக்காரரான உதய், 1959-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். அவருடைய குடும்பம் பருத்தி உட்பட விவசாய விளைபொருள்களை வர்த்தகம் செய்யும் பிசினஸ் குடும்பம். சைடன்ஹாம் கல்லூரியில் பி.காம் படித்தவர்; ஜம்னாலால் பஜாஜ் கல்லூரியில் எம்.பி.ஏ படித்தார். கிரிக்கெட் விளையாடுவதில் உதய்க்கு அலாதி ஆர்வம் உண்டு. அதேபோல, பள்ளிப் பருவத்திலிருந்தே அவருக்கு மிகவும் பிடித்த பாடம் கணக்கு.

படித்து முடித்தவுடனேயே சொந்தத் தொழில் தொடங்கினார் உதய். கடன் தருவது, பில்களைத் தள்ளுபடி செய்துதருவதுதான் அவர் செய்யத் தொடங்கிய தொழில். வங்கிகளைவிடக் குறைந்த வட்டியில் அவர் கடன் தந்ததைப் பார்த்து, பலரும் அவரிடம் கடன் வாங்கினார்கள். 23 வயதில் உதய், `கேப்பிட்டல் மேனேஜ்மென்ட்’ கம்பெனியைத் தொடங்கினார். 2003-ம் ஆண்டு வங்கியைத் தொடங்கு வதற்கான அனுமதியை ஆர்.பி.ஐ-யிடமிருந்து பெற்றார். இன்றைக்கு இந்தியாவின் மிக முக்கியமான தனியார் வங்கியாக கோட்டக் மஹிந்திரா வங்கியை வளர்த்தெடுத்திருக்கிறார் உதய் கோட்டக். உயர் நடுத்தரக் குடும்பத்திலிருந்து ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ ஆகி, இன்றைக்கு சி.ஐ.ஐ அமைப்பின் தலைவராக உயர்ந்திருக்கும் உதய் கோட்டக்கின் வாழ்க்கை வெற்றிகளால் நிரம்பியது என்றால் மிகையில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வளர்ச்சியைக் கொண்டுவரும் 10 அம்சங்கள்..!

சி.ஐ.ஐ அமைப்பின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் உதய் கோட்டக், கொரோனாநோய்த் தொற்றால் கடும் பாதிப்பி லிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தையும், தொழில்துறையையும் மீட்டெடுக்க 10 அம்ச திட்டத்தை முன்வைத்திருக்கிறார். `சில வெளிநாடுகளில் இருப்பது போன்ற சமூகப் பாதுகாப்பில்லாத நிலையில், மனிதர்களின் வாழ்வைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற அவர், `மருத்துவத்துறைக்கு நாம் செலவழிக்கும் தொகை ஏகத்துக்கும் அதிகரிக்க வேண்டும்’ என்று இந்தத் திட்டத்தில் சொல்லி யிருக்கிறார்.

“மாற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது..!” - சவால்களை முறியடிப்பாரா உதய் கோட்டக்?

`வளர்ச்சியின் பெயரால் இயற்கை வளங்கள் சீரழிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்’ என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். `நம் நாட்டில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான உள்கட்டமைப்பு நன்றாக இருக்கிறது. இதனால் யார் வேண்டுமானாலும் உலகின் எந்தப் பகுதியிலிருக்கும் நிறுவனத்துக்கு வேண்டுமானாலும் பணியாற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை முடிந்த அளவுக்கு நன்கு பயன்படுத்திக்கொள்வதன் மூலம் நகரங்களில் மென்மேலும் ஏற்படும் நெருக்கடியைத் தவிர்க்க முடியும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் ஊரில் வேலை கிடைக்காததால்தான் நகரங்களைத் தேடி வந்தார்கள். இப்போது அவர்கள் மீண்டும் அவர்களின் கிராமங்களை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கு அங்கேயே நல்ல வேலை கிடைக்கும்பட்சத்தில், அவர்கள் மீண்டும் நகரங்களுக்கு வர வேண்டிய தேவை இருக்காது. அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்’ எனப் பல விஷயங்களையும் இந்த 10 அம்ச திட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வளர்ச்சி சீக்கிரத்திலேயே வரும்..!

சி.ஐ.ஐ அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, பத்திரிகையாளர்களை ஆன்லைன் மூலம் சந்தித்தார் உதய் கோட்டக். அப்போது, `நமது பொருளாதார வளர்ச்சி மீண்டும் எப்படித் திரும்ப வரும், அது `V’ வடிவில் வருமா, `U’ வடிவில் வருமா அல்லது `W’ வடிவில் வருமா?’ என்று கேட்டார் ஒரு பத்திரிகை நிருபர். ‘V, U, W என ஆங்கில எழுத்துகளை விட்டுவிடுங்கள். ஏதாவது ஒரு இந்திய மொழி எழுத்தைச் சொல்லுங்கள். மாற்றி யோசிக்க வேண்டிய நேரம் இது’ என்று நகைச்சுவையாக பதில் சொன்னார் உதய். ‘நமது பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலிருந்தாலும், இந்த நிலை நம் நாட்டில் நீண்டகாலம் நிலைத்திருக்காது. வளர்ச்சி வெகு சீக்கிரத்திலேயே வரும்’’ என்று நம்பிக்கை பொங்கப் பேசியிருக்கிறார் உதய் கோட்டக். `சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி அளவுக்குக் கடன் தர மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இந்தக் கடன் எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதன் மூலம் அவர்கள் பல்வேறு பிரச்னைகளிலிருந்து மீண்டுவருவதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது’ என்றும் சொல்லியிருக்கிறார் அவர்.

பிரச்னைகளைக் கண்டு அஞ்சாமல் அதற்கான தீர்வைக் கண்டறிந்து செயல்படுத்துவதில் அளவற்ற ஆர்வமும் அனுபவமும் கொண்டவர்களால்தான் உயர் பதவிகளில் ஜொலிக்க முடியும். உதய் கோட்டக்குக்கு இந்தத் திறமை அபாரமாகவே உண்டு. அவரது சிறப்பான வழிகாட்டுதலில் இந்தியத் தொழில்துறை பிரச்னைகளிலிருந்து மீண்டு வரட்டும்!

சி.ஐ.ஐ-யின் பிற பொறுப்பாளர்கள்!

டி.வி.நரேந்திரன், சஞ்சீவ் பஜாஜ்
டி.வி.நரேந்திரன், சஞ்சீவ் பஜாஜ்

சி.ஐ.ஐ அமைப்பின் பிற தலைவர் களாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் டி.வி.நரேந்திரன் மற்றும் சஞ்சீவ் பஜாஜ். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் எம்.டி மற்றும் சி.இ.ஓ-வான டி.வி.நரேந்திரன் சி.ஐ.ஐ அமைப்பின் அடுத்த தலைவராகவும் (President Designate), பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தின் எம்.டி மற்றும் சி.இ.ஓ-வான சஞ்சீவ் பஜாஜ் சி.ஐ.ஐ அமைப்பின் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.