Published:Updated:

அசத்தும் ஆன்லைன் பிசினஸ்! - லாபம் தரும் வாய்ப்புகள்!

ஆன்லைன் பிசினஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆன்லைன் பிசினஸ்

சமூக வலைதளங்கள் மூலம் பிசினஸ் செய்பவர்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் தருவது அவசியம்.

ங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துவந்த ஆன்லைன் பிசினஸ், கொரோனா ஊரடங்கலுக்குப் பிறகு பலரும் செய்யக்கூடியதாக மாறியிருக்கிறது.

குறைந்த அளவில் முதலீடு செய்து, சமூக வலைதளங்கள் மூலமாகப் பல பெண்களும் இன்றைக்கு ஆன்லைன் பிசினஸில் கலக்கிவருகிறார்கள். சமூக வலைதளங்கள் மூலம் பிசினஸ் செய்வது எப்படி, எவ்வளவு முதலீடு செய்தார்கள், எவ்வளவு சம்பாதிக்கிறார்கள், ஆன்லைன் பிசினஸ் என்று வரும்போது எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்கள் சோஷியல் மீடியா தொழில்முனைவோர்கள்.

அசத்தும் ஆன்லைன் பிசினஸ்! - லாபம் தரும் வாய்ப்புகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மின்னும் ஃபேஷன் நகை பிசினஸ்!

தீப்தி - இன்ஸ்டாகிராம் தொழில்முனைவோர்

“ஃபேஷன் நகைகள் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். எனக்கான மேட்சிங் நகைகளை உருவாக்குவதில்தான் என்னுடைய பயணம் தொடங்கியது. நான் தயாரிக்கும் நகைகள் தனித்துவமாக இருப்பதைப் பார்த்த என் தோழிகள் அவர்களுக்கும் செய்து கொடுக்கும்படி கேட்க ஆரம்பித்தார்கள். நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பித்ததால், இதையே முழுநேர பிசினஸாக மாற்றிவிட்டேன். தனியாகக் கடை தொடங்கி பிசினஸ் ஆரம்பிக்க வேண்டுமென்றால், அதற்்கு வாடகை, மின் கட்டணம், பணியாளர்கள் கூலி என்று நிறைய செலவாகும். இந்தச் செலவுகளுக்கேற்ப வருமானம் கிடைக்குமா என்று சொல்ல முடியாது. அதனால்தான், குறைந்த செலவில் வாடிக்கையாளர்களைப் பிடிக்கிற மாதிரி இன்ஸ்டாகிராமில் என் பிசினஸை ஆரம்பித்தேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
ஆன்லைன் பிசினஸ்
ஆன்லைன் பிசினஸ்

‘பிராடீ ஜூவல்லரி’ என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் என் பிசினஸ் பக்கத்தைத் தொடங்கினேன். அதில் நான் செய்த நகைகளின் புகைப்படங்களை `ஒரு நாளைக்கு ஐந்து’ என்ற எண்ணிக்கையில் தினமும் அப்லோடு செய்தேன். ஆரம்பத்தில் மாதத்துக்கு 10 ஆர்டர்கள் வந்தாலே பெரிய விஷயமாக இருந்தது. நிறைய கலெக்‌ஷன்களை அப்லோடு செய்ய ஆரம்பித்த பிறகு பிரபலங்கள் உட்பட பலரும் என்னிடம் நகைகளை வாங்க ஆரம்பித்தார்கள். இப்போது மாதமொன்றுக்கு சராசரியாக 150 ஆர்டர்கள் வரை கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் கேட்கும் நகைகளைச் செய்து கொரியர் மூலம் அனுப்புகிறேன். மூன்று வருடங்களுக்கு முன்னர் ரூ.10 லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த என் பிஸினஸின் மாத வருவாய் இப்போது ரூ.20 லட்சம்.

இன்ஸ்டாகிராமில் நாம் அப்லோடு செய்யும் பொருள்கள் தனித்துவமாக இருந்தால், சாதாரண மனிதர்கள் முதல் பிரபலங்கள் வரை எளிதாகச் சென்றடைய முடியும். அது மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் நம்முடைய பக்கத்தில் ‘கமென்ட்’ செய்ய முடியும் என்பதால், அதைப் பார்த்து இன்னும் பல வாடிக்கையாளர்கள் வருவார்கள். எனவே, புதிது புதிதாக வாடிக்கையாளர்கள் எப்போதும் கிடைத்துக் கொண்டேயிருப்பார்கள்’’ என்று உற்சாகப் பேசி முடித்தார் தீப்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலக்கும் துணி பிசினஸ்!

சண்முகப்பிரியா - வாட்ஸ்அப் தொழில்முனைவோர்

அசத்தும் ஆன்லைன் பிசினஸ்! - லாபம் தரும் வாய்ப்புகள்!

“ஒரு நிறுவனத்தில் ஹெச்.ஆராக வேலை பார்த்துட்டு இருந்தேன். குழந்தை பிறந்த பிறகு வேலைக்குப் போக முடியலை. வீட்டிலிருந்தே பிசினஸ் பண்ணலாம்னு முடிவு செஞ்சு, ரூ.20,000 முதலீடு செஞ்சு துணி பிசினஸ் ஆரம்பிச்சேன். முதலில், அக்கம்பக்கத்தில் இருக்கறவங்களுக்கு விற்க ஆரம்பிச்சேன். நிறைய பேர் கடனுக்குக் கேட்க ஆரம்பிச்சாங்க. புது டிசைன்களும் எதிர்பார்ப்பாங்க. புது டிசைன் வாங்கினா, பழைய புடவைகள் விற்காது.

இதை என் ஃப்ரெண்ட்கிட்ட சொன்னேன். புடவைகளை போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலமாக அனுப்பச் சொன்னா. அதை அவளின் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு வாட்ஸ்அப்ல அனுப்பி விற்பனை செஞ்சு கொடுத்தா. இந்த வாட்ஸ்அப் பிசினஸ் புது ஐடியாவாக இருந்துச்சு. இதைத் தொடர்ந்து செய்யலாம்னு முடிவெடுத்தேன். ரூ.5 லட்சம் முதலீடு செஞ்சு, தனித்துவமான டிசைன் புடவைகளை வாங்கி வந்து, நானே போட்டோ எடுத்து, எல்லோருக்கும் வாட்ஸ்அப்பில் அனுப்பினேன். நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுது. ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் ஒரே வாட்ஸ்அப் குரூப்பில் இணைச்சு, அடுத்தடுத்த டிசைன்களை போஸ்ட் பண்ணிட்டே இருந்தேன்.

ஒரு வாட்ஸ்அப் குரூப்பில் 257 பேரை உறுப்பினர்கள் ஆக்க முடியும். இப்போ 25 குரூப் வெச்சிருக்கேன். எல்லா குரூப்பிலிருந்தும் ஆர்டர்கள் தொடர்ந்து வந்துட்டே இருக்கும். நிறைய தடைகளுக்குப் பிறகு இன்னைக்கு என்னோட மாத வருவாய் ரூ.25 லட்சம்.

வாட்ஸ்அப் பிசினஸைப் பொறுத்தவரை, யார் வேண்டுமானாலும் தொடங்க முடியும் என்பதால், அதிக அளவில் முதலீடு செய்ய முடியாதவர்கள், மொத்த வியாபாரம் செய்பவர்களிடமிருந்து புகைப்படங்களை வாங்கி, சிறு லாபம் வைத்து உங்கள் கஸ்டமருக்கு அனுப்பி ஆர்டர்கள் பெறுவதன் மூலம் முதலீடே இல்லாமல் லாபம் ஈட்டலாம். அடுத்தடுத்த அப்டேட்களுடன் வெற்றி தொடரும்” என்று தான் கற்ற பிசினஸ் சீக்ரெட்ஸை மறைக்காமல் சொன்னார் சண்முகப்பிரியா.

மணக்கும் சமையல் பிசினஸ்!

வளர்மதி - யூடியூப் தொழில்முனைவோர்

அசத்தும் ஆன்லைன் பிசினஸ்! - லாபம் தரும் வாய்ப்புகள்!

‘‘என் சொந்த ஊர் திருவண்ணாமலை. என்னுடைய மகப்பேறு விடுப்பு காலத்தில் பொழுதுபோக்குக்்காக கிரியேட்டிவா என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். நான் நல்லா சமைப்பேன். அதனால் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், `சமையல் வீடியோ பண்ணி யூடியூப்ல அப்லோடு பண்ணு’னு சொன்னாங்க. எனக்கும் அது நல்லா ஐடியாவாக தோணிச்சு. ஆனா, நிறைய பேர் சமையல் வீடியோ பண்றாங்க, அதுல தனித்துவமா என்ன பண்ணலாம்னு யோசிப்போதான், `குழந்தைகள் விளையாடும் சொப்புப் பாத்திரத்தில் சமைக்கும் மினியேச்சர் சமையல் பண்ணலாம்’னு பிளான் பண்ணினேன். சின்னச் சின்ன பொருள்களைத் தேடிக் கண்டுபிடிச்சு வாங்கினேன். அந்தப் பாத்திரங்களில் சமையல் செஞ்சு ‘டைனி ஃபுட்ஸ்’ங்கிற எங்களோட யூடியூப் சேனலில் வீடியோவா அப்லோடு பண்ண ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்கள் இருந்துச்சு. யூடியூப்பைப் பொறுத்தவரை, வீடியோ அப்லோடு பண்ணியதும் ரீச் ஆகும்னு சொல்ல முடியாது. நம்முடைய வீடியோக்களைத் தொடர்ந்து அப்லோடு பண்ணிக்கிட்டே இருந்தாத்தான் நம்முடைய சேனலே நிறைய பேருக்குத் தெரிய ஆரம்பிக்கும். 15 வீடியோக்களுக்குப் பிறகுதான் என் சேனலுக்குனு நிறைய பார்வையாளர்கள் கிடைச்சாங்க. நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் வரவே, எனக்கும் ஆர்வம் அதிகமாகிடுச்சு.

இப்போ வாரம் ஒரு வீடியோனு அப்லோடு பண்ணிக்கிட்டு இருக்கேன். எட்டு லட்சத்துக்கும் மேல சப்ஸ்கிரைபர்ஸ் இருக்காங்க. மாசத்துக்கு 1 லட்ச ரூபாய்க்குமேல வருமானம் கிடைக்குது. பெரிய அளவு டென்ஷன் இல்லாத வேலை. கொஞ்சம் கிரியேட்டிவிட்டி இருந்தா ஈஸியா சக்சஸ் ஆகலாம்” என்று பாந்தமாகச் சிரிக்கிறார் வளர்மதி.

அசத்தும் ஆன்லைன் பிசினஸ்! - லாபம் தரும் வாய்ப்புகள்!

மணம் வீசும் மசாலா பிசினஸ்!

சாரதா - இணையதளப் பக்கம் மூலம் தொழில்முனைவோர்

“எனக்கு இப்போ வயசு 86. ஆனாலும் ஆன்லைன் பிசினஸில் எல்லா அப்டேட்ஸும் தெரியும். என்னோட 15 வயசிலிருந்து சமைச்சுட்டு இருக்கேன். `என்னோட கைப்பக்குவம் நல்லா இருக்கும்’னு எல்லாரும் சொல்லுவாங்க. புதுசா கல்யாணம் ஆகிப்போற பொண்ணுங்க எங்க வீட்டுக்கு வந்து மசாலா பொடிகள் தயாரிக்கிறது எப்படினு கேட்டு தெரிஞ்சுக்கிட்டு, என்னை செஞ்சும் தரச் சொல்வாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் பிசினஸ் ஐடியா.

எல்லாவகையான மசாலா பொடிகளையும் வீட்டிலேயே தயாரிச்சு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு விற்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஸ்நாக்ஸ் செய்ய ஆரம்பிச்சேன். மாசம் நாலாயிரம் ரூபாய் கிடைக்கும். அது என் செலவுக்குப் போதுமானதாக இருந்துச்சு. அப்போதான் என் பேரக் குழந்தைகள், “மசாலா பொடி வியாபாரத்தைக்கூட ஆன்லைன் பிசினஸாக மாற்றலாம் பாட்டி. நல்ல வரவேற்பு இருக்கும்”னு சொன்னாங்க.

ஆன்லைன் பிசினஸ்
ஆன்லைன் பிசினஸ்

ஆரம்பத்தில் அதெல்லாம் எதுவும் எனக்குப் புரியலை. ரூ.10 லட்சம் முதலீடு செய்து என் வழிகாட்டுதலுடன் வீட்டிலேயே பொடிகள் தயாரிக்க ஆரம்பிச்சாங்க. உள்ளூர்க் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவற்றில் முதலில் ஆர்டர்கள் வாங்கினோம். அப்புறம் தனியாக ஒரு இணையதளப் பக்கத்தைத் தொடங்கி எங்களோட பொடி வகைகளை போட்டோ எடுத்து அதில் அப்டேட் பண்ண, வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் வர ஆரம்பிச்சுது.

ஆன்லைன் பிசினஸ்
ஆன்லைன் பிசினஸ்

பிசினஸுக்கு அவசியம் என்பதால், ஆன்லைனில் எல்லாவற்றையும் தெரிஞ்சு வெச்சுக்கிட்டேன். பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆயிரங்களில் இருந்த என்னோட பிசினஸ், ஆன்லைன் மூலம் ரெண்டே வருஷத்தில் லட்சங்களில் வருவாய் ஈட்டுது.

ஆன்லைன் மூலம் உணவு பிசினஸ் பண்றவங்க எப்போதும் ஒரே சுவையைத் தக்கவைக்க வேண்டும். தின்பண்டங்கள் செய்து வியாபாரம் செய்பவர்களென்றால், ஆர்டர்கள் எடுத்த பிறகு பொருள்களைத் தயார் செய்து டெலிவரி செய்தால் சுவை மாறாமல் இருக்கும். அடுத்தடுத்து ஆர்டர்களும் கிடைக்கும்” என்று ஜமாய்க்கிறார் சாரதா பாட்டி.

இது ஆன்லைன் காலம். தொழில் திறமை இருந்தால், யாரும் எங்கிருந்ந்து வேண்டுமானாலும் பிசினஸ் செய்யலாம் என்பதே உண்மை.

ஆன்லைன் பிசினஸ் டிப்ஸ்..!

1. இப்போது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதால், ஏற்கெனவே கிடைத்த ஆர்டர்கள் குறையலாம். ஆனாலும் தொடர்ந்து உங்களின் பொருள்கள் பற்றிய அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துக்கொண்டே இருப்பது அவசியம்.

ஆன்லைன் பிசினஸ்
ஆன்லைன் பிசினஸ்

2. சமூக வலைதளங்கள் மூலம் பிசினஸ் செய்பவர்கள் வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் தருவது அவசியம். அப்படிக் கொடுக்கும் பதிலை பொதுவில் பகிராமல், சம்பந்தப்பட்டவருக்குத் தனியாக மெசேஜாக அனுப்பலாம்.

3. உங்கள் பொருள்களில் ஏதேனும் குறை இருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தால், அதை உடனடியாக மாற்றித் தருவதோ, குறைகளைச் சரிசெய்து தருவதோ அவசியம். அந்தத் தகவலையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதன் மூலம் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்!