ஊரடங்கு காலத்தில் 28% வளர்ச்சி; இதுவரை இல்லாத வகையில் வீட்டுக்கே பொருள்கள் டெலிவரி; புதிய பொருள்கள் அறிமுகம் செய்வதில் இந்திய அளவில் இரண்டாவது இடம்; அதிக வாடிக்கை யாளர்கள் விரும்பும் பொருள்களில் இந்திய அளவில் ஏழாவது இடம்... இப்படி பல சாதனைகளைச் செய்து அசத்தி வருகிறது தமிழக அரசு நிறுவனமான ஆவின்.

ஆவின் நிறுவனத்தின் அதிரடி மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுபவர் தற்போதைய நிர்வாக இயக்குநராக இருக்கும் வள்ளலார் ஐ.ஏ.எஸ். இவர் திண்டுக்கல் கலெக்டராக இருந்தபோது, இந்திய அளவில் முதன்முறையாகக் குளங்கள் இணைப்புத் திட்டம், ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி எனப் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். டாமின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த காலத்தில், பன்னெடுங்காலமாக வருவாய் இல்லாமல் இருந்த நிறுவனத்தை அதிக லாபம் கொடுக்கும் நிறுவனமாக மாற்றினார்.

‘‘அரசு நிறுவனங்கள் என்றாலே நஷ்டத்தில்தான் இயங்கும் என்பது தவறான கருத்து. செயல்பாடு சிறப்பாக இருந்தால் தனியார் நிறுவனங்களைவிட அரசு நிறுவனங்களை லாபம் உள்ளதாக மாற்ற முடியும்’’ என்ற வள்ளலார் ஐ.ஏ.எஸ், ஆவின் நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடு கள்பற்றிய தகவல்களை நமக்கு அளித்த பேட்டியில் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

சந்தை நன்றாக இருக்கும்போதே நஷ்டத்தில் இயங்கிய ஆவின், ஊரடங்கு நேரத்தில் லாபம் ஈட்டியிருக்கிறதே... எப்படிச் சாத்தியமானது?

‘‘அரசு நிறுவனங்கள் லாபத்தில் இயங்க வேண்டும். அதுதான் மக்களுக்கு நன்மையாக இருக்கும். அந்த வகையில், ஆவின் நேரடியாகப் பொதுமக்களை நுகர்வோர்களாகப் பெற்ற நிறுவனம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கிராமப்புறப் பொருளாதாரத்தின் பெரும்பகுதி பால் உற்பத்தியைச் சார்ந்திருக்கிறது. இரண்டு மாடுகள் வைத்திருக்கும் பல குடும்பங்கள், பால் விற்பனை மூலம் வாழ்க்கை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில், தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலை நிறுத்திக்கொண்டன. இதனால் உற்பத்தி யாளர்கள், விற் பனைக்கு வழியில்லா மல் தவித்துக் கொண்டி ருந்தார்கள். உடனடி யாக அவர்களுக்கு உதவ வேண்டும் என முதலமைச்சர் உத்தர விட்டார்.

அதன் அடிப்படை யில், பால்வளத்துறை மூலம் தமிழகம் முழு வதும் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்தது ஆவின். நியாயமான விலை கொடுக்கிறோம். அதனால் வழக்கத்தைவிட, நாங்கள் செய்யும் கொள்முதல் அளவு அதிகமானது. ஊரடங்கு நேரத்திலும் பால் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நுகர்வோருக்கு சப்ளை செய்தோம். விற்பனைக்குப் போக மீதமான பாலை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றிச் சந்தைப்படுத்துகிறோம். உற்பத்தியாளர்கள், நுகர்வோர்கள் இருவருக்கும் சிக்கல் இல்லாத வகையில் நாங்கள் பணியாற்றி வருவதால், ஊரடங்கு நேரத்தில் இருதரப்பினரும் திருப்தியடைந்தனர். எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தினால் போதும், லாபம் தன்னாகவே பெருகும். அதைத்தான் ஆவின் செய்துவருகிறது. ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்போடு வேலை செய்த எங்கள் ஊழியர்களின் பங்கு மகத்தானது.’’

பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் என்னென்ன சலுகைகளைத் தருகிறீர்கள்..?

‘‘இந்திய அளவில், பால் கொள்முதலுக்கு அதிக விலை தருவதில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது ஆவின். அத்துடன் மானிய விலையில் மாட்டுத் தீவனங்கள், குறைந்த விலையில் கால்நடை மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறோம்.’’

ஊரடங்கு காலத்தில் பல சவால்களைத் தாண்டி எப்படி பிசினஸை அதிகரித்தீர்கள்?

“சென்னையில் வழக்கமான பால் விற்பனை 11.5 லட்சம் லிட்டர். ஆனால், ஊரடங்கு காலகட்டத்தி லிருந்து 13.5 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகி வருகிறது. இது பெரிய சாதனைதான்.

மேலும், ஆவின் பொருள்கள் வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கே சென்று சேரும் வகையில் இணையதளம் மூலம் ஆர்டர் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்கள் சிரமத்தைக் குறைப்பதற்காக, முதல்முறையாக ஆவினில் இந்த முறையை அறிமுகம் செய்தோம். இது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் உள்ள அரசு நிறுவனங்களின் பால் விற்பனை ஊரடங்கு நேரத்தில் உயரவில்லை. இந்திய அளவில், ஊரடங்கு நேரத்தில் விற்பனையில் சாதனைப் படைத்த அரசு நிறுவனம் ஆவின் மட்டுமே.

25 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள்மூலம் கடந்த ஆண்டு (2019) ஏப்ரல், மே மாதங்களில் நாளொன்றுக்கு 32.34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு (2020) ஏப்ரல், மே மாதம் தொடங்கி, நாளொன்றுக்கு 34.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. அது மேலும் அதிகரித்து, தற்போது நாளொன்றுக்கு 40 லட்சம் லிட்டராக உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டைவிட, சுமார் 8 லட்சம் லிட்டர் பால் அதிகமாகக் கொள்முதல் செய்கிறோம். மாநில அளவிலான பால் கொள்முதலில், சேலம் பால் கூட்டுறவு உற்பத்தி ஒன்றியம் முதலாவது இடத்திலும், திருச்சி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

பால் விற்பனையைப் பொறுத்தவரை, தமிழகத்தில் கடந்த (2019) மார்ச் மாதம் கொள்முதல் செய்த பால் 30,02,000 லிட்டர்; அதில் விற்பனை செய்தது 23,41,000 லிட்டர். கடந்த ஜூன் மாதம் கொள்முதல் செய்த பால் 39,57,000 லிட்டர்; விற்பனை செய்தது 23,48,000 லிட்டர். இந்த ஆண்டு (2020) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாளொன்றுக்கு 10.78 லட்சம் லிட்டரிலிருந்து 11.32 லட்சம் லிட்டராக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2019) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பால் பொருள்கள் விற்பனை வருவாய் ரூ.327.37 கோடி. அது, இந்த ஆண்டு (2020) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.420.55 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 28% அதிக வளர்ச்சி ஆகும். கடந்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.2.06 கோடி நஷ்டத்திலிருந்தது, இந்த வருடம் (2020) ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரூ.10.35 கோடி லாபத்துடன் செயல்படுகிறது.’’

அதிகளவு கொள்முதல் செய்யப்படும் பால் எந்த வகையில் சந்தைப்படுத்தப்படுகிறது?

“பால் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிகப்படியாகக் கொள்முதல் செய்யும் பால், நேரடி விற்பனை மற்றும் பால் உபபொருள்களாக உருமாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நாளொன்றுக்கு இந்தியா முழுவதும் மொத்த கொள்முதலில் 40 - 45% பால் பவுடராக உருமாற்றம் செய்யப்படுகிறது. தேசிய அளவில் பால் பவுடரின் இருப்பு 1,63,000 மெட்ரிக் டன் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் விற்பனை விலை சரிந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் பால் பவுடரை குறைந்த விலைக்கு விற்க முடியாது. அதனால், பால் பவுடரை இருப்பு வைத்துள்ளோம். இதனால் நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்த்திருக்கிறோம். சந்தையில் தேவை அதிகரிக்கும்போது, பாதுகாப்பாக இருப்பு வைத்துள்ள பால் பவுடர் விற்பனை செய்யப்படும். இந்திய அளவில் தமிழகத்தில்தான் பவுடர் இருப்பு குறைவாக உள்ளது.

பால் உருமாற்றம் மற்றும் பால் பொருள்கள் மொத்த விற்பனையை NCDFI e-portal மூலம் செயல்படுத்துகிறோம். ஒளிவுமறைவு இல்லாத வகையில் விற்பனை மற்றும் கொள்முதல் செய்வதால் இழப்பு தவிர்க்கப்படுகிறது.’’

இந்திய அளவில் அதிக மக்கள் விரும்பும் நிறுவனமாக ஆவின் மாறியது எப்படி?

‘‘ஆவின் நிறுவனம் வாடிக்கையாளர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பதாக, தரவு நுண்ணறிவு நிறுவனமான காந்தரின் உலக பேனல் பிரிவு (World panel division of data insights company kantar) ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்திய அளவில் பலகோடி மக்களால் தேர்வு செய்யப்படும் நுகர்வோர் பொருள்கள் (Top Chosen Brands) வரிசையில் ஆவின் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அளவில் உள்ள பால் உற்பத்தி நிறுவனங்களில் இரண்டாவது இடத்தில் ஆவின் இருக்கிறது. தரத்துக்கு நாங்கள் தரும் முக்கியத்துவம்தான் மக்கள் மனதில் நீங்கா இடம்பெறக் காரணம்.’’

ஆவின் மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகு விற்பனை நிர்வாகத்தில் பல மாற்றங்களை செய்திருக்கிறீர்களே..!

‘‘ஆவின் நிறுவனத்தில் தேவையில்லாத பணிகளில் தற்காலிகப் பணியாளர்களாகப் பலர் இருந்தனர். ஆவின் நலன் கருதி தேவையில்லாத பதவிகளை நீக்கம் செய்தேன். இதன்மூலம் அவர்களுக்கு ஊதியமாக வழங்கப்பட்டு வந்த ரூ.32 லட்சம் செலவு குறைக்கப்பட்டது. ஆவினில் அனைத்துப் பணியாளர்கள், அதிகாரிகளுக்கும் நீண்ட காலமாகக் காலதாமதமாகி வந்த பதவி உயர்வு நேர்மையான முறையில், ஒளிவுமறைவின்றி பணிமூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டதன் விளைவாக, நீண்டகாலமாகத் தேக்கநிலையில் இருந்த நிர்வாகம், விரைவான முடிவுகள் எடுத்துச் செயல்பட ஆரம்பித்தது. பால்வளத் துறையில் புதிய வளர்ச்சியாக, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மோர், 90 நாள்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால், டீக்கடைகள் பயன்பாட்டுக்காக டீமேட் பால், இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் விரும்பும் வகையில் மாம்பழச் சுவையுடன்கூடிய சாக்லேட் ஆகிய பொருள்கள் முதலமைச்சர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

கொரோனா நோய்த் தொற்று நேரத்தில் ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் ஆவின் பால் மற்றும் உபபொருள்களை விற்பனை செய்ய நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு முன் ஆவின் விநியோகஸ் தராக ரூ.10,000 டெபாசிட் கட்ட வேண்டும். அதை ரூ.1,000-ஆகக் குறைத்துள்ளேன். இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் ஆவின் முகவர்களாக மாறியிருக்கிறார்கள். ஆட்டோக் களில் ரூ.2,000 மதிப்பிலான கூலர் பெட்டி வைக்க ஏற்பாடு செய்து வருகிறோம். அதற்கு அவர்கள் டெபாசிட் கட்டிய ரூ.1,000 ரூபாய் போக, இன்னும் ரூ.500 கட்டினால் போதும். இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் ஆவின் பொருள்களை விற்பனை செய்யும் திட்டத்தைத் தயார் செய்துவருகிறோம். ஆக, பொதுமக்கள் சேவையுடன்கூடிய வணிக ரீதியான செயல்பாடுகள், முதலமைச்சரின் வழிகாட்டுதல் ஆவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது’’ என்றார்.

ஆவின் நிறுவனம் மென்மேலும் சிறக்க மனமுவந்து வாழ்த்துகளைச் சொல்வோம்!