Published:Updated:

ஃபுட் ட்ரக்ஸ் தயாரிப்பில் அசத்தும் இளைஞர்..! - கைகொடுக்கும் பிசினஸ் வாய்ப்பு!

கோகுல்
பிரீமியம் ஸ்டோரி
கோகுல்

போக்குவரத்துக்குத் தொந்தரவு இல்லாத, மக்கள் கூடும் இடங்கள்ல எல்லாம் ஃபுட் ட்ரக்கை நிறுத்தி வியாபாரம் பண்ணலாம்!

ஃபுட் ட்ரக்ஸ் தயாரிப்பில் அசத்தும் இளைஞர்..! - கைகொடுக்கும் பிசினஸ் வாய்ப்பு!

போக்குவரத்துக்குத் தொந்தரவு இல்லாத, மக்கள் கூடும் இடங்கள்ல எல்லாம் ஃபுட் ட்ரக்கை நிறுத்தி வியாபாரம் பண்ணலாம்!

Published:Updated:
கோகுல்
பிரீமியம் ஸ்டோரி
கோகுல்
மேலை நாடுகளில் `ஃபுட் ட்ரக்’ (Food Truck) எனப்படும் நடமாடும் உணவுக் கடைகள் வெகு பிரபலம். அங்கு ஹோட்டலில் உட்கார்ந்து ஆர்டர் செய்து சாப்பிடும் பொறுமை பலருக்கும் இல்லை; டை கட்டியபடி, சாலையோரமாக நிறுத்தப்பட்டிருக்கும் ஃபுட் ட்ரக்கில் ஒரு சாண்ட்விச்சையோ, பர்கரையோ வாங்கிச் சாப்பிட்டு விட்டு, தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்கள்.

நம் நாட்டில் `ஃபாஸ்ட் ஃபுட்டே ஃபாஸ்டாகக் கிடைக்க வேண்டும்’ என மக்கள் நினைக்கும் காலம் இது. சாப்பிடுவதற்காக ஹோட்டலைத் தேடி அலையாமல், ஆங்காங்கே நிறுத்தப் பட்டிருக்கும் ஃபுட் ட்ரக்குகளில் விற்கப்படும் உணவுகளை வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, வேலைக்கு ஓடும் பழக்கம் தற்போது தொடங்கியிருக்கிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை எனப் பல பெரிய நகரங்களில் இப்படிப்பட்ட ஃபுட் ட்ரக்குகள் கடைவிரிக்கத் தொடங்கியுள்ளன. வெளிநாடுகளிலிருக்கும் ஃபுட் ட்ரக்குகளைப்போலவே உணவுகளைத் தரமானவையாகத் தயாரித்துக் கொடுக்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த கோகுல்.

கோகுல்
கோகுல்

கோகுலுக்கு வயது 31. ‘அஸிமுத் பிசினஸ் ஆன் வீல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Azimuth Business On Wheels Pvt. Ltd) என்ற பெயரில் ஃபுட் ட்ரக்குகளைத் தயார் செய்து தருகிறார். இப்போது பிரபலமடைய ஆரம்பித்திருக்கும் இந்த ஃபுட் ட்ரக் பிசினஸ், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பானதாக இருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் கோகுலை நேரில் சந்தித்துப் பேசினோம். சாதிக்கத் துடிக்கும் எனர்ஜியுடன் பேச ஆரம்பித்தார் அவர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிச்சுட்டு, ஹைதராபாத்துல இருக்குற ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில ஆறு வருஷம் வேலை பார்த்தேன். அந்த நேரத்துல, ஏதாவது ஒரு பிசினஸ் பண்ணலாம்னு முடிவெடுத்தேன். எனக்கு சாப்பாடுன்னா ரொம்பப் பிடிக்கும். ஊர் ஊராப் போய் ரோட்டுக்கடை முதற்கொண்டு பெரிய ஹோட்டல்கள் வரை ரசித்து, ருசித்துச் சாப்பிடுவேன். வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அங்கல்லாம் ஃபுட் ட்ரக்குகளில் கூடும் மக்கள் கூட்டத்தைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கும். நம்ம ஊர்லயும் அதே மாதிரி ஃபுட் ட்ரக் மூலமா உணவு விற்பனை செஞ்சா நல்லா இருக்குமேனு நினைச்சேன்.

ஆனா, அதுல ஒரு பிரச்னை. வெளிநாடுகள்ல இருக்கும் ஃபுட் ட்ரக்குகள் மாதிரி இந்தியாவில் செய்துதர நிறைய பேர் இல்லை. தமிழகம் உட்பட தென் மாநிலங்களில்கூட பஸ், லாரினு உருவாக்கும் பாடி பில்டர்கள் நிறைய பேர் இருக்குறாங்களே தவிர, ஃபுட் ட்ரக்குகளுக்குனு பிரத்யேகத் தயாரிப்பாளர் யாருமே இல்லைங்கிறதை பல நகரங்கள்ல விசாரிச்சுத் தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, இதைக் கையிலெடுத்தா என்னனு 2018-ம் வருஷம் இந்த பிசினஸ்ல இறங்கினேன்” என்றவர், மேற்கொண்டு பேசத் தொடங்கினார்.

“சம்பளம், நடைமுறைச் செலவுகளைத் தாண்டி இன்னிக்கு ஒரு சிறிய உணவகத்தை நடத்துறதுல மிகப்பெரிய சுமையாக இருக்குறது வாடகைதான். குறைவான வருமானத்துல அதிக வாடகை தர வேண்டியிருக்குறதால, பலரும் ரொம்ப சிரமப்படுறாங்க. குறைந்த வேலையாட்கள், குறைவான செலவுகள் இருந்தால்தான் எந்தத் தொழிலாக இருந்தாலும் லாபகரமாகவும் வெற்றிகரமாகவும் நடத்த முடியும். இந்த ஃபுட் ட்ரக் பிசினஸ்ல இதுதான் லாபம் தரும் சிறப்பான அம்சமாக இருக்கு. குறைந்த ஆட்களுடன், பெரும் செலவில்லாமல் சாலையோரமாக நிறுத்தி இந்த ஃபுட் ட்ரக் பிசினஸ்ல லாபம் பார்க்கலாம்.

இது நடமாடும் வாகனம்கிறதால, பல செளகர்யங்கள் இதுல இருக்கு. உதாரணமா, ஒரு ஏரியாவுல வியாபாரம் ஆகலைன்னா, வேறொரு ஏரியாவுக்குப் போய் வியாபாரம் செய்யலாம். போக்குவரத்துக்குத் தொந்தரவு இல்லாத, மக்கள் கூடும் இடங்கள்ல எல்லாம் ஃபுட் ட்ரக்கை நிறுத்தி வியாபாரம் பண்ணலாம். இதனால நஷ்டம் அடைவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு” என்றவர், தான் தயாரிக்கும் ஃபுட் ட்ரக்கின் சிறப்பம்சங்களையும் எடுத்துச் சொன்னார்.

கோகுல்
கோகுல்

“துருப்பிடிக்காத, தரமான எஸ்.எஸ் மெட்டீரியல் மற்றும் எளிதில் தீப்பிடிக்காத பாதுகாப்பு வசதிகளுடன் ஃபுட் ட்ரக்குகளைத் தயார் செய்கிறோம். ட்ரக்கினுள் அடுப்பு, ஃபிரிட்ஜ், வாட்டர் டேங்க், ஜெனரேட்டர் வசதி எனத் தேவைக்கேற்ற வசதி மற்றும் பட்ஜெட்டுக்கேற்ப ஃபுட் ட்ரக்குகளைத் தயார் செய்து தருகிறோம். ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சம் வரை ஃபுட் ட்ரக்குகளைத் தயார் செய்கிறோம். இதுவரை தமிழ்நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட ட்ரக்குகளை டிஸைன் செய்து தந்திருக்கிறோம். நொய்டாவிலுள்ள எங்களுடைய யூனிட்டிலிருந்து சுமார் 200 ட்ரக்குகளைத் தயார் செய்து தந்திருக்கிறோம்.

ஃபுட் ட்ரக்
ஃபுட் ட்ரக்

ஒரு ரெஸ்டாரன்டுக்குச் சென்று ஆர்டர் செய்துவிட்டு பொறுமையாக உட்கார்ந்து சாப்பிட இன்றைய ஃபாஸ்ட் புட் உலகில் பலரும் தயாராக இல்லை. அதுமட்டுமல்லாமல், கொரோனா சூழலில் மக்கள் பலரும் ரெஸ்டாரன்டு்களில் உட்கார்ந்து சாப்பிடத் தயங்குகிறார்கள். எனவே, இந்த ஃபுட் ட்ரக்குகள் இனி சிறிய ஊர்களில் வரத் தொடங்கும்’’ என்று சொல்லும் கோகுல், ஃபுட் ட்ரக்ஸ் தவிர, நடமாடும் மளிகைக் கடைகள், நடமாடும் காய்கறிக் கடைகள், மொபைல் சலூன், நடமாடும் பெட் கிளீனிங், செல்போன் போன்ற பொருள்களை டிஸ்ப்ளே செய்யும் ட்ரக்ஸ் போன்றவற்றைச் செய்து தருகிறார். பெங்களூருவில் ஒரு பெரிய சலூன் நிறுவனம் ஒன்று, குழந்தைகளுக்கான பிரத்யேக மொபைல் சலூன் ஒன்றைத் தயார் செய்து தரச் சொல்லியிருக்கிறதாம். அதேபோல, வி.ஐ.பி-களின் வீடுகளுக்கே சென்று உடற்பயிற்சியளிக்கும் வகையில் ‘மொபைல் ஜிம்’ வாகனம் ஒன்றையும் உருவாக்கப் போகிறார்களாம். ஒரு வாகனத்தின் மூலம் எதையெல்லாம் எடுத்துச் சென்று மக்களிடம் விற்பனை செய்ய முடியுமோ, அதையெல்லாம் சாத்தியப்படுத்துவதற்கான முயற்சியைச் செய்துவருகிறார் கோகுல். புதுமை படைக்கும் இளைஞர்தான் இவர்!