Published:Updated:

கோவிட் 19... அதிகரிக்கும் டேர்ம் பாலிசி...! - என்ன காரணம்..?

மக்களிடம் ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பதில் ஏற்பட்டிருக்கும் தெளிவான மாற்றத்தைக் காண முடிகிறது!

பிரீமியம் ஸ்டோரி

காப்பீட்டுத்துறையில் 20 ஆண்டுகளுக்குமேல் அனுபவம்கொண்டவரும், எக்ஸைட் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ-வுமான பி.அஸ்வின், நாணயம் விகடன் இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி...

இந்தியாவில் வெறும் 3% பேர்தான் ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருக்கிறார்கள். இதை அதிகரிக்க அரசும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் செய்ய வேண்டியவை என்னென்ன?

கோவிட் 19... அதிகரிக்கும் 
டேர்ம் பாலிசி...! - என்ன காரணம்..?

‘‘இந்தியாவில் ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டுமானால், அதன் அவசியத்தைப் பற்றி அவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது கட்டாயமாகும். ஆயுள் காப்பீடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆயுள் காப்பீட்டு கவுன்சிலுடனும், மற்ற 23 இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுடனும் கைகோத்துள்ளோம். ஒவ்வோர் இந்தியருக்கும் ஆயுள் காப்பீடு ஏன் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்பதைக் கொண்டு சேர்க்க ‘எல்லோருக்கும் முதலில் ஆயுள் காப்பீடு’ என்ற பிரசாரத்தை 2019, டிசம்பர் 5 முதல் தொடங்கி மேற்கொண்டுவருகிறோம்.

‘எல்லோருக்கும் முதலில் ஆயுள் காப்பீடு’ போன்ற பிரசாரங்களை வெகுஜன அளவில் மேற்கொள்ள வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறோம். மேலும், பாரம்பர்ய வழிமுறைகளான பத்திரிகை மூலமான விளம்பரங்கள், பிரசாரங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய டிஜிட்டல் மூலமும் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறோம்.’’

பி.அஸ்வின்
பி.அஸ்வின்

இப்போது எல்.ஐ.சி உட்பட பல ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளானுக்கு அதிக முக்கியத்துவம் தந்துவருகின்றன. இதில் உங்களின் நிலை என்ன?

‘‘பாதுகாப்புத் திட்டங்கள் (Protection Plans) ஒருவரின் நிதித் திட்டமிடலின் அடித்தளமாக விளங்கும் எளிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களாகும். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாதுகாப்பு பாலிசிகளான டேர்ம் பிளான்களில் அதிக கவனம் செலுத்திவருகிறோம். கடந்த ஆண்டு, எங்களிடம் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருப்பவர்களில் கிட்டத்தட்ட 20% பேர் டேர்ம் பிளான் எடுத்திருக்கிறார்கள்.

கோவிட்-19 தொற்றுநோயால் மக்கள் மனதில் அதிகரித்த நிதிப் பாதுகாப்பின்மை மற்றும் ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துவருவதால், முழுவதும் ஆயுள் காப்பீடு கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த 2020-21-ம் நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில், எங்கள் புதிய பாலிசிதாரர்களில் 39% பேர் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கிறார்கள். இந்தப் பிரிவில் சில தனித்துவமான திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம். எக்ஸைட் லைஃப் ஸ்மார்ட் டேர்ம், எக்ஸைட் லைஃப் எலைட் டேர்ம், எக்ஸைட் லைஃப் ஸ்மார்ட் டேர்ம் பிளஸ் ஆகிய பாலிசிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இவற்றில் எக்ஸைட் லைஃப் ஸ்மார்ட் டேர்ம் பாலிசியைப் பலரும் விரும்பி எடுக்கிறார்கள்.’’

கோவிட் 19... அதிகரிக்கும் 
டேர்ம் பாலிசி...! - என்ன காரணம்..?

பொருளாதார மந்தநிலை மற்றும் கோவிட்-19 பரவல் ஊரடங்கு ஆகியவற்றால் இந்திய ஆயுள் காப்பீட்டுத் துறை பாதிக்கப்பட்டுள்ளதா?

‘‘தற்போதைய ஊரடங்கு மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக காப்பீட்டுத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நிதி ஆண்டின் முதல் இரு மாதங்களில் (ஏப்ரல் மற்றும் மே), ஆயுள் காப்பீட்டு வர்த்தகம் ஒட்டுமொத்தமாக 30 சதவிகிதமும், தனியார் துறையில் 35 சதவிகிதமும் குறைந்துள்ளது. (ஜூன் காலாண்டு முடிவு இன்னும் வெளிவரவில்லை).

ஊரடங்கு மற்றும் தொழில் முடக்கம் ஆயுள் காப்பீட்டுத்துறையின் பல அம்சங்களைப் பாதித்திருக்கிறது. ஆயுள் காப்பீட்டு வணிகம் பாரம்பர்யமாக மக்களை நேரடியாகத் தொடர்புகொண்டு பாலிசி வாங்கவைக்கும் வணிகம். ஊரடங்கு மற்றும் பாதுகாப்புத் தாக்கங்களைக் கருத்தில்கொண்டு, வாடிக்கையாளர்களை நேருக்கு நேர் சந்திப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. மறுபுறம், தனிநபரின் நிதிநிலை நிச்சயமற்றதன்மை குறித்த பயம் வாடிக்கையாளர்களை பாலிசி எடுப்பதை ஒத்திவைக்கத் தூண்டியுள்ளது. மேலும், ஏஜென்ட் ஆவதற்கு நடத்தப்படும் தேர்வுகள் நிறுத்தப்பட்டிருப்பதால் இன்ஷூரன்ஸ் ஆலோசகர் ஆள் சேர்ப்பு தாமதமாகியிருக்கிறது. இவையனைத்தும் இன்ஷூரன்ஸ் தொழில்துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கின்றன. இருப்பினும், மக்களிடம் ஆயுள் காப்பீடு பாலிசி எடுப்பதில் ஏற்பட்டிருக்கும் தெளிவான மாற்றத்தைக் காண முடிகிறது. கோவிட்-19 தொற்றுநோய், நிதிப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் வெகுவாக ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் குறிப்பாக பாதுகாப்புத் திட்டங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலிசி விநியோகத்தில் என்ன மாற்றம் செய்துள்ளீர்கள்?

‘‘தனியுரிம சேனல்களான ஏஜென்சி மற்றும் நேரடி விநியோகத்தில் (டைரக்ட்) நாங்கள் வலிமையாக உள்ளோம். கூடுதலாக, பேங்கஷூரன்ஸ் (Bancassurance) மற்றும் கார்ப்பரேட் ஏஜென்சி மற்றும் புரோக்கிங் சேனல் மூலம் பாலிசி விநியோகத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.’’

உங்கள் நிறுவனத்தின் ஜீரோ காஸ்ட் டேர்ம் பிளான் பற்றிச் சொல்லுங்கள்..!

‘‘முழுமையான டேர்ம் திட்டங்கள் (Pure Term plans) அதிக கவரேஜ் மூலம் ஆயுள் காப்பீடு வழங்குகின்றன. இந்த பாலிசிகளில், முடிவு காலத்தில் முதிர்வுத் தொகை கிடைக்காது. அதே நேரம், செலுத்திய பிரீமியம் மட்டும் திரும்பக் கிடைக்கும். இந்த பாலிசியை, `ஜீரோ காஸ்ட் டேர்ம் பிளான்’ என்கிறோம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு