Published:Updated:

செலவுப் பழக்கங்களை மாற்றும் ‘ககேபோ!’ - ஜப்பானிய பணவளக்கலை!

ஜப்பானிய பணவளக்கலை
பிரீமியம் ஸ்டோரி
News
ஜப்பானிய பணவளக்கலை

அதிரடித் தள்ளுபடி விற்பனைகளுக்கு மயங்காதீர்கள். ஒரு பொருளை அது விலை குறைவு என்பதற்காக மட்டும் வாங்குவது தவறு!

மீப காலத்தில் தங்கள் வாழ்வை இன்னும் முறையாக, இன்னும் நலமாக வாழ உதவும் வழிவகைகளை மக்கள் தேடித் தேடிப் பின்பற்றுகின்றனர். அந்த வகையில், ஸாரா ஹார்வி எழுதிய சில கட்டுரைகள் கவனம் ஈர்க்கின்றன.

லண்டனில் எழுத்தாளராக விளங்கிய அவர், லண்டனைவிட்டு ஜப்பானிலுள்ள டோக்கியோவுக்குச் சென்று சில காலம் வாழ்ந்தார். சிறுகச் சிறுக மாற்றங்களை மேற்கொள்ளும் இயல்பு, விழிப்புணர்வுடன் செயல்புரியும் தன்மை... இவை இரண்டும் ஜப்பானியர்களின் தினசரி வாழ்வுடன் பிணைந்து அவர்களுக்குத் தரும் மேன்மைகள் குறித்து அறிந்திருந்த அவர், மேலும் மேலும் அவை குறித்து அறிய முற்பட்டார்.

செலவுப் பழக்கங்களை மாற்றும் ‘ககேபோ!’ - ஜப்பானிய பணவளக்கலை!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தனது அதீத செலவுப் பழக்கங்களால் கவலையுற்றிருந்த ஸாரா, `ககேபோ’ என்ற ஜப்பானிய வாழ்வு முறை பற்றிக் கேள்விப்பட்டார். அதுவரை அவர் கேள்விப்பட்டிருந்த எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இருந்த ககேபோ அவரை ஈர்த்தது. `ஹனி மொடொகொ’ (Hani Motoko) என்ற பெண் எழுத்தாளர் 1904-ம் ஆண்டில் அறிமுகப்படுத்திய இந்த முறை, செலவுப் பழக்கங்களை எளிதாகக் கட்டுப்படுத்தவும், மெதுமெதுவாக செல்வச் செழிப்பை நோக்கி நம்மை உயர்த்தவும் உதவுகிறது என்று கண்டறிந்தார்.

செலவுப் பழக்கங்களை மாற்றும் ‘ககேபோ!’ - ஜப்பானிய பணவளக்கலை!

பொதுவாக, இயல்பிலேயே சிக்கனம் நிறைந்தவர்கள் பாடு கவலையில்லை; ஆனால், ‘சந்தோஷம் வந்தாலும் செலவு செய்; சோகம் வந்தாலும் செலவு செய்’ என்று வாழ்ந்து பழகியவர்களால், அந்தப் பழக்கத்தை எளிதில் மாற்ற முடியாது. இப்படி அவஸ்தைப்படுபவர்களுக்கு ககேபோ ஒரு வரப்பிரசாதம். குற்ற உணர்வோ, ‘அய்யோ, நம்மால் செலவைக் குறைக்க இயலவில்லையே...’ என்ற தவிப்போ இல்லாமல் இயல்பாக, தங்கள் வாழ்வின் தரத்தை உயர்த்த ககேபோ உதவுகிறது என்று அறிந்து அதைப் பின்பற்றத் தொடங்கினார் ஸாரா. கடந்த 116 வருடங்களாக ஜப்பானியருக்குச் செலவைக் குறைக்க உதவிவரும் ககேபோ குறித்து அவர் கூறுவதைப் பார்ப்போம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த ககேபோவைப் பின்பற்றப் பெரிய டெக்னிக்கல் வழிமுறைகளோ, சாஃப்ட்வேர் ஆப்களோ தேவையில்லை. இதற்குத் தேவை ஒரு நோட்டும் ஒரு பேனாவும்தான். இந்த ககேபோ சொல்கிற விதிமுறைப்படி, எந்தவொரு (அத்தியாவசியமற்ற) பொருளையும் வாங்கும் முன் கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டு, அதற்கான பதிலை எழுதுங்கள்.

செலவுப் பழக்கங்களை மாற்றும் ‘ககேபோ!’ - ஜப்பானிய பணவளக்கலை!
  • இந்தப் பொருள் இல்லாமல் என்னால் இருக்க முடியாதா?

  • இதை வாங்கும் பொருளாதார நிலை எனக்கு இருக்கிறதா?

  • இதைக் கண்டிப்பாக உபயோகிப்பேனா, இதை வைக்க வீட்டில் இடம் இருக்கிறதா?

  • இதுபற்றி எப்படி அறிந்தேன்? (பயன்படுத்தியவர்கள் சிபாரிசு செய்ததா அல்லது பொழுதுபோக்குக்காக விளம்பரம் பார்க்கும்போது நானாக அறிந்துகொண்டேனா?)

  • இதை வாங்க நினைக்கும் என் மனநிலை நிலையானதா, இதை வாங்கிய பிறகு எப்படி உணர்வேன்?

  • இதைவிடக் குறைவான செலவில் மனநிறைவு பெற முடியுமா?

எழுதிப் பார்க்கும் பழக்கம் பல நன்மைகளை உருவாக்குவதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இப்படி எழுதிப் பார்க்கும்போது, அந்தப் பொருள் பற்றி அதிகம் யோசிக்கிறோம். `ஏன் அதை வாங்க நினைக்கிறோம்...’ என்றும், `அதற்கு மாற்று உண்டா...’ என்றும் யோசிக்கிறோம். இதனால் பல வீண் செலவுகள் தவிர்க்கப்படுவதுடன், நம் சேமிப்பும் உயர்கிறது. ஸாரா ஹார்வி சொல்லும் இன்னும் சில ககேபோ வழிமுறைகளைப் பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1. பொருளை வாங்குவதை ஒரு நாள் தள்ளிப் போடுங்கள். அடுத்தநாளும், `அந்தப் பொருள் தேவை; அது நம் கையை மீறிய செலவல்ல’ என்று தோன்றினால் மட்டும் வாங்கலாம்.

2. அதிரடித் தள்ளுபடி விற்பனைகளுக்கு மயங்காதீர்கள். ஒரு பொருளை அது விலை குறைக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக மட்டும் வாங்குவது தவறு.

செலவுப் பழக்கங்களை மாற்றும் ‘ககேபோ!’ - ஜப்பானிய பணவளக்கலை!

3. உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகையை அடிக்கடி செக் செய்யுங்கள். இதனால், நாம் செலவு செய்யக்கூடிய தொகை இவ்வளவுதான் என்பது எப்போதும் நினைவில் இருக்கும்; அநாவசியச் செலவுகள் கட்டுக்குள் அடங்கும்.

4. கிரெடிட் கார்டைத் தேய்த்து அநாவசியமாக வாங்கும் பழக்கத்தைத் தவிர்த்து, கையில் பணம் கொடுத்து வாங்கும் முறையை மேற்கொள்ளுங்கள். அதிக பணத்தைத் தருவதைக் கண்ணெதிரே பார்க்கும்போது தோன்றும் ஒரு வலி, நம் செலவுகளைக் கட்டுப்படுத்தும். மேலும், வாரத்துக்கு இவ்வளவுதான் செலவு என்று ஒரு குறிப்பிட்ட தொகையைக் கையில் வைத்துக்கொள்வதால், பட்ஜெட் போடுவதும் எளிது; கையிலுள்ள தொகைக்கேற்ப செலவைக் கட்டுப்படுத்துவதும் எளிது.

5. உங்கள் கிரெடிட் கார்டிலேயே ‘இந்தச் செலவு இப்போ தேவைதானா?’ என்று எழுதிய சீட்டை ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். செலவு செய்ய கார்டை வெளியே எடுக்கும்போது இதுபோலக் கேட்கப்படும் கேள்விகள் நம் சிந்தனையைத் தூண்டி, சரியான முடிவுகளை எடுக்க உதவும்.

6. எப்போதெல்லாம் நாம் தேவையற்ற செலவுகளைச் செய்யத் தூண்டப்படுகிறோம் என்பதை கவனியுங்கள். இன்டர்நெட்டில் வரும் மார்கெட்டிங் மெயில் அல்லது நாம் வியக்கும் ஓர் ஆடை, அணிகலன்கள் நம்மைத் தூண்டலாம்; அப்படி நம்மைத் தூண்டும் இடங்களைத் தவிர்க்கப் பயில வேண்டும். கடைகள் இருக்கும் பகுதிகளைத் தவிர்த்துவிட்டு பார்க் போன்ற இடங்களில் வாக்கிங் செல்லலாம்.

நம் ஆசைக்காக சில செலவுகள் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால், ஒரு குறுகியகால ஆசைக்காக அதீத செலவு செய்துவிட்டுப் பிறகு வருந்துவதைவிடச் செலவு செய்யும்போதே விழிப்புணர்வுடன் இருப்பது நல்லதல்லவா... இந்த கொரோனா காலத்தில் இந்த முறையை முயன்று பார்க்கலாமே!