Published:Updated:

பணம் கொட்டும் பனைமரத் தொழில்..! - கலக்கும் தூத்துக்குடி இளைஞர்!

ஆண்டோ பிரைட்டன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்டோ பிரைட்டன்

“வீட்டுக்கே வந்து கருப்பட்டி வாங்கிட்டுப் போறவங்க கலைப் பொருள்களையும் வாங்கிகிட்டுப் போக ஆரம்பிச்சாங்க!”

ண்டில் ஆறு மாதம் மட்டுமே வேலை இருப்பதால்தான் பனைத்தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே செல்கிறது. ஆனால், பனைத் தொழிலில் உற்பத்தியை மட்டுமே நம்பியிருக் காமால், பனையோலைகளில் கலைப்பொருள்களை சுயமாகவே செய்து ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும் தொழிலாக மாற்றி லாபகரமாகச் செய்து வருகிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்டோ பிரைட்டன்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள அடைக்கலாபுரத்தில்தான் இவரது பனைத்தோட்டம் உள்ளது. பனையோலைகளில் கீ-செயின்கள் செய்துகொண்டிருந்தவரைச் சந்தித்துப் பேசினோம்.

பணம் கொட்டும் பனைமரத் தொழில்..! - கலக்கும் தூத்துக்குடி இளைஞர்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

“பரம்பரை பரம்பரையா இந்தப் பனைத்தொழிலை செய்துட்டு வர்றோம். ஸ்கூல்ல படிக்கும்போதே ஃப்ரீ டைம்லயும், லீவு நாள்கள்லயும் பனையிலிருந்து இறக்கித்தரும் பதனீரைக் குடங்களில் சேகரிப்பது, கருப்பட்டி காய்ச்சுவது, கருப்பட்டிகளைச் சிப்பங்களில் கட்டுவது என அப்பா சொல்ற வேலைகளைச் செய்வேன்.

பொதுவா, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, ஆகஸ்ட் மாசம் மட்டும்தான் பனையிலிருந்து பதனீர் இறக்கி கருப்பட்டி காய்ச்ச முடியும். மீதமுள்ள ஆறு மாசம் மரம் வெட்டுதல், கட்டட வேலை, மூட்டை தூக்குதல்னு ஏதாவது மாற்று வேலைகளைச் செய்வாங்க.இதனாலயே எங்க அப்பா, ‘இந்தப் பொழப்பு என்னோட போகட்டும்பா. நீயாவது படிச்சு நல்ல வேலைக்குப் போய்யா’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

12-ம் வகுப்புக்குப் பிறகு, காஞ்சிபுரத்துல உள்ள இன்ஜினீயரிங்க் காலேஜ்ல பி.டெக் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படிச்சேன். அதுக்குப் பிறகு, சென்னையில ரெண்டு வருஷம் பிரைவேட் பேங்குகளில் வேலை செஞ்சேன். அடுத்தடுத்து வேறவேற கம்பெனிகளில் வேலைகளுக்கும் அப்ளை செஞ்சு இன்டர்வியூக்கெல்லாம் போனேன். அப்படி ஒரு தடவை இன்டர்வியூக்கு போன போதுதான், எங்கூட காலேஜ்ல படிச்ச ஒரு பையனும் வந்திருந்தான். ‘‘ஏன்டா, நாங்கதான் வேலை வேலைன்னு அலையுறோம். உனக்கு அட்சயப் பாத்திரம் மாதிரி அள்ளிக் கொடுக் கிறதுக்கு பனைமரமும் பூர்வீக பனைத்தொழிலும் இருக்கு. அந்தத் தொழிலை நல்லா செஞ்சு, அப்பாவுக்கு ஓய்வு கொடுக்குறதை விட்டுட்டு, நீயும் எங்கக்கூட வந்து வரிசையில உட்கார்ந்திருக்கியே? நீ நினைச்சா உன் ஊருல 10 பேருக்கு வேலை கொடுக்க முடியுமே”ன்னு சொன்னான். அதுவரைக்கும் பனைத் தொழிலைப் பத்தி எந்தச் சிந்தனையும் இல்லாத எனக்கு அந்தப் பையன் சொன்ன வரிகள் என்னை யோசிக்க வச்சுது.

ஆண்டோ பிரைட்டன்
ஆண்டோ பிரைட்டன்

ஏற்கெனவே விருப்பமில்லாம பார்த்துக்கிட்டிருந்த அந்த வேலையையும் விட்டுட்டு ஊருக்கே வந்தேன். ‘என்னப்பா திடீர்னு வந்துருக்க... லீவு எடுத்துருக்கியா?’ன்னு அப்பா கேட்டாரு. ‘‘இனிமேல் சென்னைக்கு போகலப்பா. இங்க இருந்து பனைத்தொழிலை கவனிச்சுக்கலாம்னு இருக்கேன்’’ன்னு சொன்னேன். ‘‘ஏன்டா, ஒனக்கு புத்திகித்தி கெட்டுப்போச்சா... வருஷத்துல ஆறு மாசம் வேலை இல்லாம, என்ன செய்யுறதுன்னு தெரியாம முழிச்சுக்கிட்டிருக்கோம். இதுல நீ என்னப்பா செய்யப்போற?’ன்னு கேட்டாரு. இந்தக் கேள்விக்கு என்கிட்ட பதில் எதுவும் இல்லை. ஆனா, நான் என்னோட முடிவுல உறுதியா இருந்தேன்.

பனையேற வர்றவங்க மூலமா பனையேறக் கத்துக்கிட்டேன். அடுத்த சில மாதங்கள்ல நானே பனையேறி பாளை சீவி, கலசம் கட்டி, பதனீர் இறக்கி கருப்பட்டி காய்ச்ச ஆரம்பிச்சேன். இதைப் பார்த்துட்டு என் அப்பாவே ரொம்ப ஆச்சர்யப்பட்டாரு. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மூலமா விளம்பரப்படுத்தி தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் அனுப்பி விற்பனையை அதிகப்படுத்தினேன். எந்தக் கலப்படமும் இல்லாத கருப்பட்டிங்கிறதுனால விற்பனையும் கணிசமா அதிகரிச்சுது.

அப்பா சொன்ன மாதிரியே, பனை சீஸனுக்குப் பிறகு, என்ன செய்யப்போறோம்னு எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துக்கிட்டே இருந்துச்சு. ஸ்கூல்ல படிக்கும்போதே பனையோலையில பெட்டி முடையத் தெரியும். கருப்பட்டி காய்ச்சுற வேலையோடவே, சும்மா இருக்குற நேரத்துல பாட்டி, அம்மாவுடன் சேர்ந்து பெட்டிகளை முடையுவேன். ஊருக்கு வந்த பிறகும் பெட்டி முடைஞ்சேன். அந்தப் பெட்டிகளில்தான் கருப்பட்டி, கல்கண்டு, சில்லுக்கருப்பட்டியை அடைத்து விற்பனைக்கு அனுப்புவோம். ‘சீஸன் முடிஞ்சதும் மரத்து மட்டைகளைக் கழிக்கணும். பெட்டி முடையுறதுக்கும் விறகாக எரிப்பதற்கும் தவிர, வேற ஒண்ணுத் துக்கும் உபயோகப்படாது’ன்னு அப்பா சொன்னாங்க. அந்த நேரத்துலதான் சாதாரண பெட்டி முடையுறதைத் தவிர பனையோலை களில் கைவினைப் பொருள்கள் செய்து விற்கலாமேன்னு எனக்கு ஒரு புது யோசனை தோணுச்சு.

இது சம்பந்தமா எங்க பயிற்சி கொடுக்குறாங்கன்னு விசாரிச்சேன். சென்னை, மாதவரத்துல உள்ள பனைபொருள்கள் வாரியத்தில், ‘palmyra product technology’ நாலு மாசப் பயிற்சியாவே கொடுக்கிறதைக் கேள்விப்பட்டுப் போனேன். உடனே, பயிற்சியில சேர்ந்துக்க சொல்லிட்டாங்க. கருப்பட்டி காய்ச்சுதல் முதல் கைவினைப் பொருள்கள் தயாரிப்பது வரை பயிற்சி அளித்தார்கள். பனையோலை களிலிருந்து கீசெயின், பர்ஸ், பல வடிவத் தட்டுகள், கூடைகள், பாக்ஸ், பனைமட்டை யிலிருந்து தும்பு தயாரித்தல் எனப் பலவித கைவினைக் கலைப்பொருள்கள் செய்வது குறித்தும் சொல்லிக் கொடுத்தாங்க.

எனக்கு ஏற்கெனவே பெட்டி முடையத் தெரியும் என்பதால், அந்தப் பயிற்சியில் சொல்லிக் கொடுத்தவற்றை எளிதாகப் புரிந்து கொள்ளவும் செய்துபார்க்கவும் முடிந்தது. தன்னம்பிக்கையோட ஊருக்குத் திரும்பி வந்தேன். என் பனந்தோட்டத்துலயே பச்சையோலைகளை வெட்டிக் காயவச்சு, அவற்றைக் கிழித்து சாயமேற்றி ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பொருளா செய்ய ஆரம்பிச்சேன். வீட்டின் முன்அறையில் அவற்றைக் காட்சிக்கு வைத்தேன். வீட்டுக்கே வந்து கருப்பட்டி வாங்கிட்டுப் போறவங்க கலைப்பொருள்களையும் வாங்கிகிட்டுப் போக ஆரம்பிச்சாங்க.

“சீஸன்ல கருப்பட்டி தயாரிப்பு மூலம் செலவு போக மாதம் ரூ.30,000 - ரூ.35,000 வரைக்கும் லாபம் கிடைச்சுது. இது சராசரிதான். உற்பத்தி குறிப்பிட்ட நாள்கள் அதிகமா இருக்கும்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கருப்பட்டி உற்பத்தியை முதன்மையா வச்சுக்கிட்டு கைவினைப்பொருள் தயாரிப்பை ஓய்வு நேரத்துல செய்துகிட்டு வந்தேன். போன மாசத்தோட சீஸன் முடிஞ்சதால, இப்போ கைவினைப் பொருள் தயாரிப்பில பிஸியாயிட்டேன்.

பணம் கொட்டும் பனைமரத் தொழில்..! - கலக்கும் தூத்துக்குடி இளைஞர்!

என்னோட பனந்தோட்டத்துல மொத்தம் 253 பனைமரங்கள் இருக்கு. இதுல 150 மரங்கள் பலன் தர்ற நிலையில இருக்கு. சீஸன் காலத்துல கருப்பட்டி தயாரிப்பு மூலம் செலவு போக மாதம் ரூ.30,000 - ரூ.35,000 வரைக்கும் லாபமாக் கிடைச்சுது. இது சராசரிதான். உற்பத்தி குறிப்பிட்ட நாள்கள் அதிகமா இருக்கும். சீஸன் காலத்துல ஓய்வு நேரத்துல கைவினைப் பொருள்கள் விற்பனை மூலம் மாதம் ரூ.10,000 - ரூ.15,000 வரை வருமானம் கிடைச்சுது.இப்போ இதை நிறைய தயாரிக்கிறதால, வருமானம் இரட்டிப்பாகி, சராசரியா ரூ,30,000 வரை வருமானம் கிடைக்கும்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

பரம்பரைத் தொழிலை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் ஆண்டோ, தனது தொழிலில் பல புதிய மாற்றங்களைக் கொண்டுவந்ததுடன், இந்தத் தொழிலை இன்னும் பல உயரங்களுக்குக் கொண்டு செல்வார் என்பதில் சந்தேகமில்லை!